கஜா புயல் நிவாரண பணிகளை பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை  கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ ஆகியோர்  இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனை 34 நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், குடிநீர் ஆகியவற்றை 5 முகாம்களுக்கு ஒரு வாகனம் […]

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நகர செயலாளர் நாகராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர பாண்டியன், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் மாரிமுத்துப்பாண்டியன், கணபதி பாண்டியன், மாவட்ட அமைப்பு […]

தீப்பெட்டி பொருட்களுடன் எரிந்த லாரி…வீடியோ ..

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் சுகுமார் (32). லாரி டிரைவரான இவர் இன்று (19/11/2018) கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் தீப்பெட்டி ஆலையில் இருந்து தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிக்கொண்டு, ராஜஸ்தானுக்கு சென்று கொண்டு இருந்தார். லாரி காலாங்கரைப்பட்டியை கடந்து வந்த போது, தீப்பெட்டி பண்டல்கள் மீது மரக்கிளைகள் உரசி உள்ளன. இதில் தீப்பெட்டி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தது. இதை கவனிக்காமல் சுகுமார் லாரியை ஓட்டிச் சென்றார். இதனால் சாலையில் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து கீழே […]

கடலாடி அருகே கார் மோதி முதியவர் பலி..

கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று மதியம்12.30 மணி அளவில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து வாலிநோக்கம் காட்டு பள்ளிவாசல் வந்த வாகனம் ( பதிவு எண்: KL- 55 V.3653) மோதியதில் மேலச்செல்வனூர் ஆறுமுகம் 75, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்தி:- முருகன், […]

அதிரையில் இராமநாதபுர செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் ..

தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம் பட்டினத்தில் கஜ புயல் பாதித்தோருக்கு நிவாரண பொருட்களுடன் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள் சென்றுள்ளனர். இராமநாதபுரம் ரெட் கிராஸ் குழுவினர் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் ஏற்கனவே சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்சமயம்  இராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ரெட் கிராஸ் குழுவினர் கரம்பாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

பத்திரிக்கை ஒளிப்பதிவாளர் மறைவுக்கு உதவி கரம் நீட்டிய தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்(WJUT) – மனித நேயம்..

மூத்த ஒளிப்பதிவாளர் திரு.சாம்ராஜ் மறைவையொட்டி அவரின் ஈமச்சடங்கு செலவிற்காக, (WJUT) தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக, மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ்  நிதியுதவி வழங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சாம்ராஜ் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார், இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இயற்கை எய்தினார். மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த அவரது ஈமச்சடங்கு செலவிற்காக சிரமப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து, (WJUT) தமிழ் நாடு […]

மரபு நடை நிகழ்ச்சியில் நரிப்பையூர் பழங்கால கல்வெட்டு பற்றிய விளக்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதியதாக கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் இக்கோயிலுக்கு தானம் வழங்கி கையொப்பமிட்டுள்ள பலபேரில் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் உள்ளதை அறியமுடிகிறது என மரபு நடை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ள மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. பத்தாம் மரபுநடை நிகழ்வு நரிப்பையூர் மற்றும் வேம்பாரில் நடந்தது. மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ் சங்கர் […]

வேலூர் தனியார் மருத்துவமனையில் 21ம் ஆண்டு இலவச அறுவை சிகிச்சை முகாம்..

வேலூர் இந்திரா நர்சிங் ஹோமில் 21-ம் ஆண்டு இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் டாக்டர் சங்கர் மூலம் பொது அறுவை சிகிச்சைக்கும்,  டாக்டர் லதா கர்ப்பபை கோளாறுகளுக்கும்,  டாக்டர் ரமணக்குமார் எலும்பு முறிவு மற்றும் தண்டுவடம் பிரச்னைகளுக்கும்,  டாக்டர் முத்துக்குமரன் இதய நோயாளிகளுக்கும்,  டாக்டர் வேலவன் கதீர் லீச்சு மற்றும் புற்றுநோய்களுக்கு ஆலோசனை பரிசோதனை செய்தனர். இம்முகாமில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டன். இதில் அரசு காப்பீடு திட்டத்தில் […]

மதுரை மாநகராட்சி ஊழியர்களின் அவல நிலை …வீடியோ..

மதுரை மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கை உறைகளும் இல்லாமல் பணி செய்வதால் துப்புரவு தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுக்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இவர்கள் பாதுகாப்பில்லாமல் அரசு மருத்துவமனை போன்ற பகுதிகளில் பணி புரிவதால், மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் கழிவு பொருட்களால் கையில் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

கீழக்கரையில் நாளை (19/11/2018) திங்கள் கிழமை மின் தடை..

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் நாளை (19/11/2018) – திங்கள்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..

இன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது. அதன் முதல் அமர்வில் வென் வைட், ஷஃபீக் மோர்டன், ஜோனாதன் ஸ்டீல், ஷஃபி அல்-கப்ரா ஆகிய நால்வரும் பேசினார்கள். உலகம் முழுவதும் இயங்கும் வரும் பெரு ஊடங்கள் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி அனுகிவருகிறார்கள் என்பதி குறித்து பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வி-பதில் அரங்கு […]

காட்பாடி அரசு பள்ளியில் விலையில மிதி வண்டி வழங்கும் விழா..

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. அரக்கோணம் எம்.பி, ஹரி கலந்து கொண்டு 630 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு ஒன்றிய செயலாளர் சுபாஷ் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் தலைமை ஆசிரியை சரளா, தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்:-  கே, எம்.வாரியார்,வேலூர்

கஜா புயலில் நிலை குலைந்த அதிராம்பட்டிணம்… விரைந்து உதவி கரம் நீட்டுவீர்.. வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு …

கடந்த இரண்டு நாட்களாக கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுபற பகுதியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளது. இதில் ஓரவஞ்சனையாக பெரிய ஊடகங்கள் வேதாரண்யம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது வேறு எந்த பகுதியும் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புயலால் அதிராம்பட்டிணம் நிலை குலைந்து போயிருப்பதை ஊடங்கங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.  பல வீடுகளும், தென்னை தோப்புகளும், சாலைகளும், விலை மதிப்புமிக்க […]

பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்..

காலம் காலமாக பாலஸ்தீன மக்கள் நசுக்கப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.  அதை மறைமுகமாக பல மேற்கத்திய நாடுகள் ஆதரித்த வண்ணம் அம்மக்களுக்கு துரோகம் இழைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.  அதே போல் அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியும், தீர்வுகளையும், ஆதரவுகளும் பல மத்திய கிழக்கு நாடுகள் செய்த வண்ணத்தின் உள்ளனர் என்றால் மிகையாகாது.  ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாலஸ்தீன மக்களின் துயர்களை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளிச்சம் போட்டு […]

கார் மோதி ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் பலி..

பொள்ளாச்சி கோவை சாலை தாமரைக் குளம் பகுதியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் பலி. பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பாபு (20) பாரதி (20) ராஜு (19) மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு சென்று விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரின் உடலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

கல்விக் கண் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா.. வீடியோ..

தேனி பெரியகுளம், தென்கரை கிளை நூலகத்தில் கல்விக் கண் அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு, தெய்வத் திரு.தனலட்சுமி ராமச்சந்திரன் நினைவாக, அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணக்கர்களிடம் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு கல்விக் கண் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செயலர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் ஆலிம் […]

புதிய ஜாவா பைக் 300 – தகவல்கள் சில…

மஹிந்திரா மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஜாவா 300 பைக் நவம்பர் 15-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்போது எந்த போர்வையும் இல்லாமல் பைக்கின் ஸ்பை படம் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டேங்கில் க்ரோம் மற்றும் மரூன் நிறத்தில் டூயல் டோன் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபிளாட்டான சீட்டும், மட்கார்டுகளில் ஜாவா 250 போல பின் ஸ்ட்ரைப் டிசைனும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்போக் வீல் மற்றும் MRF டயர்கள் உள்ளன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் […]

20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக., திமுக டெபாசிட் இழக்கும்… தங்க தமிழ் செல்வன் பேட்டி – வீடியோ ..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட  அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தன. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த புதிய தலைமை டிடிவி தினகரன் என்பதை நாங்கள் நிருபிப்போம். ஐ.பெரியசாமியின் பகல் கனவு பலிக்காது. 20 தொகுதி இடைத்தேர்தலில் […]

டில்லியில் குழந்தைகள் தின விழாவில் இராமநாதபுரம் மாணவர்கள் கட்டைக் கால் சிலம்பாட்டம்..

டில்லியில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் தேசிய ஒருமைப்பாடு பாரம்பரிய கலை விழா நடந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கிரியேட்டிவ் இந்தியா என்னும் தலைப்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி பால பவன் திறந்த வெளி அரங்கில் நடந்தது. இதில் இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் தங்கள் மாவட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தினர். இராமநாதபுரம் […]

கஜா புயல் எதிரொலி இராமேஸ்வரம் ரயில் சேவைகள் நிறுத்தம்..

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் -திருச்சி பயணிகள் ரயில் 15.11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 56723/56724, 56721/56722, 56725/56726 மதுரை -ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 15. 11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22661 சென்னை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!