இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர், வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா எம்.பி., தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கே.சி.ஆனிமுத்து, ராஜ்சபா முன்னாள் எம்பி., எம் எஸ். நிறைகுளத்தான் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 2017_2018, 2018-2019 நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இது […]
Category: தேசிய செய்திகள்
இராமேஸ்வரத்தில் தேசிய செய்தியாளர் தின விழா..
இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் தேசிய செய்தியாளர் தின விழா நடந்தது. இராமேஸ்வரத்தில் இன்று நடந்த விழாவிற்கு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அய்யா.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் இரா.மோகன் வரவேற்றார். மேலும் புகைப்பட போட்டியில் மீனவர் உழைப்பை தத்ரூபமாக படம் பிடித்த ஜூ வி போட்டோகிராபர் உ.பாண்டி முதலிடம் பிடித்தார். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்து ஆழக்குழியில் தண்ணீர் தேடும் பெண்களின் நிலையை படம் பிடித்த இராமேஸ்வரம் தினகரன் போட்டோ கிராபர் […]
கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி..
கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் புதிய பென்ஷன் பாலிசி குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் புதிய பென்ஷன் பாலிசியான “ஜீவன் சாந்தி” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழக கிளை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. ஆயுள் காப்பீட்டு கழக அலுவலக வளாகத்தில் பேரணியை கிளை மேலாளர் டி.ஒளிமுத்து தொடங்கி வைத்தார். பேரணி புதுரோடு, எட்டயபுரம் ரோடு, ஏகேஎஸ் […]
“உங்களது ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது”-நடிகர் ரஜினிக்கு பால் முகவர்கள் சங்கம் பகிரங்க கடிதம்…
உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”. ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்ததான முகாம், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட தனது ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு “கபாலி” திரைப்படம் வெளியான போதும், 2018ம் ஆண்டு […]
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் குழப்பம் அடைதுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இந்த விதிமுறை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
காட்பாடி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் ..
காட்பாடி ரயில் நிலையத்தில் 250 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பறக்கும் படை தாசில்தார் பழனி தலைமையில் இன்று பாண்டியிலிருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணிகள் பெட்டியில் சோதனை செய்தபோது சிறிய மூட்டைகளாக இருந்த 250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இனவ ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. வேலூர் செய்தியாளர்:- கே, எம்.வாரியார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..வீடியோ..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் போது அவர் கூறியதாவது, எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் யார் வேணாலும் வரட்டும் அவங்களுக்குள்ள வாக்குவங்கி பலமாக உள்ளது. ஆனால் வரப்போகிற தேர்தல் தமிழகம் பார்க்காத தேர்தலாக புது தேர்தலாக இருக்கும். ஏனென்றால் இரண்டு ஆளுமைமிக்க தலைவர்கள் இங்கு கிடையாது வெற்றிடம் இருக்கு என்று சொல்கிறார்கள் தலைவர்களுக்கு தான் வெற்றிடம் […]
கீழக்கரையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வாருகால் மூடிகள்..
கீழக்கரை குத்பா பள்ளியில் இருந்து (குயின் டிராவல்ஸ் அருகே) நடுத்தெரு போகும் பாதையில் வாருகால் மூடிகள் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் உள்ளது. இது பிரதான சாலையாக இருப்பதால், சமீபத்தில் யாத்ரிகர் சிலரும் இதை கவனிக்காது வந்த ஒரு மீன் வியாபாரி ஒருவருர் மீன்கள் தராசு மற்றும் வாளியுடன் விழுந்து விட்டார். அதே போல் சமீபத்தில் பெண்மணி ஒருவரும் இதில் விழுந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலையானது. கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனே அவசர பிரச்சினையாக கையில் எடுத்து […]
கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிகுலேசன் பள்ளியின் சார்பில் கஜா புயல் நிவாரண உதவி…
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடையநல்லூர், விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் ரூபாய் 20 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திரட்டப்பட்டு நிவாரண உதவிக்களத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிடம் வழங்கினர். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் தாக்கத்தால் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதரமே அடியோடு பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் […]
இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சக்தி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சக்தி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது . கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 24.11.18மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கியது. அன்றைய தினம் விநாயகர் பூஜையை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 25.11.18 காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது . கும்பாபிஷேக விழா காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. வேதவிற்பன்னர்கள் புனித […]
பால் அருந்தாத டாக்டர் வெர்கீஸ் குரியன் – வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)..நவம்பர்,26.. தேசிய பால் தினம்.
இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே. இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை மெய்ப்படுத்தும் திட்ட வரைவுகளும், அதை செயல்படுத்த தேவையான கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் உள்ளன என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறிலிருந்து புரிந்து கொள்ள முடியும். பிறப்பும், இளமைக் கால கல்வியும்:- டாக்டர் குரியன் அவர்கள் 1921ஆம் ஆண்டு நவம்பர்26ஆம் நாளன்று கேரள மாநிலத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தார். […]
இராமேஸ்வரம் கோயில் ரத வீதிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்..
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார். அப்போது கோயில் நான்கு ரத வீதிகளில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ஆட்சியர் ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றிக் கொள்ள அதன் உரிமையாளர்களுக்கு ஆட்சியர் கால அவகாசம் கொடுத்தார். ஆனால் கடைகளை அப்புறப்படுத்தாமல் அதன் உரிமையாளர்கள் போக்கு காட்டினர். அக்கடைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் […]
கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்கிய பள்ளி மாணவர்கள்…
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் துவக்கப்பள்ளியில் 69 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை கடந்த வாரம் புரட்டி போட்ட கஜ புயல் தாக்கம் குறித்து அச்சு மற்றும் மின் ஊட கங்களில் வெளியான செய்திகள், காணொளி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான புயல் பாதிப்பு நிகழ்வுகளை இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் காண்பித்து நிவாரணம் வழங்க வேண்டும் என […]
175 கிராமங்களுக்கு தடையின்றி நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – தமிழக அமைச்சர்கள் தகவல்… புகைப்படங்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி அதனை சுற்றியுள்ள 175 கிராமங்களுக்கு தடையின்றி நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ ஆகியோர் தகவல். அண்மையில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 175 கிராமங்களில் 10 சுனாமி […]
கோவில்பட்டியில் 32 தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம்…
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் 32வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா நடந்தது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புனித ஓம் கான்வென்ட் பள்ளி தாளாளர் வி.எம். லட்சுமணப் பெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.வேலுச்சாமி கண்காட்சியை திறந்து வைத்தார். இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநில செயலாளர் க. தமிழரசன், இலக்கிய உலா ரவீந்திரன், வழக்கறிஞர் டி.முத்துக்குமார், மகிழ்வோர் […]
கோவில்பட்டியில் அனைத்து துறை ஓய்வூதியம் சங்க கூட்டம்..
கோவில்பட்டியில் டிச.27-ம் தேதி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எம்.ஜெயசந்திரன் பேசினார். மாவட்ட தலைவர் சி.கருணாகரன், மாவட்ட செயலாளர் எல்.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திரவியம், சாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை […]
9 பேரை பலாத்காரம் செய்து கொலை!..
ஹரியானாவின் குருகிராம் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுனில் குமார் என்ற குற்றவாளி விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 20 வயதேயான சுனில் இதுவரை 3 வயதில் இருந்து 7 வயதுடைய சிறுமிகள் 9 பேரை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். சிறுமிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக முதலில் அவர்களது காலை உடைத்து விடுவதாக குற்றவாளி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.சா.அலாவுதீன்.,மூத்த நிருபர் கீழை […]
வேலூர் மாவட்டத்தில் கன மழை – வீடியோ..
வேலூர் மாவட்டத்தில் இன்று 22-ம் கேதி மாலை 4 மணி நிலவரப் படி ஆற்காட்டில் 50 மிமீ மழை அதிகமாக பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்தது. அரக்கோணம் 33.2 மி.மீ காவேரிப்பாக்கம் மற்றும் காட்பாடியில் 25 மி.மீ வட புதுப் பட்டு (ஆம்பூர்) 26 மி.மீ மழை பதிவானது. குறைந்த அளவு 1.6 மி.மீ திருப்பத்தூரில் பதிவானது வேலூர் செய்தியாளர்:- கே.எம்.வாரியார்
சாலை விபத்து – 4 பேர் பலி..வீடியோ..
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்துகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சக்தி . இவர்கள் தங்களது 7 வயது மகன் அன்புச்செல்வன் , 5 வயது […]
நீரில் தத்தளித்த இரு சிறுவர்களை குளத்தில் இறங்கி காப்பாற்றிய காவல் கண்காணிப்பாளர்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் மற்றும் காவல்துறையினர், அரசியல் கட்சி பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் அருகில் உள்ள வீரன் குளத்தில் தண்ணீரில் தத்தளித்தபடி இரண்டு சிறுவர்கள் அலறினர். அவர்களின் சத்தம் கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு குளத்தில் இறங்கி தத்தளித்த 2 சிறுவர்களை கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உடனடியாக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை […]
You must be logged in to post a comment.