பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியில் 5 வீடுகளில் திருட்டு. பென்னாகரம் டிச 20.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு குருசாமி மகன் குமார், சின்னுகவுண்டர் மகன் சந்திரன், ராஜேந்திரன் மனைவி பொண்ணுத்தாயி, சின்னு மகன் கோவிந்தன் ,வெள்ளையன் மனைவி ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சுமார் 5லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையெடுத்து பெரும்பாலை […]
Category: தேசிய செய்திகள்
வத்தலகுண்டில் மார்கழி மாதம் பிறந்ததால் வாழைக்காய் விலை வீழ்ச்சி..
வத்தலக்குண்டுவில் மார்கழி பிறந்ததால் வாழைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. செவ்வாழை ஒரு தார் ரூ.350க்கு சரிந்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வாழைக்காய் மார்க்கெட்டில் நேற்று மார்கழி மாதம் பிறந்து விட்டதாலும், திருமணம் போன்ற விசேசங்கள் இல்லாததாலும் வாழைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் செவ்வாழை ஒரு தார் ரூ.600க்கு விலைபோனது நேற்று ஒரு தாய் ரூ.250க்கு வீழ்ச்சி அடைந்தது. அதே போல கடந்த வாரம் ரஸ்தாலி ஒரு தார் ரூ.500ககு விலை போனது நேற்று ஒரு தார் […]
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனு..
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தெற்கு வீரபாண்டியபுரம் காயலூரணி குமாரெட்டியாபுரம் குமாரகிரி மீளவிட்டான், முத்தையாபுரம், முள்ளக்காடு, 3வது மைல் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து மனு அளித்தனர். இது […]
கோவில்பட்டி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதி கோரிக்கை.. வீடியோ…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள கோவில் பட்டி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு சுடுகாடு மற்றும் அடிப்படை வசதி அமைத்து தர கோரிக்கை. கோவில் பட்டி கிராமத்தில் ஐம்பத்திற்கு மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகிறனார்.தற்போது அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு சுடுகாடு மற்றும் எந்தவொரு வசதியும் இல்லை. அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் உடல்களை புதைத்து வருகின்றனார். ஆனால் அந்த நிலத்தில் முள் புதர் வளர்ந்துள்ளது.பிணங்களை எரிக்க ஒரு கிலோ மீட்டர் வரை […]
தேனியில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுறுத்தி சங்கு ஊதி போராட்டம்…
தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அரசானையை உடனடியாக வெளியிட மத்திய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய கோரி சங்கு ஊதி போராட்டம்.S. P. தில் பிரசாத் B. Com., முன்னிலையிலும், மாவட்ட செயலாளர் கௌர்மோகன்தாஸ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பெ.நல்லுச்சாமி கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலா, வீரமணி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: பால்பாண்டி, […]
7 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ! கண்டுகொள்ளாத அரசைக் கண்டித்து திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!
கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பமை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 7 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக […]
விழிப்புணர்வு பதிவு – ஒரு முக்கிய அறிவிப்பு 2018 பிறப்பு சான்றிதழ் வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…
01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது நாம் அறிந்த விசயம், ஆனால் இந்த வருடம் அதன் சட்ட திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய வழிமுறையின் படி 01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது 102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை […]
நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்!!
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் […]
தேவேந்திர குல வேளாளர் இனத்தை இதர பிற்பட்டோர் பட்டியல் இணைக்க டாக்டர் கிருஷ்ணசாமி மனு… சிறப்பு வீடியோ பேட்டி…
தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் . கிருஷ்ணசாமி இன்று மாலை (13.12.2018) கோரிக்கை மனு கட்சி நிர்வாகிகளுடன் மனு அளித்தார். இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுத்த பின்னர், கிருஷ்ணசாமி கூறுகையில், “ஆங்கிலேயர் காலத்தில் தவறுதலாக எஸ் சி என அழைக்கக் கூடிய பட்டியல் இன பிரிவில் சேர்த்து விட்டனர். அதன் விளைவாக கடந்த 90 ஆண்டுகளாக, நாடு […]
இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…
டிசம்பர்-6, இன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் sdpi சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் இறையில்லமான பாபர் மஸ்ஜித் 1992 டிச.6ல் தான் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும், பாபர் மஜ்ஜித்தை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் […]
இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…
மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் நேரம் மாற்றியமைப்பு:- […]
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விரிசல்… ரயில் நேரங்களில் மாற்றம்..
நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் பாம்பன் கடல் பகுதியை கடந்த செல்லும் போது ரயில்வே தூக்கு பாலம் திறக்கப்படுகிறது. இன் து நண்பகல் சென்னை படகுகள் கடந்து செல்ல தூக்கு பாலத்தை திறந்த போது சக்கரம் அருகே திடீரென விரிசல் ஏற்பட்டது. ரயில்வே பணியாளர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் விரிசலை சரி செய்ய இயலாமல் போனது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை கோட்டத்தில் அவசர […]
ஆம்பூர் காலவரை நேரில் பாராட்டிய எஸ்.பி..
சமீபத்தில் ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்பூர் கிராமிய காவலர் சரவணனை நேரில் அழைத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP .பிர்வேஷ்குமார் பாராட்டினர். கே.எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்
கோவையில் திடீர் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி..
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் குணமாகாதவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக […]
குவியும் பாராட்டுகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம மக்கள்..
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது. பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சுந்தரமூர்த்தி தனது திறமையின் மூலம் 108 தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இடம் தெரியாமல் தேடி வந்துள்ளனர் உடனே சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு […]
டெல்லியை உலுக்கும், தமிழகம் தொடங்கிவைத்த போராட்டம்!..
வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதில் இருந்தும் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி (நவம்பர் 30) பேரணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கையை அமலாக்கம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர் […]
கீழக்கரை சாலைகளில் மணல் கொட்டும் அவலம்…
கீழக்கரை சாலைகளில் தொடரும் பிரச்சினையாக உள்ள விசயம் சாலைகளில் கொட்டப்படும் மணல்கள். புதிய வீடு கட்டுவதற்காக மணல் கொட்டுவது தவிர்க்க முடியாத விசயமாக இருந்தாலும், அதை முறையாக கட்டிட பகுதிகளில் கொட்டாமல் வாகனங்கள் செல்லும் சாலைகளை மறைத்து மணல் மற்றும் ஜல்லிகளை கொட்டி வைப்பது பொது மக்களுக்கு இடையூறு மட்டுமல்லாமல், வாகனங்கள் விபத்துக்கும் காரணமாக அமைகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் பல கடுமையான எச்சரிக்கைகள் விடுத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இவ்விணயத்தை கருத்தில் கொள்வதாகவே இல்லை. நகராட்சி நிர்வாகம் […]
ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…
அரியலூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. இதனால் வேப்பங்குழி ரயில்வே கேட்டில் இருந்து பூண்டி பிரிவு ரோடு வரை சுமார் 200 மீட்டர் தார் சாலையின் இரு ஓரங்களிலும் அதிக அளவில் சேதம் அடைந்து இரண்டிலிருந்து மூன்று அடி வரை பள்ளம் பல இடங்களில் காணப்படுகிறது. அந்த பள்ளங்களால் அந்த சாலையில் விபத்து அடிக்கடி […]
தேவிபட்டினம் அருகே மது பாட்டில் திருடியவர் கைது…
இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலை ஓரமுள்ள டாஸ்மாக் கடையில் ரூ.96,270 மதிப்பிலான 437 மது பாட்டில்கள் நவ.25 இல் இரவு திருடு போனது. இது தொடர்பாக சூபர்வைசர் முத்துமாரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் குகனேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் தனிப்படை அமைத்து தேட அறிவுறுத்தினார். இதையடுத்து ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் ஆலோசனை பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரன், […]
துபாயில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ..
இன்று தேரா துபாய் எக்ஸ்சல்சியர் ஹோட்டலில் டாக்டர் தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்” என்ற புத்தகத்தின் திறனாய்வு கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் “அமைப்பாய் திரள்வோம்” புத்தகத்திற்கு அரசியல் விமர்சகர் குறிஞ்சிநாதன் மதிப்புரை வழங்கினார். மேலும் இந்த புத்தகம் அடக்குமுறைக்கும் ,அநீதிக்கும் எதிராக அமைப்பாய் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சமகால அரசியல் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் அனைவரும் […]
You must be logged in to post a comment.