அந்தோனியார் கோவில் தெரு, கரிமேடு, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் பூபதி என்பவருடைய மனைவியுமாகிய அழகம்மாள் 43/2018 மற்றும் தத்தனேரி, களத்துப்பொட்டல், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் முத்து என்பவருடைய மகன் உதயகுமார் 32/2018 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (28.12.2018) மதுரை மத்திய சிறையில் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் […]
Category: தேசிய செய்திகள்
திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் வாகன விபத்து ஒருவர் பலி…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் வீர சிக்கம்பட்டி பிரிவு அருகே வத்தலக்குண்டில் இருந்து வந்து கொண்டிருந்த மகேந்திரா வேன் இரண்டு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த சித்தையன்கோட்டையை சேர்ந்த ரசூல்மைதின்(26) த/பெ.காதர் என்பவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திண்டுக்கல் அசனாத்புரத்தில் குடியிருந்து கொண்டு வத்தலக்குண்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது, இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து […]
தூத்துக்குடி கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…
மத்திய அரசின் தகவல் தொடர்பு துறையும் (Information & Broadcasting), TRAI (Telecommunications Regulatory Authority of India) எனும் தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமும் கேபிள் டிவி யில் எட்டாவது புதிய விலைப்பட்டியல் (New Tariff Order) எனும் கட்டண முறையை அறிவித்து உள்ளது . ஏற்கனவே இருந்து வந்த கட்டண முறையில் 150 கட்டண சேனல்கள் உட்பட 350 ற்கும் மேற்பட்டசேனல்கள் ரூபாய் 200 க்குள் வழங்கபட்டது. ஆனால் இந்த முறை மக்கள் விரும்பிய சானல்களை மட்டும் பார்க்கலாம் […]
தர்மபுரியில் மர்மமான முறையில் ஆடுகள் சாவு…வீடியோ..
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மஞ்சார அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது52 மீன்பிடி தொழிலாளி இவருக்கு சிதம்பரம் என்கிற மனைவியும் ஒரு ஆண் இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் மேட்டூர் ஆற்றின் எல்லைப்பகுதி செம்மேட்டில் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு வீடு திரும்பினார். இவரது சொந்த நிலத்தில் 39 ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார். வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்துவிட பார்க்கும்போது அதில் 16 ஆடுகள் மர்மமான முறையில் மூக்கு மற்றும் காதில் […]
இராமநாதபுரத்தில் அண்ணல் நபி அறிவமுத விழா…
இராமநாதபுரம் மாவட்டம் காரிக் கூட்டம் (வலசை) நகரில் நடந்த அண்ணல் நபி அறிவமுத பெருவிழாவிற்கு காரிக் கூட்டம் முஸ்லிம் ஜமாத் தலைவரும், சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.எம்.நூர் முகமது தலைமை வகித்தார். மலேசியா காரிக் கூட்டம் ஜமாத் தலைவர் கே.அன்வர் கான் மற்றும் ஜமாத்தார், ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். மாணவர் முகமது அமீருல் பரீன் பின் எஸ்.சகுபர் இறைமறை குறித்து எடுத்துரைத்தார். காரிக்கூட்டம் இமாம் மவுலவி ஹாபிழ் எம்.ஹிதாயத்துல்லாஹ் நாஃபிஈ வரவேற்றார். […]
தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த பெண் மர்ம மரணம் குறித்து விசாரிக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விஜயலெக்ஷ்மி என்ற பெண் கடந்த 17ம் தேதி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரனை நடத்தி நூற்பாலை மேலாளரை கைது செய்ய வேண்டும் என்றும், தொழிலக பாதுகாப்பு அதிகாரிகளே! குடோனில் தங்க வைத்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்திய தொழிலாளர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்
நிலக்கோட்டை அருகே கிறிஸ்துமஸ் விழா… புத்தாடைகள் வழங்கப்பட்டது…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முருகத்தூரன் பட்டியில் புனித ஜோசப் கருணை இல்லம் 18வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றை முன்னிட்டு வறியவர் களுக்கு இலவச ஆடை வழங்கும் விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவுக்கு பங்குத்தந்தை பால்ராஜ் தலைமை வகித்தார் இருதய சபை அருட்சகோதரர் தாமஸ் முன்னிலை வகித்தார்’ புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி ஸ்டீபன் வரவேற்றார் விவசாய பொறியாளர் வனராஜ், வழக்கறிஞர் கோகுல்நாத் கிறிஸ்தவ வன்னியர் சங்க தலைவர் […]
உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம் பூசி அருள் பாலிப்பு…
இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி பச்சை கல் மரகத நடராஜர் சிலையில் கடந்தாண்டு மார்கழி திருவாதிரை நாளில் பூசிய சந்தனம் நேற்று களையப்பட்டது. உத்திரகோசமங்கை மங்களநாதர்சாமி கோயில் நடராஜர் சன்னதியில் ஆடும் கோலத்தில் ஐந்தரை அடி உயர பச்சை மரகத கல்லிலான நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சந்தன காப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தன காப்பு களையப்படும்.நடப்பாண்டு விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 […]
எழுச்சியாக நடைபெற்ற சமாதானக் கலை விழா 2018..
2015,2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான சமாதானக் கலை விழா 21.12.2018 அன்று சென்னை பி.எம்.கன்வென்ஷன் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் தலைமை வகித்தார். சினர்ஜி இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக புதுமடம் ஹலீம் அவர்கள் எழுதிய இந்தியாவின் குரல்வளை நசுக்கப்படுவது ஏன்? என்ற புத்தக வெளியீடு, தலைவர் அண்ணலார் என்ற […]
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐ.பி.எஸ் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்ட மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் குற்றங்கள் நடக்காவண்ணம் தடுப்பது குறித்தும், நடந்த குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிரிகளுக்கு தண்டணை பெற்றுத்தருவது குறித்தும், […]
திருநெல்வேலியில் மண்டல அளவிளான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் …
தமிழக முதலமைச்சர் 05.06.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவித்ததை தொடர்ந்து 25.06.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதில் உணவு பொருட்களை பொட்டலமாக கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் தாள்கள், ப்ளாஸ்டிக் மேஜை விரிப்பு, ப்ளாஸ்டிக் கப்புகள், ப்ளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் கப்புகள், ப்ளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள், ப்ளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், தெர்மா கோல் கப்புகள் மற்றும் தட்டுகள், நீர் […]
திண்டுக்கல்லில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது ..வீடியோ..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கைது. கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழகம் முழுவதும் தங்களது 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். செய்தி:- ஜெ.அஸ்கர்
இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பணி தொடக்கம் – மாற்றுப்பாதையில் போக்குவரத்து..
இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பாலம் ரூ.30 கோடியில் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பட்டணம்காத்தான் நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்புல்லாணி வழியாக இராமநாதபுரம் வரும் வாகனங்கள் அனைத்தும் ராஜசூரியமடை (RS மடை) வழியாக கிழக்கு கடற்கரை சாலை பிரிவு சென்று பட்டணம்காத்தான் நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்தி:- முருகன், இராமநாதபுரம்
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு!.. வீடியோ..
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு. மத்திய தரக்கட்டுப்பாடு குழுவினர்களின் தேர்வில் தேசிய அளவில் 8 வது இடத்தைப்பிடித்தது. தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே காவல் நிலையம் இதுவாகும். ஆண்டுக்கு ஒரு முறை தேசிய கட்டுப்பாட்டு அலுவலர் குழுவால் காவல் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி காவல் நிலையங்களில் ஆவணங்கள் சரிபார்ப்பு, சுகாதாரம், கட்டமைப்பு , காவல் நிலைய கோப்புகள் (ம) அவற்றின் பராமரிப்புகள், வழக்கு மனு சம்மந்தமான உடனடி […]
அனைத்து பகுதி நிகழ்வுகளையும் பதியும் தளமாக புதிய பரிமாணத்துடன் 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கீழை நியூஸ் இணைய தளம்…
www.keelainews.com என்ற இணைய தளம் கடந்த 2016ம் ஆண்டு கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை மக்களுக்கு நடுநிலையுடன் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாலிஹ் ஹுசைன், அப்துர் ரஹ்மான், மிசம்மில் இபுராஹிம் மற்றும் செய்யது ஆப்தீன் ஆகியோரின் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டில் வீடியோ செய்தி மற்றும் யூட்யுப் சேனல் மூலமாக முக்கிய நிகழ்வுகளையும், சமுதாய பிரச்சினைகளையும் நேரடி ரிப்போர்ட் ஆகவும், வீடியோ செய்தியாகவும் வெளியிட தொடங்கியது. தொடக்கத்தில் தினமும் 200 முதல் […]
கோவில்பட்டி அருகே கோயிலில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு ..
கோவில்பட்டி அருகே கோயிலில் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆறுமுகம்(55). இவர் கோவில்பட்டியையடுத்த குருமலை அருள்மிகு பொய்யாழி அய்யனார் திருக்கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் மற்றும் இவரது மனைவி ராணி ஆகியோர் திங்கள்கிழமை கோயில் சன்னதியில் அபிஷேகம் செய்துவிட்டு, பிரகாரத்தில் உள்ள பிற சன்னதிகளுக்கு அபிஷேகம் செய்ய சென்றுவிட்டார்களாம். திரும்பி வந்து பார்த்த போது, அய்யனார் சன்னதியில் […]
இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் – அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவேசம்…
கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர்.செ.ராஜூ, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், மோகன், சின்னப்பன்மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பேசுகையில்,”ஏழை,எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தந்தார்,அதனால் தான் […]
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா…
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக 22 கிராமங்களில் ரூ4 கோடியே 75 லட்சத்திற்கான சாலை வசதி அடிக்கல் நாட்டு விழா புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை விழா மற்றும் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்கபபட்டது மேலும்மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அரசு மருத்துமனையில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் மாணவர்கள் 6 நபர் இரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் அலமாரிகள் வழங்கப்பட்டு காசநோயாளிகளுக்கு முட்டை, […]
கோவில்பட்டி பள்ளியில் சுகாதார கல்வி பயிற்சி முகாம்..
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி சுகாதார கல்வி பயிற்சி முகாம் நாடார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் தலைமை வகித்தார்.பள்ளிச் செயலாளர் கண்ணன, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் சம்பத்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சுகாதார பயிற்றுனர் முத்துமுருகன் சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தார்.பல்வேறு […]
You must be logged in to post a comment.