அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 3 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும். பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உள்ளது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரமாக காளைகள், வீரர்கள் பதிவு, வாடிவாசல் அமைக்கும் பணி, […]
Category: தேசிய செய்திகள்
திருச்செந்தூரில் பல நாள் திருடன் அகப்பட்டான்..
தூத்துக்குடி திருச்செந்தூரில் இரண்டு ஆண்டுகள் போலீசாரிடம் சிக்காமல் கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செந்தூர்- நெல்லை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளான். அவனை துரத்திப் பிடித்து விசாரணை செய்ததில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனை கைது செய்துள்ள […]
ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு போர்வை, வசதிகள் வழங்கும் விழா மற்றும் பொங்கல் விழா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா..
தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் காப்பக மாணவிகளுக்கு போர்வைகள், தண்ணீர் பக்கெட், உள்ளிட்ட வசதிகள் வழங்கும் விழா பொங்கல் விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவிற்கு காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) எம்.சிலுப்பன் பரிசுகளை வழங்கி பேசினார். […]
கொடநாடு எஸ்டேட்டில் கொள்கையடிக்க 5 கோடி பணம் கொடுத்த தமிழகத்தின் வி ஐ பி :கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் திடுக் பேட்டி..
ஜெயலலிதா மரணத்திற்க்கு பின் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஆவணங்களை கொள்ளையடிக்க 5 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக கொள்ளையில் ஈடுபட்ட நபரான ஷயான் அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த திடுக்கிடும் ஆவணத்தை, தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் வெள்ளி அன்று வெளியிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில், காவலாளிகளை கட்டிப்போட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். […]
சுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக நடந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டம் பெயரிலேயே ராமநாதசுவாமி என்ற கடவுள் பெயரை கொண்டுள்ளது. நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் முக்கிய கடமை. நகர் முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் கூறும் கருத்து. மாணவர்கள் முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி…
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணிதவியல் முதலாமாண்டு மாணவி J.நூருல் ஃபாசிலா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் வரவேற்புரை வழங்கினார். அத்துடன் சிறப்பு விருந்தினர் B.தேன்மொழி M.Sc., M.Sc., M.Phil. செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கணிதவியல் இணை பேராசிரியை முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, “உலகத்தை […]
தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை – தமிழக அரசினை பற்றி தமிழிசை சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜீ சாடல்..
தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை,தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இருக்கிறதா , இல்லையா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும், தமிழிசை சௌந்தர்ராஜன் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை, என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சாடினார். கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ […]
விஸ்வாசம் பட வெளியீடு – ரசிகர்களுக்கு இடையே தகராறு, கத்தி குத்து, கட் அவுட் சரிந்து ஒருவர் சாவு..
வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாகி உள்ளது.இதனால், படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள், பால் அபிஷேகம் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளை வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் அலங்கார் திரையரங்கில், நேற்றிரவு […]
பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழஏர்மால்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பிரம்மாச்சி வயது 80 இன்று தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரத்தை வாங்க ரேஷன் கடையில் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இவர் இன்று காலை தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கீழை நியூஸுக்காக… கடையம் பாரதி
ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டார்…
ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் ஊடக நிறுவனர்களும் ஊடக நிறுவனங்களும் செய்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராமை கூட்டணியின் தலைவராக நியமித்தது. ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அரசுகளும் ஆதிக்கச் சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது. ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் […]
கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை ..
கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணையை இன்றுதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று வழங்கினார். செய்தி:- அஹமது, தூத்துக்குடி
காவல்துறை நன்னடத்தை சான்று இனி முதல் ஆன்லைன்..
காவல்துறை நன்னடத்தை சான்றினை ஆன்லைன் மூலம் பெறும் சேவையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். www.eservices.tnpolice.govt.in என்ற இணையதளத்தின் மூலம் தனி நபர் நன்னடத்தை, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டில் வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு போன்ற நான்கு வகையான சான்றினை பெற முடியும். இதற்கு தனி நபர் நன்னடத்தை சான்று வேண்டுமானால் ரூபாய் 500/- தனியார் நிறுவனங்கள் […]
சென்னை- நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு..
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் என்பவர், செளகார்பேட்டையில், நகை மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 11 கிலோ தங்க நகை மற்றும் 140 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவை திங்கட்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், 5 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் அடங்கி ஹார்ட்டிஸ்கையும், கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார், […]
இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு..
இராமநாதபுரத்தின் பிரதான பகுதிகளில் மதுரை – இராமநாதபுரம் இடது ஓரம் நகராட்சிக்கு சொந்தமான 10 லட்சம் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு இன்று காலை துர்நாற்றம் வந்தது. இதன்படி, நகராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியை பார்த்தனர். அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அவரது வலது கை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கலாம் […]
பாலக்கோட்டில் மருந்து வணிகர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை கடைக்காரர்கள் பாலக்கோடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அரசு ஆன்லைன் மருந்து வணிக சட்ட அனுமதியை விரைவில் கொண்டு வர உள்ளது. இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டி மத்திய அரசின் கவணத்தை ஈர்க்கும் பொருட்டு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து வணிகர்கள் சங்க பொறுப்பாளர்கள் சரவணனன், செந்தில்குமார், வெங்கடேசன், ரமேஷ், […]
பொங்கல் பரிசு வழங்க தாமதம்… பொதுமக்கள் ஏமாற்றம் ..
பொங்கல் இனாம் இன்று (07/01/2019) வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் கால தாமதப் படுத்துவதால் பொதுமக்கள் ஏமாற்றம். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 மற்றும் பச்சரிசி சர்க்கரை முந்திரி திராட்சை ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்புடன் 7.01. 2019 முதல் விநியோகம் செய்ய படுவதாக அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் நகரில் ஒருசில பகுதிகளில் இன்னும் பொங்கல் இனாம் பொருட்கள் வரவில்லை என்று ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது […]
வாலாஜா அருகே கோஷ்டிகளுக்கு இடையே மோதல்- 4 பேரிடம் விசாரணை..
வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஜெயராம்பேட்டை பாவானி அம்மன் கோவிலை சேர்ந்த அரி என்பவர் மணிகண்டன் மீது மோதுவது போல் பைக்கில் சென்றுள்ளார். இதனை மணிகண்டன் அரியிடம் தட்டி கேட்டார் அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக […]
பிளாஸ்டிக் தடை – வேலூர் ஆணையர் பொது மக்களுக்கு வேண்டுகோள- வீடியோ செய்தி..
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பல வகையான ப்ளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்தடையை மீறுமவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் வேலூர் ஆணையர் S.சிவசுப்ரமணியம் பொது மக்களுக்கு ப்ளாஸ்டிக் தடை பற்றி பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்
கோவில்பட்டி அருகே அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் 100வது பிறந்த நாள் விழா..
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவி, இலவசமாக கண்சிகிச்சை அளித்தவரும், உலக புகழ் பெற்ற கண் மருத்துவ மேதை என்று அழைக்கப்படுபவர் மருத்துவர் ஜி.வெங்கடசாமி. இவருக்கு எட்டயபுரம் அருகேயுள்ள அயன்வடமலாபுரம் தான் சொந்த ஊர். இவருடைய 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான அயன்வடமலாபுரத்தில் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரவிந்த கண்மருத்துமனை தலைவர் மருத்துவர் சீனிவாசன், துணை தலைவர் நாச்சியார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் […]
செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் உட்பட ஐவர் கைது..
மதுரை மாநகரில், செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கன்னக்களவு செய்துவரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப உத்தரவுப்படி சி.சி.டிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருடிய நபர்கள் 1) ரவி என்ற ரவிச்சந்திரன் 42/2018, த/பெ சோலை சேர்வை, சிக்கந்தர் சாவடி, மதுரை 2) பாபு ஆறுமுகம் 42/18, த/பெ பாலகிருஷ்ணன், எண்: 3/624, குத்துக்கல்தெரு, பரமக்குடி, ராமநாதபுரம் […]
You must be logged in to post a comment.