கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் தனது மனைவி ஷோபனா,குழந்தைகள் ரித்திக்மைக்கேல்,ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய 4 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை. இறந்த ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்..

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை..

அந்தியூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிங்கரிங் பட்டறை உரிமையாளர் கைலாசத்தை (40) பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தடுத்து நிறுத்தி கழுத்தில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, சம்பவம் தொடர்பாக பவானி டிஎஸ்பி சார்லஸ் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். ஜெ.அஸ்கர்

திருச்செந்தூர் கோயில் கலசம் கீழே விழுந்ததாக புரளி.. மக்கள் கோலம் போட்டு பிரார்த்தனை .. வீடியோ..

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோபுர கலசம் கீழே விழுந்து விட்டதாக வதந்தி இதனால் அந்த பகுதி பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள் இதுகுறித்து நாங்கள் திருச்செந்தூரில் உள்ள குருக்களிடம் கேட்டபொழுது இது தவறான தகவல் இதை யாரும் நம்ப வேண்டாம் என தகவல் தெரிவித்தார். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் தகராறு..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜே. ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முருகேஸ்வரி. வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தார் தாக்கியதில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவன் சக்திவேல் இவரது தம்பி ஜெகன் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேஸ்வரி மீண்டும் தாக்கி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செய்தி:- ஜெ.அஸ்கர்

வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை விலக்க சென்ற நான்கு பேர் காயம் மைத்துனர் கைது..

வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை செய்யப்பட்டார். அதில் விலக்க சென்ற நான்கு பேர் காயமடைந்தனர். கத்தியால் குத்திய மைத்துனரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 45 விவசாயி, இவர் அதே ஊரைச்  சேர்ந்த  விவசாயி தொத்துக்காளையின்  (வயது 32) சகோதரி செல்வியம்மாளை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆண் 1, பெண் 1 இரண்டு குழந்தை உள்ளது. செல்வத்துக்கும் தொத்துக்காளைக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்வியம்மாள் தம்பி தொத்துக்காளை வீட்டில் இருந்தார். இந்நிலையில் […]

என் அப்பா எவர்சில்வர் பாத்திரம் விற்கிறார். நான் கதாபாத்திரம் விற்கிறேன் சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன் தாசிம் பீவி கல்லூரி விழாவில் உருக்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அடுத்தது என்ன கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். ஆளுமை பண்பு தன்னம்பிக்கை பேச்சாளர் பஜிலா ஆசாத், உதவி பேராசியர் முகமது ரபிக், உதவி பேராசிரியை நசீமா பர்வின், வளாக தேர்வு வேலைவாய்ப்பு அலுவலர் கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், இளைஞர்கள் […]

இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….

திண்டுக்கல் அருகே வடமதுரை அய்யலூர் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எட்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் 140 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரை திண்டுக்கல் வழியாக பழனி செல்லும் பயணிகள் ரயில் கோவை வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

மதுரை பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பாக சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது..

18/01/2019 தேதி மாலை 07.00 மணிக்கு திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகில் பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக பொங்கல் விழா இதில் கம்பம். செல்வேந்திரன் முன்னாள் எம்பி அவர்கள் திரு.காளமேகம் என்ற சரவணன் அவர்கள் சமூக தொண்டு சிறந்த சேவையை பாராட்டி அவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த மருத்துவ சேவை விருது மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு.செல்வராஜுக்கு வழங்கப்பட்டது. இது முக்கிய பிரமுகர்கள் அவரை பாராட்டினார். மேலும் திரு.காளமேகம் […]

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான புன்னக்காயல் முதல் மணப்பாடு வரை பகுதியிலுள்ள கடற்கரை ஒரங்களில் அரிய வகை மீன்கள் ,மற்றும் வினோத உயிரினங்கள் ஒதுங்கியுள்ளதால் பொங்கல் விடுமுறையை களிக்க கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர், தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான கடற்கரை பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின ,சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள, கோவளம் கடற்கரையில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு ஆயிரகணக்கான மீன்கள் […]

கீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்..

கீழக்கரையில் 20/01/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி முதல் பகல் 1மணிவரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் நாடார் பேட்டை ஆங்கில வழி பள்ளி வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவ முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களுக்கும் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்படும். குறிப்பாக […]

வேலூர் ஊணைப்பள்ளத்தூரில் இந்து முன்னனி கொடியேற்றம் விழா..

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்க்கு உட்பட்ட ஊணைப்பள்ளத்தூர் கிராமத்தில் 15/1/2019 தை திருநாளை முன்னிட்டு இராம பக்தர்கள் ஒன்று கூடி இந்து முன்னனி அமைப்பின் கொடி ஏற்றும் விழா நடத்தினார்கள். விழாவில் வேலூர் கோட்ட தலைவர் திரு. மகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் இராமர் கோயிலில் முதலாம் ஆண்டு விளக்கு பூசையை துவக்கி வைத்தார். விழாவில் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் திரு.பாண்டியன் அவர்களும், ஒன்றிய நிர்வாகிகளும், அணைக்கட்டு […]

இணைப்பு என்ற பெயரில் சத்துணவு மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இணைப்பு என்ற பெயரில் 3500 தொடக்கப் பள்ளிகள், 3000 சத்துணவு மையங்கள மூடப்படும் அபாயத்தை கண்டித்து ஜாக் டோ-ஜியோ சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன், தமிழாசிரியர் கழக மாவட்ட அமைப்பாளர் குமாரவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் […]

நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சேரன்மகாதேவியில் சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகம் ..

நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சேரன்மகாதேவியில் சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டது .மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் மற்றும் சேர்மாதேவி சப் கலெக்டர் ஆகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமூகத்தில் ஏற்படக்கூடிய சாதிமதமோதல்களின் அடிப்படைகளை ஒழிக்கும்வண்ணம் காவலர்கள் சிறப்பாக நடித்து காண்பித்தனர் நெல்லை மாவட்ட காவல்துறையின் சிறப்பான இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். செய்தி:- கடையம் பாரதி

கீழக்கரையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா..

கீழக்கரை புதிய காவல் நிலைய கட்டிடடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழக்கரை காவல் நிலைய வளாகத்தில் இன்று (18/01/2019) காலை நடைபெற்றது. தற்போதைய காவல் நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்குமாம், புதிய கட்டிடம் அமைக்க பல் வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் புதிய கட்டிடம் அமைக்க  ரூபாய் ஒரு கோடியே இரண்டு லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது. இப்பணியை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா […]

பாலக்கோடு பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் கட்டு யாணையால் பொதுமக்கள் பீதி…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் காப்பு காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யாணை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவினால் காடுகள் மற்றும் அணைகள், ஏரிகள் என வறண்டு கடும் வறட்சி நிலவி வருகின்றது. காடுகளில் இருக்கும் வனவிலங்குகள் யாணை, மான், முயல், காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் என தண்ணீயின்றி வனவிலங்குள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. மகேந்திரமங்கலம் காப்பு காட்டில் இருந்து ஒற்றை ஆண் யாணை […]

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15,காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு..

இன்று (17:01/2019) நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30க்கு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 729 காளைகள் பங்கேற்றது. 697, மாடுபிடி வீரர்கள்  கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற அடிப்படையில் 8,சுற்றுகள் நடத்தப்பட்டன. ஆயிரத்து 400 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் […]

பென்னாகரம் அருகே அரகாசன அள்ளியில் ஐகோர்ட் உத்தரவின்படி மாரியம்மன் திருவிழா…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சாமி வழிப்படுவதில் இரு தரப்பினரிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. இதனையெடுத்து அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் 144தடை உத்தரவு பிறப்பித்தார். பிறகு இருதரப்பும் ஐ கோர்ட்டை நாடினர். பிறகு ஒரு தரப்பினருக்கு உழவர் திருநாள் அன்று காலை 6மணி முதல் மதியம் 12மணி அளவில் வரை மற்றொரு தரப்பினருக்கு மதியம் 2மணி முதல் இரவு 8மணி வரை திருவிழாவை நடத்தலாம் என ஐகோர்ட் […]

தேனி அருகே எஸ்பி தனிபிரிவு போலீசாருக்கு கத்தி குத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவமனையில் அனுமதி…

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிதம்பரம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ் பி தனிப்பிரிவு காவலர் ராஜசேகர் (32), என்பவரை குமணன்தொழு பகுதியை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளியான லட்சுமணன் குடிபோதையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் காவலர் அனுமதி. தப்பி ஓடிய லட்சுமணனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜசேகரை மாவட்ட […]

கன்னியர் பொங்கல் வைத்து கடல் அன்னைக்கு வழிபாடு…

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தொட்டு தொடரும் ஒரு தமிழர் பண்பாடு. மனித வாழ்வில் நிகழும் அனைத்து வித பிரச்னைகளுக்கும் தை மாதம் பிறந்தால் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை விஞ்ஞானம், தொழிநுட்பம் வளர்ந்த காலத்திலும் ஐதீகம் தொடர்கிறது. விளைய வைத்த விவசாயிகள் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு விவசாயம் செழிக்க வழிபாடு செய்வதை போல, மீனவர்கள் பொங்கல் வைத்து கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி மீன்பிடியை துவங்குவதை மோர் பண்ணை கடற்கரை கிராம […]

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரங்களை முழுமையான பயன்பாட்டில் வைக்க உத்தரவு ..

தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை இன்று துவங்குகிறது. பொங்கலை முன்னிட்டு வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுமையாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என இன்று (15/01/2019)  முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்த நாட்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில், ஏ.டி.எம்.,களில், முழுமையாக நிரப்ப அனைத்து வங்கி கிளைகளுக்கும் நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!