xஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,244 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 64 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 8,052 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் 60 சதவீத ஆசிரியர்கள் ஜன., 22 இல் துவங்கிய ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை விலக்கி கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தது. நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி ராமநாதபுரத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் […]
Category: தேசிய செய்திகள்
நாட்டு இன காளைகளை காப்பாற்ற – சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா நாட்டுக்கோழி, கறவை பசுக்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி மற்றும கறவை பசுக்களை வழங்கி பேசினர். இதில் 30 பயனாளிகளுக்கு ரூ.1,87,500 செலவில் நாட்டுக்கோழிகளும், 45 பயனாளிகளுக்கு ரூ.18,11,250 செலவில் கறவை பசுக்களும் வழங்கப்பட்டன. பின்னர் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு: S P முரளிரம்பா துவக்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு (SOCIAL MEDIA CENTER) தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இன்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான சேவைகளில் சில நிகழ்வுகள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது சில நிகழ்வுகள் பொது மக்களின் கவனத்துக்கு வருவதில்லை. ஆகவே பெரும்பாலான பொது மக்கள் அறியவேண்டும் […]
இராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..
கடந்த 2003 ஏப்.7 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி , பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்கள், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரையறுக்கப் பட்ட […]
பரமக்குடியில் மக்கள் சந்திப்பு டிடிவி தினகரன் பிரசாரம் ..வீடியோ..
தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலர அமமுக., வுக்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் உருக்கமான பேசினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பரமக்குடியில் டிடிவி பேசினார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அமமுக., துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகர மக்கள் சந்திப்பு இரண்டு நாட்கள் பயணத்தை தொடங்கினார. பார்த்திபனூர் கீழப்பெருங்கரையில் இருந்து தொடங்கிய பயணம் கமுதக்குடி, பொன்னையாபுரத்தில் மக்கள் உற்சாக வரவேற்றனர். அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது: நம்மிடம் பலர் பிரிவினையை உருவாக்க பார்க்கின்றனர். அதற்கு […]
இணையதள பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு..
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவுப்படி இன்று (22/01/2019) “இணையதள பாதுகாப்பு” என்ற தலைப்பில் சைபர் கிரைம் ஆய்வாளர் திரு.செந்தில் இளந்திரையன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், மதுரை மாநகர் கோரிப்பளையம் பொன்முடியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இணையதள குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துகொள்வது, சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாளுதல், Smart Phones பயன்படுத்துதளினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் மற்றும் இணையதள […]
பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சி பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சி சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தமிழ்மணி தலைமை வகித்தார் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, பொருளார் சடப்பட்டி சுப்ரமணி ஜெர்தலாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஊராட்சி கழக செயலாளர் முனியப்பன் பி.செட்டிஅள்ளி ஊராட்சி கழக செயலாளர் முனியப்பன்,பாலக்கோடு தெற்கு ஒன்றிய […]
ஜாக்டோ-ஜியோ போராட்டம் , வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்..
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து.. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடு.. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடு.. 21மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்கிடு… இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56 ஐ ரத்து செய்… 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் […]
வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலி….
நிலக்கோட்டை அருகே உள்ள ராமன்செட்டிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 33. லாரி டிரைவர் நேற்று இரவு ரமேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பள்ளபட்டி வந்தபோது அந்த வழியாக வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து […]
வத்தலக்குண்டுவில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளி நடத்திய பள்ளிகள் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்..
வத்தலக்குண்டுவில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளி நடத்திய பள்ளிகள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்றுமாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார் ஆனால் வத்தலக்குண்டு விலுள்ள இரண்டு தனியார் பள்ளிகள் வழக்கம் போல் நடந்தது தகவலறிந்த இந்து முன்னணியினர் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அண்ணாத் துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரகுபதி, நகர தலைவர் மருதை வீரன் […]
பென்னாகரம் அருகே பெரும்பாலையில் மருதமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதமன்று தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் தேர் இழுத்தும் மருதமலை முருகனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட 2000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நேற்று 3 மணியளவில் மருதமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். […]
பென்னாகரம் அருகே தீண்டாமை வேலி அமைக்கப்பட்டதை அகற்றக்கோரி கிராம மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ..
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் 2 ஆயிற்த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பொது சாலையில், அதே பகுதியை சேர்ந்த அருந்ததையினர் காலணியை சேர்ந்தவர்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த பொதுசாலையில் இந்த காலணியை சேர்ந்த மக்கள் செல்ல கூடாது என மற்றோரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தடுப்பு வேலி அமைத்தனர். இதனால் அருந்தையினர் காலணியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வழி இல்லாத […]
கொடைக்கானலில் கொட்டும் பனியிலும் தொடரும் காட்டுத் தீ… வீடியோ..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சிலநாட்களுக்குமுன் 0″ டிகிரியை தொடர்ந்து பனிபிரதேசமாக மாறியது பின்னர் தினமும் உறைபனி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதே சமயம் இன்று பல இடங்களில் குறிப்பாக கோவில் பட்டி, சிட்டி டவர், மற்றும் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை அருகில் வெள்ளைப்பாறை மற்றும் வனப்பகுதியிலும் மற்றும் பட்டா இடங்களிலும் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து விலை உயர்வான மரங்கள் தீயில் கருகியது. இதை மாவட்ட வனத்துறையும் கண்கானித்து காப்பு காடுகளையும் வனவிலங்குகள் […]
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் :பக்தர்கள் பரவசம்..
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. தைப்பூச விழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, […]
கீழக்கரையில் பல்வேறு சங்கங்கள் சார்பாக சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு..
இன்று 21/01/2019 கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மற்றும் கீழக்கரை பெண்களும் பொது மக்கள் சார்பாகவும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம், MYFA (புதுத்தெரு), இஸ்லாமிய சமதர்ம சங்கம், முஸ்லிம் பொது நலச்சங்கம், TMMK, SDPI, TNTJ, போன்ற சமுதாய இயக்ககளின் நகர் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குறை தீர்க்கும் நாளான இன்று, கடந்த வாரம் ஜாமியநகர்பள்ளி அருகில் சமூக விரோதிகளால் கத்தியால் குத்தி […]
இராமநாதபுரம் நகராட்சியில் ரூ.10 கோடியில் சாலைகள்..
இராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு, வடக்கு தெரு 4 இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் படி, ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் சேதமான சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்துவதற்காக 5 சிப்பங்களாக ரூ.10 கோடி மதிப்பில் 15.48 கி.மீ நீள சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இச்சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கும் பூமி பூஜை நடந்தது. […]
நஷ்ட ஈடு கோரி கருகி கதிர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்..
இராமநாதபுரம் மாவட்டம் ஓரிவயல், பனைக்குளம், வேடந்தை, கள்ளு பெருக்கி உள்ளிட்ட கிராமங்களில் 300 எக்டர் நன் செய், 560 எக்டர் புன் செய் பயிர்கள் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகின. இதனால் 100 சதவீத விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக கோரி தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்ந்த நெற்கதிர்களுடன் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். விவசாயிகள் கூறுகையில், […]
தைப்பூசம் : பக்திக்கடலில் மிதந்த திருச்செந்தூர்..
திருச்செந்துர் தைப்பூச விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்திக்கடலில் மிதந்தது திருச்செந்தூர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு […]
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை: பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் : தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி வேண்டுகோள்..
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை: பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி வேண்டுகோள் விடுத்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இன்று (21.01.2019) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை , ஆலையை திறக்க […]
ஆம்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது..
ஆம்பூர் அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது . வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 10.1.2019அன்று வீட்டின் அருகாமையில் இருந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை. செய்தி:- […]
You must be logged in to post a comment.