பாலக்கோடு அடுத்த திருமால்பாடி வள்ளுர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் சீர்வரிசை கொடுத்து கொண்டாடினர்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி மற்றும் வள்ளுர் ஆகிய கிராமங்களில் உள்ள ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் போர்டுகள் , கணினி,பேனா, பென்சில் . விளையாட்டுப் பொருட்கள், பள்ளிக்கு தேவையான நாற்காலிகள் , குடங்கள் உள்ளிட்ட சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். ஊர் பொதுமக்கள் கூறியதாவது தற்போது அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து […]

கோவையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவற விட்டதினால் கீழே விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்..வீடியோ பேட்டி..

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விக்ரம் பவித்ரா என்ற தம்பதியினருக்கு பிறந்த குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இறப்பின் காரணத்திற்கு மருத்துவமனை தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. பின்னர் இறந்த குழந்தையை பெற்றோரிடம் தரும்பொழுது தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் தலையில் அணிவித்திருந்த தொப்பியை கழட்டி பார்த்தனர். அதில் குழந்தையின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்த பொழுது குழந்தை மருத்துவர்கள் கையிலிருந்து […]

மீனவர்கள் போராட்டம் வாபஸ் நாளை 09/02/19 கடலுக்கு செல்லும் படகுகள்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலில் இரட்டை வலை மீன்பிடியில் ஈடுபடும் வெளியூர் படகுகளை வெளியேற்றக்கோரி மண்டபம் மீனவர்கள் 01/02/19 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 05/02/19ல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் 1மணி நேரத்தில் விலக்கி கொள்ளப்பட்டு சமரசக் கூட்டம் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் இராமநாதபுரத்தில் நடந்தது. […]

தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடிய எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள்…

தேசிய சுற்றுலா தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சோழநாட்டுச் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தனர். ”ஜனவரி- 25 ஆம் நாளை நாம் தேசிய சுற்றுலா தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றோம். சுற்றுலா மூலம் பெறப்படும் அறிவுசார் கல்வி மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்” எனப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சுற்றுலாக் கல்வி குறித்தான முக்கியத்துவத்தை ஸ்பிக் நிறுவனத்தின் பொறியாளர்( ஒய்வு) திரு. கன்னையா அவர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார் தேசிய சுற்றுலா தினம் குறித்தும், […]

அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற “அழகு ஆரம் – 2019” கலை நிகழ்ச்சியில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாதனை..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 02.02.2019 மற்றும் 03.02.2019 தினங்களில் நடைபெற்ற “அழகு ஆரம் – 2019” கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர். இக்கலை நிகழ்ச்சி […]

மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு..

மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம், இன்று (05/02/2019) சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில் மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ  தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹளரத் துஆ செய்து கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில செயலாளர்  மவ்லவி அர்ஷத் அஹமத் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை  தொகுத்து வழங்கினார்.  மாநிலப் பொதுச் செயலாளர்  மௌலவி M.S சம்சுல் இக்பால் தாவூதி இரண்டு ஆண்டுகளுக்கான பொதுக்குழு அறிக்கையை […]

சாலைப் பாதுகாப்பு வார விழா : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்..

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் 04.02. 2019 முதல் 10.02.2019 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி நகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக இன்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பலர் தங்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் […]

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது :தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது என தூத்துக்குடியில் நடைபெற்ற கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்து நகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு LCD திரை ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தூத்துக்குடி […]

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது..

மதுரை மாநகர் மகாபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் ஜான் பாட்சா 21/19 என்பவர் கடந்த 31.01.2019 அன்று இரவு மதுரை TP ரோடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து அபாயம் விளைவிக்கக்கூடிய கூர்மையான வாளைகாட்டி மிரட்டி ஜான் பாட்சாவிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாக 01.02.2019 அன்று C3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு.அருணாசலம் அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டதில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக KS.அழகிரி.. செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு. மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார் உட்பட 4 பேர் நியமனம்.  புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என அறியப்படுபவர். நியமனத்திற்கு பின் அவர் கூறுகையில், “ என்னை தேர்வு செய்த ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றி. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுடன் நட்புடன் பழகி செயலாற்றுவேன்” என்றுள்ளார். Photo Courtesy:- Puthiyathalaimurai

பரமக்குடியில் 766 பெண்களுக்கு திருமண உதவி உட்பட ரூ.4.65 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்…

766 ஏழை பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி உட்பட ரூ.4.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் படித்த ஏழை  பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 766 பெண்களுக்கு தலா 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி உட்பட ரூ.4.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவிற்கு […]

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் பரிசு தொகை காசோலை, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து, பூப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் இரு பாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகிநது. இப்போட்டிகளில் […]

இன்று முதல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் துவக்க விழா…

திருவனந்தபுரத்தில்  இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் சிறந்த நிகழ்வு உடுமலை ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  சி.மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட் யரா, துணை கோட்ட மேலாளர் மஞ்சு காணி, ரயில்வே பொறியாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர்கள், உடுமலையில் உள்ள ரோட்டரி லயன்ஸ் அமைப்புகள், வியாபாரிகள் சங்கம், ரயில் பயணிகள் […]

உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன்..:

உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் குடும்பதகறாரில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் தமிழ்பாண்டி (35) தலைமறைவானார். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (65).இவரது மகன் தமிழ்பாண்டி (35). கூலித்தொழிலாலியான கருத்தப்பாண்டி அவரது மனைவி லதாவுக்கும் தமிழ்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு லதா கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழ்பாண்டி அடிக்கடி தனது தந்தையிடம் குடிபோதையில் தனது மனைவியிடம் சேர்த்து வைக்கக்கோரி தகறாரில் ஈடுபட்டு […]

பணிகள் முடியும் தருவாயில் உள்ள அம்மைய நாயக்கனூர் காவலர்கள் குடியிருப்பை உடனே திறக்க காவல்துறையினர் எதிர்பார்ப்பு!..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையில் 5 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 18க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு காவலர் குடியிருப்புகள் கட்ட 3 கோடியே 54 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்தது அதன்படி அம்மைய நாயக்கனூர் காவல்நிலையம் கட்டிடம் அருகிலேயே குடியிருப்புகள் கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே அதனை விரைவில் […]

நிலக்கோட்டையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வியால் தினறிய நிர்வாகிகள்….வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழையவத்தலகுண்டில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது இதில் உதயநிதி ஸ்டாலின், மாநிலப் துனைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற கொறடா சக்ரபாணி, மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார். கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தொடர் கேள்விகளால் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் தினறினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை தனி -தொகுதி என்பதால் திமுக தொடர்ந்து புரக் கணிப்பதாகவும் பல […]

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம்..

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியாக கோயில்வாடி கடற்கரையில் தங்கச்சிமடம் , பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்கு தளம் அமைத்து வாரம் 3 முறை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை வலை மீன்பிடியை முற்றிலும் தடுக்க வேண்டும் என மண்டபம் மீனவர் […]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார். 599 பேருக்கு இளங்கலை பட்டம், 54 பேருக்கு முதுகலை பட்டம், 10 பேருக்கு ஆய்வு நிறைஞர் பட்டங்களை எரச் அண்ட் மெஹ்ரூ மேம்பாட்டு கல்வி மற்றும் மும்பை இந்திய தொழில் நுட்ப ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் மேம்பாட்டுக் […]

இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ., ஆர்ப்பாட்டம்..வீடியோ & புகைப்பட தொகுப்பு..

சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியை மீண்டும் சுட்டுக் கொல்வது சித்தரிப்பு சம்பவத்தை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வைத்தார். காந்தியை சுட்டுக் கொலை செய்வது போல் சித்தரித்த இந்து மகாசபை தீவிர செயலை கண்டித்து, இந்து மகா சபை தேசிய பொதுச்செயலாளர் பூஜா சகானை கைது செய்யக் கோரியும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் […]

ஒட்டன்சத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்தவர் மீது லாரி மோதி விபத்து..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த சிவமணி என்பவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், காயமடைந்த சிவமணி என்பவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!