நிருபர்களை தரக்குறைவாக நடத்திய வேப்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து – WJUT- WORKING JOURNALIST UNION OF TAMILNADU – தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்…

நிருபர்களை தரக்குறைவாக நடத்திய வேப்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து  WJUT- WORKING JOURNALIST UNION OF TAMILNADU – தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில்  கூறப்பட்டுள்ளதாவது:- கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன், மற்றும் தினமலர், செய்தியாளர்களை வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தகாத வார்த்தைகளால் திட்டியும், தரதரவென இழுத்துச் சென்று குற்றவாளிகளை நடத்துவது […]

அனாதை இல்லத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்… கனவு காணுங்கள் வெற்றியடையலாம் என்பதற்கு ஒரு உதாரணம்….

சிறு வயதில் குடும்ப வறுமை காரணமாக அனாதை இல்லத்தில்  வளர்ந்த அப்துல் நாசர் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இவரின்  ஐந்து வயதில் தந்தை மரணித்து விட இவருக்கு மூத்த மூன்று சகோதரிகளையும் காப்பாற்ற அண்டை வீடுகளில் கூலி வேலை செய்தும் போதிய வருமானம் இல்லாமல் தவிக்க, தனது மகனுக்காவது வயிராற உணவு கிடைக்கட்டும் என்று இவரது தாய் தீர்மானித்து அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளார். தலசேரி தாருல் ஸலாம் யதீம்கானாவில் ஆரம்ப கல்வியும், திருச்சூர் இஸ்லாமிக் […]

பாலக்கோடு அருகே சூதாட்டம் ஆடிய மூன்று பேர் கைது..

பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் சுடுகாட்டில் சூதாட்டம் ஆடிய மூன்றுபேரை மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து புலிக்கரை சேர்ந்த சக்திவேல் மகன் பிரகாஷ் 28 வயது. வரகூர் ஆரியன் மகன் வேடி 50 வயசு .புலிக்கரை பச்சையப்பன் மகன் முத்து 43 வயது .மூன்று பேரும் நேற்று மாலை மகேந்திர மங்கலம் அருகில் கொலசனஅள்ளி சுடுகாடு அருகில் உட்கார்ந்து மூன்று பேரும் சூதாட்டம் ஆடியதால் மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்து […]

திருப்பதியில் தமிழக முதல்வர்..

திருமலையில் தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் நேற்று (27/05/2019) திருப்பதி திருமலைக்கு இரவு சென்றார். இன்று (28/05/2019) காலை சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் (இடைத்தேர்தல்) நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் அவர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி..

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடரும் அலைபேசி வழி ஏமாற்று வேலை..

தொடர்ந்து அலைபேசி வழியாக வங்கி எண்களை பெற்று ஏமாற்றி வந்த கூட்டம் சிறிது காலம் அமைதியாக இருந்தது போல் காட்சியளித்தது.  ஆனால் மீண்டும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளார்கள். இன்று (13/05/2019) மாலை நமது கீழை நியூஸ் நிருபருக்கு +919943735608 என்ற எண்ணில் இருந்து RBI வங்கியில் இருந்து அழைப்பதாக கூறியுள்ளார்கள். பின்னர் உங்களுக்கு CREDIT CARD தருகிறோம், வேறு வங்கி CARD விபரம் இருந்தால் தாருங்கள் அந்த விபரங்களை வைத்து புதிதாக கூடுதல் தொகையுடன் புதிய கார்டு […]

மீண்டும் சின்ன திரையில் அப்துல் ஹமீது… புதிய கோணத்தில்…

பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணணையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக கலைஞர் என, பல்லாண்டுகளாக பணியாற்றினார். அத்துடன், ‘பாட்டுக்கு பாட்டு’ என்பது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ஹமீதுவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், கணீரென்ற […]

அதிவேக ரயில்களும் உலா வரும் திருடர்கள்.. பயணிகள் ஜாக்கிரதை.. வீடியோ..

சமீபத்தில் மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் சேலம் அருகே வரும் பொழுது சில  பெட்டியகளில் 2 மர்ம நபர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்துள்ளர்.  இதை கண்ட பயணம் செய்த ஒரு பெண்மணி மர்ம நபர்களின் நடவடிக்கையை கவனிக்க உறங்குவது மறுபுறம் திரும்பி நோட்டமிட்டுள்ளார். அச்சமயம் அப்பெண்மணியின் அருகே உறங்கி கொண்டிருந்த அவர் மகனின் சட்டை காலரை உயர்த்தி தங்க ஆபரணம் ஏதும் அணிந்துள்ளாரா என்று பார்த்துள்ளனர், உடனே அருகில் இருந்த அப்பெண்மணி என்ன வேண்டும் […]

+2 தேர்வில் பின்னடைவை சந்தித்த இராமநாதபுர மாவட்டம், 10ம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை..

இன்று (29/04/2019) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில்  மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள். 1. திருப்பூர் 98.53%.ய 2. ராமநாதபுரம் 98.48%. 3. நாமக்கல் 98.45%. http://www.dge.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 6100 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி  பெற்றுள்ளனர். எப்பொழுதும் போல்10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவியர் 3.7% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா..

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெற்றது. பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருதேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு இந்த திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெறும். திருப்பதி வெங்கடாசலபதி தம்பி என அழைக்கபடும் சாமி கலியுக வரதராஜ பெருமாள் ஆவார். அரியலூர்: ராமசாமி

டிக்-டாக் செயலி: 24ம் தேதி இறுதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை.!

டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு டிக்-டாக் செயலி குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்காவட்டால் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த தடை நீக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அதுவரை நீதிமன்றம் பிறப்பித்தத் தடையை நீக்கவும் மறுத்துவிட்டது. ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக “டிக் டாக்’ மாறியுள்ளது. இந்த செயலியால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், […]

நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்.! திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் விளக்கம்…

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார். ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்துகளுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மேலும், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச […]

நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு.!

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கான 1100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 2013 ஆம் ஆண்டு தபால் துறையிடம் இருந்து டிசிஎஸ் நிறுவனம் பெற்றது. தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அதிக சேவைகளை திறம்பட அளிக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான திட்டமாகும். அதன்படி, […]

இலங்கையைத் தகர்த்தெறியும் சூழ்ச்சிகரமான தாக்குதல்களுக்கு வெல்ஃபேர் கட்சி கண்டனம்…

இந்திய வெல்ஃபேர் கட்சியின் தேசியத் தலைவரும் ஜங்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இலங்கைத் தீவைத் தாக்கிய அந்த தற்கொலைத் தாக்குதலில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளனர்., 450 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எட்டு தொடர் குண்டுவெடிப்புகள் மனிதநேயத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக கருதப்படும். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை வளர்த்துவதற்கும் , இலங்கையில் சமூக பிளவை தூண்டுவதற்கும் இந்த சம்பவம் துணை போகும் என அவர் […]

பத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சமீப காலமாக பத்திரிக்கையாளர்களை தாக்கும் செயல் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதில்   உள்ளூர் செய்தியாளர் முதல் தேசிய அளவிளான அனைத்து பத்திரிக்கையாளர்களும் உண்மையை மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கப்படுவது மிகவும் வேதைனயான விசயம்.  பத்திரிக்கை துறை என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூணாகும், பத்திரிக்கையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படுவதற்கு சமமாகும். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 அரியலூர் மாவட்ட […]

வாக்குரிமை நமது ஜனநாயக உரிமையாகும்… ஓட்டுரிமையை தடுப்பதும்… ஓட்டை விற்பதும் குற்ற செயலாகும்…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் மற்றும் மநீம போன்ற கட்சிகள் தனித்தும் களம் காணுகின்றன. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மத்திய மாநில ஆளும் கட்சிகளை விமர்சித்து எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளை விமர்சித்து ஆளும் கட்சிகளும் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. முன்பெல்லாம் தேர்தல் களத்தில் ஆண்ட கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்தும் மக்களின் […]

சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019 ஐ முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையிலும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது .

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியீடு..

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி 22.03.19 நேற்று நள்ளிரவில் திடீரென அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பல கட்டங்களாக தேர்வு செய்து அக்கட்சி […]

கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து கட்சியின் தலைவர் காதர்முகைதீன் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டர். மேலும் இப்பிரச்சாரத்தின் போது திமுக நகர் செயலாளர் SAH.பசீர், விசிக நகர செயலாளர் ஹமீது யூசுஃப் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 31வது மாணவப் பேரவை நிறைவு விழா..

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 31வது மாணவப் பேரவை நிறைவு விழா இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். பின்னர் 2018-19 ஆண்டிற்குரிய மாணவப்பேரவை பொறுப்புக்களை 2019-20 ஆண்டிற்கான பொறுப்பாளர்களிடம் மாணவிகள் ஒப்படைத்தனர். மதுரை எம்.எஸ். செல்லமுத்து மனநல மறுவாழ்வு மையத்தின் முதல்வர் திரு. ஜி.குருபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இன்றைய சூழ்நிலையில் மாணவிகள் அலைபேசியை கவனமாகக் கையாள வேண்டும் என்ற […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!