முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்பது அனைவருக்கும் தெரியும். ரயில் புறப்படுவதற்கு பல மணி நேரம் முன்னரே ரயில் நிலையம் வந்து பொது பெட்டியில் இடம்பிடிக்க காத்திருந்து இடம் கிடைக்காமல் போன கதையும் பலருக்கு நிகழ்ந்து இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வே துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. […]
Category: தேசிய செய்திகள்
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளது.
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தை ஒருங்கிணைத்து முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆந்திராவை இருப்பிடமாக கொண்ட 42 லட்ச ரேசன் அட்டைதாரர்கள், அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஐதராபாத் பகுதி ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு மாநிலத்தவர்களும் தற்போது குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலேயே பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதிமுதல் மகாராஷ்டிரா […]
கனமழையால் மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதில் தொடர்ந்து 5 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்பு நிலை திரும்பியிருந்தது. மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் […]
முகலாயர் காலத்தைச் சேர்ந்த 698 நாணயங்களை உத்தரப்பிரதேச மாநில போலீசார் மீட்டுள்ளனர்.
மொராதாபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான குலாம் நபி என்பவர் தனது பணியாளர்களுடன் சேர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் சிம்லாவில் ஒப்பந்தப் பணி ஒன்றுக்காக குழி தோண்டும் போது சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த வெள்ளி நாணயங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறதுஇந்நிலையில் பணி முடிந்து மொராதாபாத்துக்கு திரும்பிய அவர்களிடையே அந்த நாணயங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினரால் இந்த விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் நாணயங்களை கைப்பற்றினர்16 மற்றும் 17-ஆம் […]
700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்
மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 15 செ.மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பதல்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் ரயில் உள்ள 700 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு, ராணுவம்,காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் […]
படகில் சென்று பசியமர்த்தும் பாஜக எம்எல்ஏ..!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு, பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது சொந்த செலவில் உணவு தயாரித்து, அதை படகு மூலம் கொண்டுசென்று விநியோகித்து வருகிறார்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அசாம் அம்தய் தொகுதி பாஜக எம்எல்ஏ மிரினால் சாய்கியா என்பவர், தனது சொந்த செலவில் உணவு […]
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.
சற்றுநேரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பாஇன்று காலை 10 மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா அறிவிப்பு.இன்றே பதவி ஏற்பு நிகழ்வை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க முடிவு – எடியூரப்பா.கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார்.பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்வு
பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இரு மாநிலங்களில் சேர்த்து மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
பாலிவுட் நடிகரிடம் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு விற்ற ஸ்டார் ஹோட்டல்.!
சண்டிகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு வாங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் தனது ஷூட்டிங்கிற்காக சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதிகாலை உடற்பயிற்சிக்கு பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் 2 வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்த வாழைப்பழத்திற்கான பில்லை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.2 வாழைப்பழங்களுக்கு ரூ.442க்கு பில்லடித்து கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். வாழைப்பழங்கள் 375 ரூபாயும், […]
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. எடியூரப்பா முதல்வராவது டவுட்.. காரணம் என்ன தெரியுமா?
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு, கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லை என்ற பழமொழி தற்போது நான்கு பொருந்திப் போகிறது.இரண்டு நாட்கள் பட்டினியாக கிடந்தவரின் முன்பு, சுடச்சுட பிரியாணி வைத்துவிட்டு, சாப்பிடாதே என்று கைகளை கட்டிப் போட்டால், அவர் எந்த மாதிரி மனநிலையில் இருப்பாரோ, அதே மாதிரி மன நிலையில்தான் தற்போது எடியூரப்பாவும் இருக்கிறார்.காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கலைந்தாகிவிட்டது. ஆனால், இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை பாஜக. இதற்கு ஒரு முக்கிய காரணம் […]
மாநிலம் தாண்டிய மனிதாபிமான செயல்.ரியல் ஹீரோ “அபி சரவணன்”.!
தமிழகத்தில் எங்கே யார் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவி செய்து வருபவர் தான் நடிகர் அபி சரவணன் தற்போது அசாம் மாநிலத்தில் அதிகமான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் இறந்தும் போய் உள்ளனர் பல லட்சக்கணக்கான மக்கள் வீடு உடமைகளை இழந்து பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய […]
சமூக வலைதளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் விவரங்களை எளிதில் அடையாளம் காண நடவடிக்கை.!
சமூக வலைதளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் விவரங்களை சமூக வலைதள நிறுவனங்களால் வழங்க முடியும் என ஐஐடி பேராசிரியர் மதுசூதனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காண, சமூக வலை தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி, ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது யூ டியூப் தளங்களில் வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் […]
பொண்ணு பொறந்ததுக்கு… வாட்ஸ்அப்பில் டிபி வைத்த அம்மா – ஓடி வந்த 3 அப்பாக்கள்.
அம்மா சொன்னால் மட்டுமே ஒரு குழந்தைக்கு அப்பா யாரென்று தெரியும். ஒரே குழந்தைக்கு மூன்று பேர் சொந்தம் கொண்டாடினால் யார் அப்பா என்று அந்த பெண் சொன்னால்தான் தெரியும். இப்படி ஒரு விசித்திரமான சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. சப்னா மைத்ரா என்ற அந்த பெண்ணை நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் கணவர் தீபன்கர்பால் அனுமதித்தார். அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிள்ளை பிறந்தது சுகப்பிரசவம்தான், அதற்குப்பிறகுதான் பிரச்சினையே கிளம்பியது. பிறந்த பிள்ளையை போட்டோ எடுத்து டிபி […]
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே ரூ 2.70 கோடி கள்ள நோட்டு பறிமுதல் போலீசார் அதிரடி
ஆந்திரமாநிலம் குப்பம் மாவட்டம் (முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதி) ராம்குப்பம் அடுத்த விஜிலாபுரம் Uகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.உடனே விரைந்த போலீசார் திருப்பதியை சேர்ந்த 3 பேரையும் குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு நபரையும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் ருபாய் கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர்.இந்த கும்பல் […]
இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது:-நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் […]
குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்துவருகின்றன. எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. அதேபோல் அந்த மாநிலத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் […]
சந்திராயன்-2 செயற்கைக்கோள் செப்டம்பர் 7-ம்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்
சந்திராயன்-2 செயற்கைக்கோள் செப்டம்பர் 7-ம்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் – மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேட்டிதூத்துக்குடி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ சமீபத்தில் சந்திராயன்-2செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த திட்ட பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து விஞ்ஞானிக்கு மூக்கையா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சந்திராயன்-2செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட […]
வீட்டிற்கு ரூ.128 கோடிக்கு மின் கட்டண ரசீது அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்த முதியவர்
உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் நகரை அடுத்த சாம்ரி கிராமப் பகுதியில் ஷமீம் என்ற முதியவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது சிறிய வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக, 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் கட்டணமாக செலுத்தக் கோரி ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க சென்ற அவரிடம், கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறி அதிகாரிகளும் அதிர்ச்சியளித்துள்ளனர். மேலும் கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டிற்கு […]
பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.
டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி.டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு மலர்வளையம் வைத்து சோனியா காந்தி அஞ்சலி. பாஜகவின் விஜய் கோயல், சீதாராம் யெச்சூரி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி.
கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் தேர்வு ரத்து -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் இந்திய அஞ்சல் துறை தேர்வு நடத்தப்படும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
You must be logged in to post a comment.