உத்திர பிரதேசத்தில் உப்பைத் தொட்டுக்கொண்டு சப்பாத்தி சாப்பிட்டதை வீடியோவாக எடுத்து பகிர்ந்த பத்திரிகையாளர் மீது இரண்டு பிரிவுகளில் உத்தரப்பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவாக தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.பள்ளி வளாகத்தில் அமர்ந்து சப்பாத்தியை உப்பில் தொட்டுக்கொண்டு மாணவர்கள் […]
Category: தேசிய செய்திகள்
தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை..!
விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீந்தி கச்சத்தீவில் கரையேறிய மண்டபம் மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த நல்லிக்குறிச்சி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பொன்னழகு (51), குமார் (40), கணேசன் (56), முருகன் (30) ஆகிய மீனவர்கள் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (31ம் தேதி) மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு, நள்ளிரவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாறை மீது விசைப்படகு […]
9000 தேங்காய்களில் உருவான விநாயகர் சிலை..!
கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் தேதி), விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ‘பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’, ‘சைக்கிள் ஓட்டும் விநாயகர்’, ‘காளையை அடக்கும் விநாயகர்’, ‘கிரிக்கெட் விளையாடும் விநாயகர்’, ‘நீச்சல் குளத்தில் […]
தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம்
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் நியமனத்திற்கு பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கும் தனது நன்றியை தமிழிசை தெரிவித்து உள்ளார் கே.எம்.வாரியார்
ராஜஸ்தான் – கிருஷ்ண ஜெயந்தி விழா
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (23.08.2019 ம் தேதி வெள்ளிகிழமையன்று கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவினை பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடினர்.இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு கொண்டாடுவர். இதே போல் வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (25.08.19) ஞாயிற்றுகிழமை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் சாலை பகுதிகள், கோயில்கள் என […]
தமிழகத்திற்கு முன் மாதிரியாக ராஜஸ்தானிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் பொது மக்கள் ஆர்வம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் வீடு தோறும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஒரு சிலர் தனது வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேமித்தனர். அந்த திட்டம் காலப்போக்கில் கைவிடப்பட்டது. தமிழக அரசும் தீவிர படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு […]
டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் நினைவு அஞ்சலி
ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் | பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நன்றி:ANI கே.எம்.வாரியார்
ராஜஸ்தான் மாநிலத்தில் கொய்யா விளைச்சல் அமோகம்.விவசாயிகள் மகிழ்ச்சி..
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இது யாருக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ சாவாய் மாதோபுர் கிராம விவசாயிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது..ஆம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சாவாய் மாதோபுர் கிராம பகுதிகளில் விளையும் கொய்யா பழங்கள் வட மாநிலங்களிலில் பிரசித்தி பெற்றவை.இங்கு விளையும் கொய்யா பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.கடந்த மாதத்தில் மழை இல்லாததால் விளைச்சலில் பாதிப்பு ஏற்ப்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கொய்யா பழங்கள் அமோக விளைச்சலைக் கண்டுள்ளன.இதனால் […]
டெல்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி
டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை.வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளும் மரியாதை. நன்றி;AN| கே எம்.வாரியார்
மின்னல் வெட்டியதில்செல்போன் கோபுரத்தில் தீ
வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனா்.கனமழையால் தெருவெங்கும் தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.ராஜஸ்தான் மாநிலம் மதப்புா் அருகே இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் வெட்டி செல்போன் கோபுரம் தீப்பிடித்து எாிந்தது.தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
திருப்பதி; தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
தெலுங்கானா மாநிலம் வரங்கால் மாவட்டம் அனுமகொண்டாவில் ஜெகன் ரட்சனா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் ஒன்பது மாத குழந்தை சிரிஷாவுடன் வீட்டின் மாடியில் கடந்த ஜுன் மாதம் 18 தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு முழிப்பு வந்து பார்த்தபோது பால் பாட்டில் மட்டும் உள்ள நிலையில் குழந்தை காணவில்லை . இதனால் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். . அந்த பகுதியில் குழந்தையை இளைஞர் ஒருவர் எடுத்து செலவதை ஜெகன் […]
கர்நாடகா மாநிலம் கபினி அணையிலிருந்து 40,000 கன அடி நீர் வெளியேற்றம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து கபினி அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையிலிருந்து 40,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் நேரில் சென்று அஞ்சலி
மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வேங்கையாநாயுடு ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஜந்தர்மந்தரில் உள்ள இல்லத்திற்கு சென்று சுஷ்மாவின் கணவர் கவுசல் மற்றும் மகள் பாசூரிக்கு ஆறுதல் தெரிவித்தார். நன்றி – ANI கே.எம்.வாரியார்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு…! இந்தியாவிற்கு பேரிழப்பு..
மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர் .தமிழக ஆளுநர், முதல்வர் .துணை முதல்வர், திமுக தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்து உள்ளன.கீழை நியூஸ், சத்தியபாதை குழுமம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமானதிருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவு இந்தியாவிற்கு மாபெரும் இழப்பாகும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக […]
பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளம்
வட மாநிலங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது.தலைநகா் டில்லியில் அவ்வப்போது மழை பொழிந்தாலும் இன்று (06.08.19) நல்ல மழை பெய்து வருகிறது. புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று 06-ம் தேதி காலை 10 மணியளவில் பெய்த மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. கே.எம் வாரியார்
சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.
தனி நபர்களை தீவிரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா.மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகள் கிடைத்தன,மசோதாவுக்கு எதிராக 42 வாக்குகள் கிடைத்ததாக அறிவிப்பு
மாடுகளுக்கு தட்டுப்பாடு:டூ வீலரில் ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி..!
நிலத்தை உழுவதற்கு மாடுகள் கிடைக்காததால், விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்த விவரம் வருமாறு; கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலப்பா. விவசாயியான இவர் தனது நிலத்தில் தக்காளி, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது அந்த செடிகளுக்கு, நிலத்தை உழுது உரம் இட வேண்டும்.வழக்கமாக அவர், நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் […]
முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீது இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி., தெலுங்கு […]
இராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை; இலங்கை அமைச்சர் உறுதி..!
வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று, வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கூறினார்.இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மல்லிகை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம்மாள் என்பவருக்குச் சொந்தமான படகில் இன்ஜின் பழுதானது. இதனால் அந்தப் படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அந்தப் படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது […]
எடியூரப்பாவுக்கு வசதியாகிப்போன 17 பேர் தகுதி நீக்கம்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, […]
You must be logged in to post a comment.