தீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்துக்காக இந்தியா வந்தடைந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் பதற்றம் நிலவியது.டெல்லியின் பஜன்புரா பகுதியில் போராட்டக்காரர்கள் போலிசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலிசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் தலைமைக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் வன்முறைச் சம்பவத்தின் போது சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போராட்டம் நடைபெறும் என்பதால் போலிசார் […]

பாப்பாரப்பட்டியில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது..

தர்மபுரி மாவட்டம் பழைய பாப்பாரப்பட்டி கிராமத்தில் அங்காளம்மன் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறு வேடங்களை அணிந்து அம்மன் அருள் வந்து ஆடினர். சில பக்தர்களுக்கு ஆக்ரோஷமாக அருள் வந்து இடுகாட்டுக்கு சென்று எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் கவ்விக் கொண்டு வந்து அங்காளம்மன் சிலை முன் இட்டனர் இந்த நிகழ்ச்சியானது பார்ப்பவர்களை பெரிதும் பரவசம் அடையச் செய்தது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும் […]

மத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..

மத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்.. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள்(savings,deposit) சேமிப்பு மற்றும் வைப்பு தொகை வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஒரே நேரத்தில் அனைவரும் எடுத்து அமைதியான முறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். இது தேரிழந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் […]

பிப்ரவரி 14, 2019 புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவப்படையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை ராணுவப்படை வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பிப்ரவரி 14-ம் தேதி 2019 ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தத்தில் 44 […]

6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..!

ஆந்திரா : பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருவது ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, 6 நாட்களுக்கு 6 விதமான உணவுகள் வழங்கப்படும் என தற்போதைய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி […]

இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீவிர கண்காணிப்பில் 10 பேர்!

இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீவிர கண்காணிப்பில் 10 பேர்.இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, கண்காணிப்பில் வைத்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர் மருத்துவமனையில் தனி அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் […]

அமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா? பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதன் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமித்ஷா, கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், அமித்ஷா கடந்த சில மாதங்களாக இரு பதவிகளில் இருந்து வந்தார். எனவே, பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது […]

சூரிய கிரகணம்பிரதமர் மோடி ஏமாற்றம்

நாட்டு மக்களை போல் நானும் சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்தேன் -.மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாத‌து ஏமாற்றம் அளிக்கிறது – ..இருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கிரகணத்தை நேரலையில் பார்க்க முடிந்த‌து – பிரதமர் மோடி.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா?-பிரியங்கா காந்தி கண்டனம்

மத்திய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்மையில் மத்திய அரசு நிறுவனங்களான ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. பின், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை நவ.20 நேற்று ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி […]

புதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு

மாநிலங்கள் அவையில் இன்று 21.11.19 கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார்.அப்போது அவர் அவைத் தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடிய போது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது. இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் […]

வாளுடன் நடனமாடிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி..!

குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் கலாசார விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்கப்படக்கூடிய குஜராத்தின் பாரம்பரிய நடனமான வாள் நடனம் ஆடினர். மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை […]

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் கல்வி மாமேதை மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்ததினம் தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அபுல் கலாம் ஆசாத் கல்வியின் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றவர் ஆசாத்.தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951-ல் கோரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவை […]

ஜதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளன. புறநகர் ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் (ஒரே தண்டவாளத்தில்) ஒருவர் பலியானார். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். கே.எம்.வாரியார்

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..!

 கேரள மாநிலம் கொல்லம் ஆட்சியர் அலுவலகம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் பிரகாசன்,வெங்காய விலை உயர்வையொட்டி சலுகை வழங்க உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சர்ட் வழங்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். அதன்படி 2 நாட்களில் 1500 கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து அதற்கு உரிய டி-சட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார். விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் மனதை சாந்தப்படுத்த […]

சர்ச்சைக்குரிய நிலம் தீர்ப்பு,இனி சர்ச்சைகள் முடிவுக்கு வருமா.?

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில்இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இருந்துவந்த நீண்ட பிரச்னை, இந்தத் தீர்ப்பின் மூலமாக ஓரளவுக்கு முடிவுக்கு […]

முட்டை சாப்பிடும் போட்டி, இறுதியில் பலியான பரிதாபம்.!

உத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் ( வயது 42). இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர். அதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தய தொகையாக 2 ஆயிரம் ரூபாய் […]

டெல்லியில் மாசுபாடு, பிரியங்கா காந்தி ‘பர பர’ ட்விட்டர் பதிவு.!

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.! டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடையா குழந்தைகள், வேலைக்கு செல்வோர், சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காற்று மாசுபாட்டு பிரச்னையை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். 1952-ல் லண்டனில் ஏற்பட்ட மிக மோசமான காற்று மாசுபாட்டால் 12 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்னையை […]

அயோத்தி’வழக்கு’ விரைவில் தீர்ப்பு, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம்தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அன்று தவறினாலும், 14 அல்லது 15-ம் தேதி கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீர்ப்புக்காக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அயோத்தியிலும், உத்திரபிரதேசத்தின் காஜியாபாத்திலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்தியா முழுவதுமே பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. […]

“பேய் இருப்பதாக நிரூபித்தால் 50 ஆயிரம் பரிசு..!” – கலெக்டர் அறிவிப்பு

பேய் உள்ளது என்றும், பில்லி – சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என்றும் நிரூபித்தால், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என, ஒடிசா மாநில கலெக்டர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் விஜய் அம்ருதா குலாங்கே. இந்த மாவட்டத்தில் உள்ள கோபபூர் மற்றும் ஜெகன்நாத் பிரதா கிராமங்களில் சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து அவர்கள் மந்திரவாதிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பில்லி – சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய மந்திரவாதிகள், பாதிக்கப்பட்டவர்களின் […]

தங்கம் வென்றார் தமிழக வீரர்..!

சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.சீனாவின் வூஹான் நகரில் 7வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!