கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17, 1756)

தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் […]

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891).

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். […]

இந்தியத் தொழில்துறையின் முக்கியமானவர், பத்ம விபூசண் விருது பெற்ற ஜி.டி.பிர்லா பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 10, 1894)

ஜி.டி.பிர்லா (கன்சியாம் தாசு பிர்லா Ghanshyam Das Birla- G.D. Birla) ஏப்ரல் 10, 1894ல் ராஜஸ்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள பிலானி எனும் சிறுநகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தையும் வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி.டி.பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் […]

உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1973)

பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) அக்டோபர் 25, 1881ல் ஸ்பெயின் (எசுப்பானியா) நாட்டிலுள்ள மலகா என்னுமிடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா, மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் […]

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 7, 2001).

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல்(ஹானர்ஸ்) படித்தார். பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். சர்.சி.வி. இராமனின் கண்காணிப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்ட இராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலுள்ள […]

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938).

கோ.நம்மாழ்வார் (G. Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007ம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் […]

எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5,1901).

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) ஏப்ரல் 5,1901ல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் பிறந்தார். ஒரு வயதில் தன் தாயை இழந்தார்.பள்ளி இறுதி ஆண்டில் தன் தந்தையையும் இழந்து துன்பப்பட்ட சமயம் சாஸ்திரியார் என்ற ஆசிரியர் இவரை ஆதரித்து ஊக்கம் கொடுத்தார். பிறகு நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது புகுமுகப்பு வகுப்பு (intermediate class) படித்து விட்டு, திருவனந்தபுரத்தில் இருந்த மஹாராஜா கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார். […]

தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக உழைத்த, பத்ம பூசண் விருது பெற்ற தொழிலதிபர், வள்ளல் ராம.அழகப்பச் செட்டியார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 5, 1957).

ராம.அழகப்பச் செட்டியார் ஏப்ரல் 6, 1909ல் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21வது வயதில் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்போது பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனுடன் தோழமை கொண்டிருந்தார். சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி, லண்டனில் பயிற்சி பெறும் முதல் இந்தியராக […]

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 4, 1855).

மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், […]

உணவுகளின் அரசன், உலக புகழ்பெற்ற நம்ம இட்லி தினம் இன்று (30 மார்ச்)

தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. சவுத் இந்தியன் ஃபுட் என்று வடநாட்டவர்கள் மனதில் இருப்பது இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம். உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க பிரபலமான உணவாக இருக்கிறது. மார்ச் 30-ஆம் […]

இராமநாதபுரத்தில் பாதுகாப்பு கவசங்களுடன் காஸ் சிலிண்டர் சப்ளை பணி..ரோட்டரி சார்பாக முக வசம் வினியோகம்..

இராமநாதபுரம் நகரில் உள்ள வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பொதுமக்கள் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து, கையுறை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இராமநாதபுரம் நகரில் முன் மாதிரியாக செயல்படுத்திய வாலியா காஸ் டீலர் பங்குதாரர்கள் ரோட்டரி நிர்வாகிகள் பிஆர்என் ராஜாராம்பாண்டியன்,  பிஆர்என் திருமூலர் உள்ளிட்ட சகோதரர்களின் பணியை பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. முக கவசம் வினியோகம்:- இராமநாதபுரம்  ஈஸ்ட் கோஸ்ட்  ரோட்டரி சங்கம், ஜெகன் சுரேஷ் நினைவு […]

அமெரிக்க வானியலார் ஆல்ட்டன் ஆர்ப் பிறந்தநாள் இன்று (மார்ச் 21, 1927)

ஆல்ட்டன் கிறித்தியன் சிப் ஆர்ப் (Halton Christian Chip Arp) மார்ச் 21, 1927ல் நியூயார்க் நகரில் பிறந்தார். அவர் மும்முறை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு நான்கு பெண்களும் ஐந்து பேரர்களும் உண்டு. அவருக்கு ஆர்வார்டு கல்லூரி இளநிலைப் பட்டத்தை 1949ல் வழங்கியது. அவருக்கு முனைவர் பட்டத்தை 1953ல் கால்டெக் வழங்கியது. பிறகு அவர் வாசிங்டன் கார்நிகி நிறுவனத்தில் 1953ல் ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது அவர் தனது ஆய்வை மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும், பலோமார் வான்காணகத்திலும் மேற்கொண்டார். […]

பத்ம பூஷண் விருது பெற்ற தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 21, 1923)

திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், மார்ச் 21, 1923ல் நா.மகாலிங்கம் பிறந்தார். அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945ல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், […]

உலகின் சூப்பர் பவர் நாடக மாறிய இந்தியா- உலக நாடுகள் மோடிக்கு பாராட்டு.

கொரனோ உலகம் முழுவதும், மிக பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய நிலையில் 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், இதுவரை 150 ற்கும் குறைவான நபர்களே கொரனோ அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மூவர் கொரனோ தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அண்டை நாடான சீனாவில் உருவான கொரனோ, மற்ற நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வரும் சூழலில், எல்லைகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவில், கொரனோ தாக்கம் குறைவாக இருக்கிறது.இது அமெரிக்கபத்திரிகைகளை ஆச்சார்யம் அடைய செய்துள்ளது. […]

மார்ச் 18-இன்று இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்…!

ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் மார்ச் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.இந்திய நாட்டின் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான நவீன பாதுகாப்பு சாதனங்களை நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இது பாதுகாப்பு சாதன போர்க்கருவிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, சோதனை என்றும், நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் செயல்படக்கூடிய ஒரு விரிவான தயாரிப்பு அமைப்பாகவும் செயல்படுகிறது.உலகில் ஒரு அரசால் இயக்கப்படும் பாதுகாப்பு சாதன தொழிற்சாலையில் இது மிகப்பெரியது ஆகும். இந்தியா, […]

இந்திய தொழிலதிபர், இந்திய தோல் தொழில் முன்னோடி ஏ. நாகப்பச் செட்டியார் நினைவு நாள் இன்று (மார்ச் 13, 1982)

ஏ. நாகப்பச் செட்டியார் (A. Nagappa Chettiar) தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரியில் ஆகஸ்ட் 6, 1915ல் பிறந்தார். இவர் ஈடுபட்ட தோல் வியாபாரம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஒரு பெரிய வணிகக் குழுமமாக வளர்ந்தது. வெளிநாட்டு தோல் ஏற்றுமதியில் ஈடுபட்ட இந்தியாவிலிருந்த இடைத்தரகர்களை நீக்குவதற்கு இவரது முயற்சிகள் பெரிதும் உதவின. பாதியாக இறுதி செய்யப்பட்ட தோல் பொருட்களை ஏற்றுமதி செய்வதை பிரதானமாக கருதியக் காலத்தில், முழுமையாக இறுதி செய்த தோல்பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற […]

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சமூக சீர்திருத்தவாதி, சாவித்திரிபாய் பூலே நினைவு தினம் இன்று (மார்ச் 10, 1897)

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து […]

உலக மகளிர் தினம் (International Women’s Day) இன்று (மார்ச் 8)

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் […]

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு நினைவு நாள் இன்று (மார்ச் 2, 1949).

சரோஜினி நாயுடு அவர்கள் பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள “ஹைதராபாத்” மாநகரில் பிறந்தார். அவருடைய தந்தை அகோர்நாத் சடோபத்யாயா பெரிய கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மிகப்பெரிய செல்வந்தர். தாய் பரத சுந்தரி இவர் ஒரு பெண் கவிஞர். இவரது உடன்பிறந்தவர்களோடு சேர்த்து மொத்தம் 8 பேர் அவரது குடும்பத்தில் இருந்தனர். ஆனால், இவரே அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. சரோஜினி நாயுடு தனது சிறுவயது முதலே கல்வியின் மீது ஈடுபாடு […]

தேசிய அறிவியல் தினம் இன்று (பிப்ரவரி 28, 1928), ஆசியாவின் முதல் தமிழக (திருச்சி) நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் (C.V. Raman)

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!