சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி நியமனம்…

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே  க்ரீன் பீச் ரிசார்டில் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூருதீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளர் கோவை அம்ஜத் குர்ஆன் வசனம் ஓதி துவக்கி வைக்க, மாநில பொருளாளர் தமிம் அன்சாரி வரவேற்றபுரையாற்றினார். இந்நிகழ்வை மாநில துணை செயலாளர்கள் சுல்பிக்கார் மற்றும் காயல் இர்சாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இக்கூட்டத்தில் தமுமுக-மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் , தமுமுக பொதுச்செயலாளர் பேரா. ஹாஜாகனி, மமக துணை […]

கீழக்கரையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பற்றி விழிப்புணர்வு முகாம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப் பகுதியிளில் இன்று 29.9.2020 ராமநாதபுரம் மாவட்டத் தலைமை நீதிபதி மகிழேந்தி, சட்ட பணி ஆணையக் குழு தலைவர் ரங்கராஜ், மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்புக்குழுவினர் வருவதற்கு முன்பு பொதுமக்கள் எப்படி காப்பாற்ற வேண்டும் என்று செய்முறை செய்து காண்பித்தனர். ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நிலைய அலுவலர் சண்முகராஜா […]

டால்மியா நிறுவன தலைவராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜக்மோகன் டால்மியா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 20, 2015).

ஜக்மோகன் டால்மியா (Jagmohan Dalmiya) மே 30, 1940ல் கொல்கத்தா மார்வாரி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அர்ஜுன் பிரசாத் டால்மியா கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு தொழிலதிபர் ஆவார். டால்மியா கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படித்தார். அவர் ஒரு விக்கெட் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் கல்கத்தாவில் உள்ள ஒரு முன்னணி கிரிக்கெட் கிளப்பில் விளையாடி பேட்டிங்கையும் தொடங்கினார். அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, டால்மியா தனது தந்தையின் நிறுவனமான எம்.எல். டால்மியா […]

மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், வைக்கம் வீரர், ஈ.வெ.இராமசாமி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17, 1879).

ஈரோடு வெங்கட்ட இராமசாமி (E.V. Ramasamy) செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர். 1929ல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் […]

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11,1921).

சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) டிசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை […]

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7, 1925).

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (M. S. Swaminathan) ஆகஸ்ட் 7, 1925ல், தமிழ்நாட்டின் கும்பகோணம் குடந்தையில் பிறந்தார். பெற்றோர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.கே. சம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மல் சம்பசிவன். “சாத்தியமற்றது” என்ற வார்த்தை முக்கியமாக நம் மனதில் உள்ளது என்பதையும், தேவையான விருப்பத்தையும் முயற்சியையும் கொடுத்தால், பெரிய பணிகளைச் செய்ய முடியும் என்று சுவாமிநாதன் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர் சம்பசிவம், கும்பகோணத்தில் “தனது வெளிநாட்டு ஆடைகளை எரிப்பதில்” முன்னிலை […]

பத்மசிறீ, பத்மபூசண் விருது பெற்ற இந்திய நீரியல்துறை அறிஞர் வா.செ.குழந்தைசாமி பிறந்த தினம் இன்று (ஜூலை 14, 1929).

வா.செ.குழந்தைசாமி ஜூலை 14, 1929ல் கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் […]

இந்தி நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று-அச்சத்தில் சினிமா பிரபலங்கள்..

இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது […]

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1920ல், கிருஷ்ணன், கொல்கத்தாவின் சி.வி.ராமன் அறிவியல் சாகுபடிக்கான இந்திய சங்கத்தில் ஏராளமான திரவங்களில் ஒளி சிதறல் மற்றும் அதன் […]

மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்!

மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்! திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு காளியம்மன் கோவில் அருகே காய்கனி கடை சந்தை நடைபெற்று வந்தது. இங்கு கொடைக்கானல் மற்றும் வத்தக்குண்டு சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கனிகளை தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்துவாங்கித் சென்ற போதிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் மிக நெருக்கடியாக வந்து சென்றுகொண்டிருந்த இருந்த நிலையில் தற்போது நாட்டில் பரவிவரும் கொரொனா நோய்தொற்று காரணமாக […]

முக கவசம் கட்டாயம்.. அணியாவிட்டால் அபராதம்.. மதுரை மாநகராட்சி கண்டிப்பு..

முக்கவசம் அணிவது கட்டாயம் என மதுரை மாநகராட்சி இன்று (20/05/2020) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் மதுரை மாநகராட்சி அதிகாரிகள். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும்  முக கவசம் அணியாத நபர்கள் யாராக இருந்தாலும்  100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் IAS இன்று அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில் மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு […]

தமீழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மெழுகுவர்த்தி கையிலேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

உடன்குடி ஒன்றியம், மெஞ்ஞானபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் தமீழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மெழுகுவர்த்தி கையிலேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுரேந்தர், இசிஎபா நா.முத்தையாபுரம் முகாம் அமைப்பாளர் இளங்கோ, குட்டி சிறுத்தைகள் கனிமொழி, கிஷோர், இசைபிரியா, நவீனா, இராபர்ட், உள்ளிட்ட மாணிக்கபுரம் முகாம் இளஞ்சிறுத்தைகளுடன் நானும் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம். இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் […]

செங்கம் அருகே இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்- 6 பேர் கைது!

செங்கம் அருகே இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்- 6 பேர் கைது! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ரூபன் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாயக்கதூரான் இவரது மகன் தேவேந்திரன் (43) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஒருவருக்கொருவர் ஆபாசமாக திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். மேலும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் இரு […]

எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே- உலக அன்னையர் தினம் (Mother’s day).

அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் 1908ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை. என்ற முதுமொழிக்கேற்ப நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழி காட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னை களுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி […]

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

1973-ல் வெளியான ‘ பாபி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரிஷிகபூர்.மூச்சு திணறலால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று29.04.2020 சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இந்தி நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். 1988-ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் அவர் அறிமுகமானார்.இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் கே.எம்.வாரியார்நிருபர்.வேலூர்

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1897)

மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், […]

ஆன்லைன் தேர்வு சாத்தியமான அல்லது ஆஃப்லைன் தேர்வுகள் என்றால் எப்போ நடத்துவது யு.ஜி.சி.க்கு நிபுணர்கள் குழு பரிந்துரை.

ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தலைமையிலான இரண்டு குழுக்கள் பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளன.தேர்வு நடத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள பல்கலைக்கழகங்களால் ஆன்லைன் தேர்வுகளை நடத்தலாம் அல்லது பேனா மற்றும் காகித தேர்வு ஊரடக்கு பின் நடத்தலாம் என வெள்ளிக்கிழமை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த வாரம் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிடும்.பரீட்சைகளை நடத்துதல், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய […]

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு இந்தியா தலைமை.

மே மாதம் உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையகத்தில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இதன்படி உலக சுகாதார சட்டமன்ற மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் மே 22 அன்று இந்தியா முன்னிலை வகிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய குழுக்களிடையே ஒரு வருடம் சுழற்சி முறையில் நடத்தப்படும் தலைவர் பதவிக்கு இந்தியாவை உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா குழு பரிந்துரைத்துள்ளது. […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா..சுகாதார துறை கட்டுப்பாட்டில் கோவில் பகுதி..

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் பட்டரின் தாயிக்கு கொரானா ஏற்பட்டுள்ளதால் கோவில் முழுவதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தினமும் 6 கால பூஜை நடைபெற்று வருகிறது. சுவாமி, அம்பாள், பரிகார மூர்த்தி என  பூஜை செய்ய  நூற்றுக்கும் மேற்பட்ட  பட்டர்கள் பூஜை செய்கின்றனர். இந்நிலையில் தானப்ப முதலி தெருவை சேர்ந்த பட்டரின் தாய்க்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிகுறியுடன் தென்பட்டார் இன்று […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!