மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினருக்கு முதல் பரிசு..

இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் […]

கீழக்கரையில் சிசிடிவி கேமராக்கள் வழங்கிய செல்வந்தர்கள் .! சார்பு ஆய்வாளர் வேண்டுகோள்.!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா.! கொடியேற்றத்துடன் துவக்கம்.!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு இறை […]

திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா

திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமரிசையாக நடந்தது..! ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் இராமநாதபுரம தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்ற பிடாரி அம்மன் பூக்குழி உற்சவ விழாவையொட்டி கிடந்த ஏப்ரல் 28 தேதி கொடியேற்றதலுடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து மது குடம் தலையில் ஏந்தி மீதி உலா வந்தனர் முன்னதாக கோவில் பூசாரி மற்றும் பக்தர் கையில் தீச்சட்டி உடன் வீதி உலா வந்தனர். இன்று […]

கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்:

கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்: தரமாகவும் விரைந்தும் கட்டித்தர கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே எம்.ஆர். பட்டினம், பாசிப்பட்டினம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெருமளவிலான மீனவ மக்கள் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த பாசிகள் கடல் மணற் பரப்பில் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் குறைவான விலைக்கே விற்பனையாகிறது. இதனால் இந்தப்பகுதியில் கடற்பாசி உலர்தளங்கள் அமைத்து அதன் மூலம் […]

ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு மாணவர்களுக்கும் பயிற்சி .!

போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு ஒரு ‘அடிக்சன் கில்லர்’ இருப்பது போல் ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து மீள்வதற்கு தொடங்கப்பட்ட நல்ல ஒரு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அரிய ஒரு வாய்ப்பு. இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு பெரியபட்டினம் கால்பந்து குழு சார்பாக கோடை கால கால்பந்து மற்றும் விளையாட்டு பயிற்சி முகாம் – போன் அடிக்க்ஷனில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் […]

திருவாடானை பண்ணவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் அமைந்துள்ள பண்ணவயல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முத்துமாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன்  மங்களகரமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,  மலர் அலங்காரம், தீபாராதனை போன்றவை  பக்தி சிறப்புடன் நடைபெற்றன. மேலும், ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி கும்மி, கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை […]

ஏர்வாடி மத நல்லிணக்கத்திற்கான திருவிழா ஆலோசனை கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது. திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் […]

கீழக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான்(சி.வி.சி.) மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட மாணவரணி தளபதி தமிம், மாவட்ட தொண்டரணி கார்த்திக் ,சுகுமார், மாவட்ட […]

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் இணைந்து ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர் ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பயணியர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் […]

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம் .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேட்டுப்பாளையத்தை சார்ந்த பொது மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தரக் கோரியும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான பயனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிஐடியு பொது தொழிலாளர் […]

திருவாடானை தீயணைப்பு நிலையம் அருகே புதிய சாலை சேதமடைந்ததாக புகார்.

.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு  உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். […]

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்.! போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!

*பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதிப்பு* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை அப்புறப்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேட்டுப்பாளையம்  நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் மற்றும் சவுண்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் சாலைகளில் பொதுமக்கள் […]

நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கத் தடை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் […]

மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலய மக்கள் மேட்டுப்பாளையம் வீதிகள் வழியாக குருதோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். […]

வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றுக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை திருப்புல்லாணி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பற்றி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நடத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்களையும், அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும் பற்றி எடுத்துரைத்தனர் விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கு, தங்களுடைய ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் […]

சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை..!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மாநில அளவிலான செயற்குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருட காலங்களாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற  தவறிவிட்டதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.இதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. […]

திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் 45 பவுன் நகை திருட்டு.!

திரு உத்தரகோசமங்கை ஆலய கும்பாபிஷேகத்தன்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் சுமார் 45 பவுன் நகை திருட்டு; கொள்ளையர்கள் கைவரிசை செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது   ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கடந்த நான்காம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது    இதில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான […]

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புகார்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது இங்கு 60 லட்சம் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளிக்கு அதங்குடி, நெய்வயல், அல்லிக்கோட்டை, இளங்குன்றம், டி நாகனி, மாவிளங்கை, பூவாணி மற்றும் சாந்திபுரம், ஒரிக்கோட்டை சின்ன ஓரிக்கோட்டை சேந்தனி பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக்கு அருகே […]

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு சட்டை அணிந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தினகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது பொது விநியோகத் திட்டத்தில் தனித்துறையை உருவாக்கிடவும் உணவுப்பொருள் அனைத்தையும் பொட்டலமாக வழங்கிடவும் எடை தெராசுடன் பி ஓ எஸ் மிஷின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!