சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள. கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் சோழவந்தான் நகர அரிமா சங்க பள்ளியின்தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தேசியகொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக முதல்வர் செல்வம் வரவேற்றார் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியராக ராபின்சன்செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ராஜாத்தி, அனைவருக்கும் கல்வியியக்க பகல்நேரபாதுகாப்பு மைய […]
Category: தேசிய செய்திகள்
குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்க உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).
காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க் கல்வியைப் பெற்றார். 1858ல் லைசி நெப்போலியன் என்ற இடத்தில் தன்னுடைய படிப்பை ஆரம்பித்த இவர் பத்து வருடங்களுக்குப் பின் நார்மலே என்ற ஊரில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தார். சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக […]
சோழவந்தான் வளர்ச்சிப் பணிகளை தொடங்குங்கோ: அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்..
மதுரை அருகே, பரவை பேரூராட்சியில் ,1.20 கோடி நிதியை ஒதுக்காமல் பேரூராட்சி செயல் அலுவலர் காலதாமதம் செய்வதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக ரூ.ஒரு கோடியே 40 லட்சம் பணம் நிதி ஒதுக்கியும் , அதில் ரூ.20 லட்சத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கி நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், மீதமுள்ள ரூ.ஒரு கோடியே இருபது லட்சம் நிதியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தாமல், […]
வேலூரில் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு புலம் சார்ந்த பணிகள் நிறைவு விழா !!!
தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை 4 – நாட்கள் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி.அலமேலு தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா […]
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது தமிழக முதல்வர் ஓய்வூதியர்கள் காண தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை எனவே வாக்குறுதலை நிறைவேற்ற வேண்டும் என்று ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து வருகிருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று ஒன்றிய நகரட்சி, பகுதிகளில தர்ணா போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம். சத்துணவு ஓய்வுதியர்களுக்கு 2850க்கு கீழ் வாங்குவோர் அனைவருக்கும் 7850 வழங்க கோரி தனிக்கோரிக்கையை […]
ஆரம்பப்பள்ளி, வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை: அகற்றக்கோரி மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு…
இராமநாதபுரம், ஆக.7 –இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஆரம்பப்பள்ளி மற்றும் வழிபாட்டு தலம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு இன்று மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம், உரப்புளி, சாயல்குடி, கேணிக்கரை பகுதியில் 2, பிள்ளையார்கோவில், தலைமை அஞ்சல் நிலையம், சக்கரக்கோட்டை முனியய்யா கோயில் டி. பிளாக் உள்பட 8 இடங்களில் இருந்த மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், சக்கரக்கோட்டை தொடக்கப்பள்ளி, முனியய்யா கோயில், […]
உசிலம்பட்டியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..
உசிலம்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்; ஈடுபட்டு வரும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் […]
மதுரை வைகை ஆற்றில் தவறி விழுந்த நபர்! தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்..
மதுரை விளாங்குடி பாத்திமாக் கல்லூரி அருகில், இன்று மாலை இருட்டிய பிறகு, வைகை ஆற்றினுள் 40 வயது மதிக்கத் தக்க நபர் தவறி விழுந்து, ஆகாயத் தாமரை செடிகளுக்குள் சிக்கி கிடப்பதாக அந்த வழியே சென்றவர்கள் தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் உயிர் காக்கும் கருவிகளோடு ஆற்றினுள் இறங்கி, அந்த நபரை உயிருடன் மீட்டு மேலே தூக்கி வந்தனர். குடிபோதையில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற […]
தென்காசி நகர்மன்ற தலைவருக்கு பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்த மாணவ மாணவிகள்..
தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் தனது சொந்த செலவில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்ற தென்காசி நகர்மன்ற தலைவருக்கு மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி 10வது வார்டு பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் குழந்தைகளை மதுரை நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் நகர […]
மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல்…தமுமுக, மமக தங்கச்சி மடம் பொதுக்கூட்டம்..
இராமநாதபுரம்,ஆக.7- இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக, மமக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், முறைகேடுகளை கண்டித்து தங்கச்சிமடத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் கைது,பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிப்பு, மணிப்பூர் கலவரம் குறித்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான […]
மத்திய அமைச்சரிடம் நவாஸ் கனி எம்பி கோரிக்கை மனு
ராமநாதபுரம், ஆக.5- மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அளித்த கோரிக்கை மனு: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், உதவி வழங்குதல், மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்கான உதவித் திட்டம் (ADIP திட்டம்), வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தை ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக முகாம்களை நடத்தி, […]
ஞானவாபி மசூதியில் ஆய்வுகள் நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம்..
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது.மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். அதன்படி நேற்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதற்கு எதிர்ப்பு […]
ராகுல் காந்திக்கு மீண்டும் கிடைத்தது எம்.பி. பதவி: ஜெயித்துக் காட்டிய ராகுல்!!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, […]
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “நம் சேவை மையம்”…
இன்று 22/10 2021 வெள்ளிக்கிழமை நேரம் மதியம் 2 மணி முதல் முதல் வடக்குத்தெரு தைக்கா அருகில் “நம் சேவை மையம்” என்ற சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிரவாக குழு உறுப்பினர் முகைதீன் இபுராஹிம் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நண்பர்கள், வியாபார நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையத்தில் அனைத்து விதமான இணையதள சேவைகள் மற்றும் DTDC கொரியர் சேவையும் வழங்கப்படுகிறது.
கல்வி வளர்ச்சி நாள் – எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராசர் பிறந்த தினம் இன்று (ஜூலை 15, 1903).
காமராசர் (காமராஜர்) ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். […]
கீழக்கரையில் கலைஞர் பிறந்த தின சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நலத்திட்டங்கள்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 98 -வது பிறந்தநாளை கீழக்கரை நகர் திமுக சார்பில் நகரச் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் […]
தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம் இன்று (ஜூன் 3, 1924).
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். […]
மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.. “ மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு.. சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது”.. அவருக்கே உரிய பாணியில் பதில்..
மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தன்னைடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். அப்பொழுது அவரிடம் பல்வேறு அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்டது, அதற்கு அவருக்கே உரிய பாணியில் பதில்களை கூறினார். அதன் விபரங்கள் கீழே:- – மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு.. சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது என்றார். எங்களுக்கு எந்த வித தயக்கம் இல்லை நாங்கள் போவது சிலருக்கு குத்தலாக இருக்கும் அவர்கள் தான் எங்களுக்கு தடை விதிப்பார்கள் என்றார் […]
குழந்தைகள் தினம் – குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று (நவம்பர் 14, 1889).
ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru) நவம்பர் 14,1889ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் “சிகப்பு நகை” என்று பொருள், இச்சொல்லிலிருந்து “ஜவஹர்லால்” என்ற பெயர் உருவானது. ‘காசுமீரப் பண்டிதர்’ என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் […]
ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த, இந்தியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர், சர் சி.வி.இராமன் பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1888).
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888ல் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா.சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். வெங்கட்ராமன் […]
You must be logged in to post a comment.