தென்காசி மாவட்டத்தில் தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையில் 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது வழங்க விண்ணப்பங்களை பெற்று அனுப்ப வேண்டியுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் […]

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டுத் தொடர் இலக்கிய கூட்டம்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டுத் தொடர் இலக்கிய கூட்டம் “கலைஞரின் கவிதை நயம்” எனும் தலைப்பில் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் பத்தாவது கூட்டம் அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் […]

மணிமுத்தாறு வனப்பகுதியில் விதைப்பந்துகள் விதைக்கும் பசுமைப்பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை வரையிலான வனப்பகுதியில் லட்சக்கணக்கான விதைப்பந்துகளை விதைக்கும் பசுமை பணி நடந்தது. இந்த பணியில் பள்ளி மாணவ மாணவிகள், போலீஸ் பட்டாலியன்கள், சமூக ஆர்வர்கள் என அனைவரும் பங்கேற்றனர். மணிமுத்தாறு சிறப்பு காவல் பிரிவு ஒன்பதாவது போலீஸ் பட்டாலியன், பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், முக்கூடல் அசிதி பல் மருத்துவமனை, காந்திய அமைப்பு, வனத்துறையினர் இணைந்து மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை வரையிலான வனப்பகுதியில் லட்சக்கணக்கான விதைப்பந்துகளை வீசும் நிகழ்ச்சி […]

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி நகர் அலுவலகம் திறப்பு..

இராமநாதபுரம், செப்.17 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி நகர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நகர் தலைவர் செய்யது அபுதாஹீர் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் அஹமது ஜலீல், சுல்தான் சிக்கந்தர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் அப்துல் காதர் வரவேற்றார்.  மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஹமீது பைசர், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சோமு, பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் பேசினர். சமூக ஆர்வலர் […]

சில தினங்களுக்கு முன்பு துவரிமான் பகுதியில் விபத்தில் சிக்கிய சார்பு ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது..

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில்  திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊரான  விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகில் உள்ள சோலைகொண்டான் பட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது., கீழ மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி ஸ்ரீ அரபின்டோ மீரா பள்ளி […]

ராமநாதபுரத்தில் 2523 பேர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 309 பேருக்கு பணி நியமன ஆணை…

இராமநாதபுரம், செப்.16 – தமிழுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ராமநாதபுரத்தில் நடந்தது. தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அரங்குகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற வேண்டும் என் நோக்கில் நடந்த இச்சிறப்பு முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய முன் பதிவு செய்த 102 நிறுவனங்கள் இங்கு […]

சோழவந்தான் பேரூராட்சி 8 மற்றும் 13வது வார்டுகளில் மக்கள் சபை கூட்டம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8 மற்றும் 13வது வார்டுகளில்  வார்டு குழு கூட்டம் நடந்தது 8வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோழவந்தான் அரிமா சங்க தலைவரும் தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர 13 வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்குவார்டு கவுன்சிலர் வள்ளிமயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார் […]

விபத்தில் சிக்கி காவலர் பலி…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கீழக்கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (32). இவர் நரிக்குடி  காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை நரிக்குடி காவல் நிலையத்திலிருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது நரிக்குடி அருகேயுள்ள மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேஸ்வரனுக்கு எதிரே வேகமாக வந்த லாரியொன்று ராஜேஸ்வரன் மீது பயங்கரமாக மோதியதில் […]

ராமநாதபுரத்தில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது..

இராமநாதபுரம், செப்.16- இராமநாதபுரம்  முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சதக் அறக்கட்டளையின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு அராபிக் துறைத்தலைவர் எம்.ரெய்ஹானத்தில் அதவியா அவர்கள் இறைவணக்கம் செலுத்தினார். கல்லூரி மாணவியர் சேர்க்கைக் குழு உறுப்பினர் ஆர்.தர்ஷினி பிரியங்கா வரவேற்றார். முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.மீரா வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் […]

வட்டார அளவிலான கபடி போட்டி – மாணவ மாணவிகள் ஆர்வம்..

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்ன கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 40 க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 520 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிவப்பிரகாசம் வரவேற்பு உரையாற்றினர் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மானந்தன், பழையனூர் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பறையம்பட்டு தலைமை ஆசிரியர் ராம் ஆகியோர் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர்களாக கமலா பீடம் நிறுவனர் சீனிவாசன் […]

விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்ற அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 16,1925).

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் (Alexander Alexandrovich Friedmann) ஜூன் 17, 1888ல் இசை, நடனக் கலைஞரான அலெக்சாந்தர் பிரீடுமேனுக்கும் பியானோ கலைஞர் உலூத்மிலா இக்னத்தியேவ்னா வொயாச்செக் என்பவருக்கும் புனித பீட்டர்சுபேர்கு நகரில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே உருசிய மரபுவழி மாதாக்கோயிலில் திருமுழுக்கு செய்விக்கப்பட்டுள்ளார். வாழ்நாளின் பெரும்பகுதியைப் புனித பீட்டர்சுபர்கில் கழித்துள்ளார். இவர் புனித பீட்டர்சுபர்க் அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று 1910ல் பட்டம் பெற்றார். பிறகு புனித பீட்டர்சுபர்க் சுரங்க கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பிரீடுமேன் பள்ளியில் […]

சிவகங்கையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா..

சிவகங்கை: தமிழ்நாடு முதலமைச்சரால், தொடங்கி வைக்கப்பட்டுள்ள,  “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்” தொடக்க விழாவினை, முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரால்,   தொடங்கி வைக்கப்பட்டுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்”படி, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினை,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், தலைமையில்  சட்டமன்ற உறுப்பினர்கள் […]

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா..

மதுரையில் டாக்டர் APJ அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தலைவர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில்., தேசிய நல்லாசிரியர்  விருது பெற்ற  அலங்காநல்லூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர்  தா.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கு செனாய்நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர்  திவ்யா, சமூக ஆர்வலர்கள் மக்கள் தொண்டன் க.அசோக்குமார், சேக்மஸ்தான், எம்மால் இயன்றது கண்ணன், இல்ல காப்பாளர்கள் கார்த்திகேசன், அறிவழகன் […]

முப்பெரும் விழா..அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடகத் திருவிழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடகத் திருவிழா, இளம் விவசாயிகள் படை உருவாக்கம், விளையாட்டு பொருட்கள் நன்கொடையாக வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்.  ஆசிரியை அனுசியா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் மயூரி மற்றும் ஆசிரியை அருவகம் ஆகியோர்  அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்தனர். அனைத்து […]

மன்னாடி மங்கலம் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகர் முழுவதும் போஸ்டர்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடி மங்கலம் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோழவந்தான் மன்னாடி மங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதில் 16 மாதங்களாக மண்ணாடி மங்கலம் ஊராட்சியில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது மற்றும்  வேலை கோரும் தலித் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் வன்கொடுமை செய்வதற்கு தனது ஊராட்சி செயலாளர் பதவியை பயன்படுத்துவது மற்றும் 21 ஆண்டுகளாக […]

தேர்போகியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தாசில்தார் ஆய்றிக்கை சமர்ப்பிப்பு..

இராமநாதபுரம், செப்.15- இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகே புதுவலசையில் வீடு கட்டி 20க்கும் மேற்பட்டோ வசிப்பதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்து முறையிட்டனர். இது தொடர்பாக கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார். இதனையடுத்து புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில்  வட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்போது தேர்போகியில் அரசு புறம்போக்கு நிலம் கற்றுச்சுவர் அற்ற மேற்கூரை அமைத்து ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டது. […]

மகளிர் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடும் அரசு திமுக: அமைச்சர் ராஜகண்ணப்பன் மகளிர் உரிமை திட்டம் துவக்க விழாவில் புகழாரம்..

இராமநாதபுரம், செப்.15- இராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5,430 மகளிருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி இன்ற துவக்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று  துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கும் […]

மதுரையில் மகளிர் உரிமைத் திட்டம் துவக்க நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு..

மதுரை மாநகரில் எல்லீஸ் நகர் தனியார் திருமண மண்டபத்தில்,  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை எம்.பி.சு. வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, வடக்கு […]

சோழவந்தான் பேரூராட்சி வார்டு 1 மற்றும் 2ல் குழு கூட்டம் நியாய விலை கடை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..

சோழவந்தான் செப்  சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது     இந்தக் கூட்டம் ஆறு மையங்களில் நடைபெற்றது 1 மற்றும் 2வது வார்டுக்கு பேட்டை குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நடந்தது இக்கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை தாங்கினார் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கவுன்சிலர் செல்வி சதீஷ்குமார் வரவேற்றார் சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் கூட்டத்தின் நோக்கம் […]

பாரத சாரண சாரண இயக்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாரண மாவட்ட செயற்குழு கூட்டம், திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்டக் கல்வி அலுவலர் கி.காளிதாஸ், மாவட்ட தலைவர் மணி, மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், இளம்பரிதி, மாவட்ட ஆணையர்கள் சுஜாதா, மு.சேகர், அன்னாள் கிருபை, ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலர் ம.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பாரத சாரண இயக்கத்தின் உறுதி மொழியை கூறி பதவி ஏற்று கொண்டனர். செங்கம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!