மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பண வசூல் செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்கள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருப்பதாக கூறி டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட பலர் […]
Category: தேசிய செய்திகள்
வாடிப்பட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் கிரசர் வண்டிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாலமேடு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிரஷர் நிறுவனங்கள் அதாவது கல்குவாரிகள் உள்ளது இந்த குவாரிகளில் இருந்து மணல் ஜல்லி உடை கற்கள் போன்ற பொருட்களை ஏற்றி செல்லும் கிரசர் வண்டிகள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக வாடிப்பட்டி முதல் பாலமேடு வரை சாலை மிக மோசமாக உள்ள நிலையிள் கிரசர் வண்டிகளுக்கு பின்னும் பின்னும் செல்லும் […]
அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொத்தமான செங்கல் சூளையில் காயமடைந்த கல்லூரி மாணவன் பலி..
மதுரை செப் 21: அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொந்தமான செங்கல் சூளையில், சிமெண்ட்சிலாப் தலையில் விழுத்ததில் கல்லூரி மாணவன் பலியானார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார்கொட்டாரம்,கருப்பப்பிள்ளையேத்தலச் சேர்ந்தவர் சரண்குமார்(19). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படித்து வந்தார். பகுதி நேரமாக சிலைமான் அடுத்த புளியங்குளத்தில் இருப்பரங்குன்றம் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் ராமகிருஷ்ணன் (19) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று […]
மதுரையில் நீதிமன்ற ஊழியர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை…
மதுரை, செப். 21: நீதிமன்ற ஊழியர் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து, எஸ்எஸ் காலனி போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை, எல்லீஸ் நகர், அப்துல்கலாம் 1வது தெருவைச் சேர்த்தவர் லட்சுமணன் (53). இவரது, மனைவி கபா. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். லட்சுமணன் சிவகங்கை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். தேற்று மதியம், வீட்டின் அருகில் வசிக்கும் தனது அம்மா வீட்டிற்கு லட்சுமணன் சென்றுள்ளார். பின், நீண்ட நேரமாக விட்டில் உள்ள அறையில் இருந்து […]
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் ஆய்வு..
மதுரை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , உட்பட பலர் உடன் உள்ளார்கள். செய்தியாளர் வி காளமேகம்
சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் எதிரொலி மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை..
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா ப்ஃரைட் ரைஸ் , சிக்கன் உள்ளிட்டவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர். மதுரை மாநகரின் பைபாஸ் சாலை , டவுண்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்கள் மசாலாக்களை சேர்த்த இறைச்சிகள் 70 கிலோ அளவிற்கு […]
சோழவந்தானில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி..
சோழவந்தான்,செப்.20- சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் வயது 25 சோழவந்தான் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மில் மின்சாரம் தடைபட்டது. இதை சரி செய்ய விக்னேஷ் டிரான்ஸ்பார்மரை […]
இராமநாதபுரத்தில் வருவாய் துறையினர் கோரிக்கை பட்டை அணிந்து பணி…
இராமநாதபுரம், செப்.20- தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருவாய் துறையினரின் கோரிக்கை பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிகுமார் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்கு கூடுதல் பணியிடங்கள் உடனே வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஊழியர் விரோத போக்கு செயல்பாடுகளை விசாரித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள் மீது புனைந்த […]
ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் நாளை மின் தடை..
இராமநாதபுரம், செப்.20- இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.21) நடைபெற உள்ளது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன். செட்டியமடை, சூரமடை, பெருமாள் மடை தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், ஏ.ஆர் மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் […]
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைச்சர் உதயநிதி மதுரையில் பேட்டி..
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை. -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: *பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த […]
மதுரையில், சிறை கைதிகளுக்கு, சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடக்கம்…
மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, சிறப்பு கவனம் செலுத்தி இந்த எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், தமிழக முழுவதும் 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் சிறைகளில் உள்ள *எழுதப் படிக்க தெரியாத சிறைவாசிகள் 1249 பேர் கண்டறியப்பட்டு* அவர்களுக்கு 6 மாத கால சிறப்பு எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் என்னும் […]
மதுரை அருகே, பண மோசடி செய்த மின்வாரிய அதிகாரி தலைமறைவு… பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகை…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், பாலமேடு மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் மனைவி சுதா மற்றும் அவரை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 45 லட்சம் அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகளாக திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பணத்தை இழந்த சுதா மற்றும் அவரை சேர்ந்தவர்கள் பணத்தை கேட்டு […]
மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்ல ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை நீரில் வசமாக மாட்டிய உயர் ரக (மினி கூப்பர்) கார்..
மதுரை திருப்பரங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டு 10 வருடங்கள் மேல் ஆகிறது அன்றிலிருந்து இன்றுவரை மேலே செல்லும் சாக்கடை நீர் வடிகால் இல்லாததால் சுரங்கப்பாதை வழியாக தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி தண்ணீரில் மாட்டிக்கொள்ளும் நிலை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற […]
மதுரையில் காரின் டயர் வெடித்து விபத்து; உரிய நேரத்தில் உயிரை காப்பாற்றிய ஏர்பேக்..
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 29) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில் விபத்தின்போது காரில் இருந்த ஏர் பேக் உரிய நேரத்தில் வெளிவந்து காரை ஓட்டி வந்த சத்யாவை காப்பற்றியது. இதனால் சத்யா லேசான காயத்துடன் மருத்துவமனைக்கு […]
கீழக்கரை அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு..
இராமநாதபுரம், செப்.19- நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த 16 ஆம் தேதி ஷவர்மா, பிரைடு ரைஸ், நான், தந்துாரி உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் சிறுமி ஒருவர் இறந்தார். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 3 சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 43 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து மாநிலம் உள்ள அசைவ உணவு ஓட்டல்கள், […]
ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோகளுக்கு பர்மிட் வழங்க எதிர்ப்பு: தொழிலாளர்கள் போராட்டம்..
இராமநாதபுரம், செப்.19- ராமேஸ்வரம் தீவிற்கு புதிய ஆட்டோ பர்மிட்கள் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி நிர்வாகி சி.ஆர். செந்தில் வேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்க ஏஐடியுசி மாவட்ட செயலாளர் எம்.செந்தில், மாவட்ட தலைவர் சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், தாலுகா செயலாளர் ஜி.பாண்டி, தாலுகா தலைவர் ஏ.கே முனிஸ்வரன், ஏஐடியுசி ஆட்டோ சங்க […]
செங்கம் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் – ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு..
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி செங்கம் வட்டார வள மையத்திற்குட்பட்ட 0-18 வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துக்காபேட்டையில் மாநில திட்ட இயக்குநரின் அறிவுரையின்படியும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனைபடியும், மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் மாவட்ட மருத்துவத்துறையினர், ஆகியோரின் உதவியுடன் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி சார்ந்த மனநலம், குழந்தை நலம். எலும்புமுறிவு, காது மூக்கு தொண்டை மற்றும் கண் ஆகிய […]
தென்காசி நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்..
தென்காசி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டி.பி.சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். தூய்மையே சேவை முகாம் செப்டம்பர்-15 முதல் அக்டோபர்-2 வரை அனுசரிக்கவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாக இயக்குனர், சென்னை, மண்டல இயக்குனர்- திருநெல்வேலி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தென்காசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை […]
மதுரை விமான நிலையத்தில் ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..
மதுரை விமான நிலையத்தில் ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கழிவறை மற்றும் குப்பைத் தொட்டியில் கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர். சந்தேகத்தின் பேரில் இலங்கைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் […]
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் செயல்பாடுகள. – ஓ.பி.எஸ் பேட்டி..
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை.- ஓபிஎஸ் பேட்டி சென்னையில் இருந்து பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: *கர்நாடக அரசு அனைத்து கட்சி தீர்மானம் குறித்த கேள்விக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பின் […]
You must be logged in to post a comment.