உசிலம்பட்டியில் தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்…

தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-12ம் வகுப்பு முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு முடித்த பின் பின் ஊக்கத் தொகையாக ரூ5500 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-21 ம்ஆண்டு 11-12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.இதனைக் கண்டித்தும் அரசின் ஊக்கத்தொகை வழங்கக்கோரியும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை […]

உசிலம்பட்டியில் தனியார் மருத்துவமணை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் இணைந்து உசிலம்பட்டி தேனி ரோட்டிபுள்ள தனியார் மண்டபத்தில் பெண்களின் நலன் கருதி இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆண் பெண் இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்சனைகள் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் செயற்கை கருத்தரித்தல் விந்தணு விந்து பையில் இருந்து பிரித்தெடுத்தல் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விந்தணு கருமுட்டை மற்றும் […]

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு..

இராமநாதபுரம், செப்.26- இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது.  பிற்படுத்தப்பட்டோர் நலம், கதர் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையேற்றனர். மாவட்ட அமைப்பாளர் கே.சம்பத்ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் செ. முருகேசன் எம்எல்ஏ, ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.டி.பிரபாகரன், ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம், தெற்கு நகர் செயலாளர் டி.ஆர்.பிரவின் தங்கம், போகலூர் ஒன்றிய செயலர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் […]

மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா…

சோழவந்தான் செப் 26. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல்  திருவிழா வெகு  விமர்சையாக நடைபெற்றது கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதளுடன் திருவிழா தொடங்கியது அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை  கோவிலிலிருந்து வைகை ஆற்றிற்கு சென்று பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்கினி சக்தி […]

காரியாபட்டியில் பஸ் நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது…

காரியாபட்டி – செப்.26 .    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேரூந்துகள் இந்த நிழற்குடையில்நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நிழல்குடையில்  பேருந்துகள் வர முடியாமல் ஆக்கிரமிப்புக்கள், நடைபாதை கடைகள் இருந்ததால், நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு          வர முடியாமல் இருந்தது. நிழற்குடையில் சமூக  விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் […]

அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்…

மதுரை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு சார்பில், தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று,     தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோஷமிட்டனர். 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படி உயர்வினை நிலுவையுடன் வழங்க வேண்டும் , ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்கு, 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்த  தொழிலாளர்களை பழைய பென்ஷன் […]

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்…

மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் முனைவர் மேதகு சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் 12வது ஆய்வகமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் கீழ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஒரு பெருமை மிக்க நிறுவனமாக, அதாவது 100 விஞ்ஞானிகள், சுமார் 175 பிற ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் 100 ஆராய்ச்சி மாணவர்களுடன் தெற்காசியவில் மின்வேதியியலில் […]

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்…

சோழவந்தான்- மதுரைசோழவந்தான் அருகே  குடிநீர்  கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை  மறியல் காலாண்டு தேர்வு நடைபெற்று  வரும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சோழவந்தான் அணைப்பட்டி சாலையில்2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கடும் […]

மதுரை மத்திய சிறை ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு..

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்  பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52) இன்று பிற்பகலில் அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சிறை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உயிரிழந்த தர்மரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு […]

சிவகாசி கண்மாயில், மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை, கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…..

சிவகாசி : விருதுநக மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஏற்கனவே மியாவாக்கி காடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தற்போது பெரியகுளம் கண்மாயின் கரைகளில் சுமார் 6 ஆயிரத்து, 100 சதுரஅடி பரப்பளவில், 2 ஆயிரத்து 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்வதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், […]

ரெகுநாதபுரம்,  ஆர் எஸ் மடை, துணை மின் நிலையங்களில் நாளை (27/09/2023)பராமரிப்பு பணி: மின் தடை..

இராமநாதபுரம்  ரெகுநாதபுரம், ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன் 2 ,3, நாகாச்சி உயர் மின் அழுத்த பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.27) நடை பெற உள்ளது. இதனால் ரெகுநாதபுரம்  தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம் தினைக்குளம் வள்ளிமாடன்வலசை வண்ணாண்குண்டு பத்ராதரவை நயினாமரைக்கான் சேதுநகர் பிச்சாவலசை வள்ளிமாடன்வலசை உத்தரவை , தாதனேந்தல்,  ஆர் எஸ் மடை, ஆதம் நகர், ஏர்.ஆர். […]

ராமநாதபுரத்தில் ஐமுமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..

இராமநாதபுரம், செப்.26 – இராமநாதபுரம் நகர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,  பெரிய முஹல்லா முஸ்லிம் ஜமாஅத்,  ஆரோக்யா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.  ஐமுமுக மாவட்ட துணை செயலாளர்  யாசர் அரபாத்  தலைமை வகித்தார். பெரிய முஹல்லா ஜமாஅத் செயலாளர். குதரத்துல்லா  வரவேற்றார். பெரிய முஹல்லா ஜமாஅத் தலைவர்  ஹாரூன் ரசீது சின்ன முஹல்லா ஜமாஅத் தலைவர்  புர்கான்_அலி  பெரிய முஹல்லா ஜமாஅத் காசாளர்  சகாபுதீன்,பெரிய முஹல்லா ஜமாஅத் அப்துல் மாலிக், […]

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம், செப்.26 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 512 பேரிடம் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் […]

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம், செப்.26 – தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாநில செயற்குழு முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மகளிரணி மாவட்ட செயலாளர் கே.பூபதி, தலைமை வகித்தார். கோட்ட செயலாளர்  பாஸ்கரன்,  மாவட்ட இணை செயலாளர்கள் மு.முனிஸ்வரி,  நா.கங்காதேவி முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் அழகர் வரவேற்றார்.  கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் கால்நடை மருத்துவ முதுநிலை […]

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!*

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, இதில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில்,உண்டியல் வருமானமாக 1கோடியே 7 லட்சத்தி […]

திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து கல்வித்துறை இயக்குனர் முனைவர் ,க. அறிவொளி நேரடி ஆய்வு…

சிவகங்கை மாவட்டம்  திருமாஞ்சோலை, அரசு மேல்நிலைப் பள்ளியில்  25.09.2023 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் முனைவர். க.அறிவொளி அவர்கள்  மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிறப்பாக வாசித்த  மாணவர்களுக்கும் கணித செயல்பாடுகள்  செய்த மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு தலா ரூபாய் 100 வழங்கி, பாராட்டினார். மேலும் பேனா வழங்கி மாணவர்களிடையே  உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்தும் விதமாக பேசி மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் உடன் தொடக்கக்கல்வி […]

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சியில் உள்ள வார்டுகள் அனைத்திலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் துணைத் தலைவர் கிருஷ்ணன்ஊராட்சி செயலாளர் முனியராஜ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன் சதீஷ்  நடவடிக்கை மேற்கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம், அக்ரஹாரம், குருவித்துறை மெயின் ரோடு, ஊத்துக்குளி […]

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் மறித்து உரிமை இல்லை என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று கூறி ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்தனர். இதை அடுத்து ஆட்சியிடம் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ் பாபு என்பவர் […]

கீழக்கரை துணை நிலையத்தில் இன்று (26/9/2023) மின் பராமரிப்பு பணி..

 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செப்.26) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காஞ்சிரங்குடி மின் பாதையில்  வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு,  சேரான் தெரு,  தட்டான் தோப்பு,  கோகுல் நகர்,  சாலை தெரு,  பரதர் தெரு,  நடுத்தெரு,  முஸ்லிம் பஜார்,  சங்குவெட்டி தெரு,  இந்து பஜார்,  கஸ்டம்ஸ் ரோடு,  பழைய மீன் மார்கெட்,  பைத்துமால்,  சின்ன மாயாகுளம் மின் பாதையில்  500 பிளாட், மேல தெரு,  வடக்கு தெரு, […]

மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு..

மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகம், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த கரிமேடு போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம்  குறித்து வழக்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!