உசிலம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு இரு வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலபுதூரில் உள்ள இருளாயி தேவர் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் காலி குடத்துடன் […]

கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்..

இராமநாதபுரம் மாவட்ம் கீழக்கரை கஸ்டம்ஸ் கடற்கரை அருகே ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறை விசாரிப்பில் அவர் கீழக்கரை வண்ண தெரு பகுதியில் துணி கடை வைத்திருப்பதாக அறியப்படுகிறது.உடனடியாக சடலத்தை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமணைக்கு ஆம்புலண்ஸ் மூலம் கொண்டுசெல்லபட்டது. மேலும் கீழக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தென்காசியில் தூய்மை இந்தியா திட்டப்பணி..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குப்பையில்லா தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகப் பங்கேற்பு மூலம் துப்புரவு என்பது அனைவரின் தொழில் என்ற கருத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தன்னார்வ அடிப்படையில் இந்தியா முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தென்காசி மருத்துவமனை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் சேவையை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்களும், சகி ஒருங்கிணைந்த சேவை மையம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து மருத்துவமனை […]

திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில்  தமிழக வழக்கறிஞர் அலுவலக குமாஸ்தாக்கள் சங்க  31 வது பொதுக்குழு கூட்டம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க 31 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் லெங்கா ராம் தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் தேவராஜன் முன்னிலை வைத்தார், தலைவர் ஆறுமுகம்.  பொருளாளர் பூந்தமல்லி ரஞ்சித் குமார் ஆகியோர் வரவேற்புரை கூறினார். மாநில பொதுக்கூட்டத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருச்சி ,கோவை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதியிலிருந்து  நிர்வாகிகள் 700 பேர் வந்திருந்தனர்.  தமிழக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க கூட்டத்தில் […]

மதுரையில் மேக்ஸிவிஷனின் புதிய கண் மருத்துவமனை திறப்பு விழா..

மதுரை, கே.கே.நகரில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை தென்மாவட்ட பிராந்திய இயக்குநர் மேக்ஸிவிஷன் மருத்துமனை டாக்டர் ராஜ்குமார் ,தமிழ்நாடு மற்றும் கேரளா. மேக்ஸிவிஷன் கண்மருத்துமனை திரு.பெல்லி.பாபு,  பிராந்திய மருத்துவ இயக்குநர் மதுரை டாக்டர்.ராஜ்குமார் யாதவ், பொது மேளாளர் தமிழ்நாடு மேகஸ்விஷன் கண் மருத்துவமனை பீட்டர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.  இந்த விழாவில் இந்தியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் டாக்டர் மகாலிங்கம், இந்தியன் மெடிக்கல் அசோஸியேசன் செயலாளர் […]

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து வீரர்களுக்கான குழு விபத்து காப்பீடு..

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து  மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான குழு விபத்து காப்பீடு பதிவு செய்யப்பட்டது.தடகளம் ,கபடி  வலைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் 3156 பேருக்கு   விபத்துக்குழு காப்பீடு வழங்கப்பட்டது ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் விளையாட்டு ஆணைய முதல்வர் கிஷோர் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேசன் கூடை பந்தாட்ட தலைவர் ஆதவ் அர்ஜுன், கபடி விளையாட்டில் துரோணாச்சாரியா விருது பெற்ற […]

உலக வெப்ப மயமாதல் விழிப்பணர்வு பிரசாரம்..

இராமநாதபுரம், செப்.30 – இராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாமில் தூய்மை பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்பணர்வு, நான் முதல்வன் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.  நாட்டு நலப்பணித்திட்ட ராமநாதபுரம் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பொறுப்பாசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். பஜ்ரங்கதாஸ் பாபா சேவை […]

மதுரையில் லஞ்சம் கேட்ட மாநகராட்சி உதவி பொறியாளரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்..

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட  வார்டு எண் 56 பொன்னகரம் பகுதியை சேர்ந்த   கணேசன் என்பவரது வீட்டின் முன்பு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியிருந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வீட்டின் முன் கழுவு நீர் தேங்கி இருந்ததோடு துர்நாற்றம் இருந்ததா நோய் தொற்று பரவு அபாயம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் […]

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக் குழந்தையாக இருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டு பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இவருடைய சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று விலகினர். எனவே தாயார் வழித் […]

மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மத்திய சிறை அமைக்க நிலங்களை மீட்க வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல். விவசாயிகளை குண்டு கட்டாக இழுத்து வந்து  கைது செய்ததால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் போர்வெல் அமைத்து, அப்பகுதி விவசாயிகள்  விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் 67 ஏக்கர் அளவில் மத்திய சிறை வளாகம் வருவதாக கூறி வருவாய் துறை அதிகாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரோடு இன்று நிலங்களை மீட்க பாதுகாப்பு வேலிகளை அகற்றினர்.  இதற்கு எதிர்ப்பு […]

இராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 பேருக்கு இருக்கக்கூடிய இடத்தில் 500 பேர்.. பங்கேற்றவர்கள் அவதி..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே பிடர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை  சமூக நலத்துறை அதிகாரிகள் ஏற்ப்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் வளைகாப்பு நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவித்து இராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கர்ப்பிணி பெண்கள் […]

மதுரை வலையங்குளம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்ட டூவிலரை மோதிய கார்… CCTV காட்சிகள்..

மதுரை வலையங்குளம் நெடுஞ்சாலை பகுதியில்  நெடுமதுரையை சேர்ந்த அருள்மணி (48) மற்றும் பெருங்குடியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் காசிநாதன் (70) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.அப்போது எலியார்ப்பத்தி சுங்கச்சாவடியில் இருந்து அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டனர் இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், சம்பவம் குறித்து பெருங்குடி […]

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

வாடிப்பட்டி செப்29 மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ,குண்டு மலை முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜீவானந்தம், மத்திய குழு உறுப்பினர் ராஜா என்ற ஆசீர்வாதம் சிறப்புரை ஆற்றினர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்வகுமார், திருஞானம், […]

வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட பணி.. சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்..

வாடிப்பட்டி செப் 29 மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி மாணவர்கள் அடிக்கல் நாட்டினர். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ்,  வார்டு கவுன்சிலர் […]

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நன்கொடை செலுத்த (QR CODE) க்யூ.ஆர்.கோடு..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை நேரடியாக திருக்கோவில் அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். மேலும் இணையதள வசதி மூலமாக பக்தர்கள் திருக்கோவில் வங்கி கணக்கில் காணிக்கைகள் மற்றும் நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செலுத்த நினைக்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை அலைபேசி மூலமாக செலுத்துவதற்கு கியூ.ஆர்.கோடு வசதியை […]

கல்விக்கடன் கோரும் மாணாக்கரின் விண்ணப்பங்களை 100% ஏற்று கடனுதவி வழங்க வேண்டும்: கலெக்டர் பேச்சு..

ராமநாதபுரம், செப்.28 ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான கடனுதவி, கல்விக் கடன் முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு இணை தொழிலாக பல்வேறு குறு, சிறு தொழில்களை உருவாக்கி பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் வகையில் தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கடன் கோரும் மாணவ, மாணவியரின் விண்ணப்பங்களை 100% […]

சிவகாசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பு வைத்திருந்த 3 பட்டாசு கடைகளுக்கு சீல் வைப்பு… 

சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அய்யப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பட்டாசு விற்பனை கடை வைத்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு விற்பனை கடையில், உரிமம் பெற்ற அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது வருவாய்த்துறை […]

வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும்பணி பயிற்சி முகாம்…

வாடிப்பட்டி, செப்.27- பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் இயக்கம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை  சார்பாக, கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளிலிருந்து கழிவுநீரை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் வாடிப்பட்டி ஜான்சி மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சித்் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கி, தொடக்கிவைத்தார். துணைத் […]

மதுரை வாடிபட்டியில் பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..

வாடிப்பட்டி, செப்.27. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக , வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சுஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி பற்றிய மாதிரி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு, நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கி பயிற்சியளித்தார். இதில், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் காலங்களில் உயிர்களை காப்பாற்ற எவ்வாறு நடந்து கொள்வது முறையான மற்றும் முறையற்ற மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் […]

பிறந்து 15 நாட்களே ஆன நல்ல பாம்பு குட்டி படமெடுத்து ஆடிய வீடியோ காட்சி; சமூக வலைதளத்தில் வைரல்..

மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் குட்டி நல்ல பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரரான சிவா பாண்டிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் குட்டி நல்ல பாம்பை பிடிக்கும் முற்பட்ட பொழுது அந்த பாம்பு பிடி கருவியுடன் அந்த குட்டி நல்ல பாம்பு சண்டையிட்டு வேகமாக ஓடியது. தொடர்ந்து அதனை மடக்கிப்பிடித்த பாம்புபிடி வீரர் வனப்பகுதியில் சென்று விட்டார். இந்த நல்ல பாம்பு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!