வீட்டில் பதுக்கிய வலி நிவாரணி மாத்திரை, பூச்சி கொல்லி மருந்து பறிமுதல்..

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு இரவில் கடத்திச் செல்வதற்காக பெருங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பெருங்குளம் தீன்யா தெருவில் உள்ள ஒரு வீட்டை மண்டபம் மெரைன் போலீசார்,  உச்சிப்புளி போலீசாரின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அங்கு 23 பெட்டிகளில் இருந்த வலி நிவாரணி 60 ஆயிரம் மாத்திரை (PRAGAB) 2 பெட்டிகளில் இருந்த […]

இராமநாதபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்: பாமக ரத்த தானம்..

இராமநாதபுரம், அக்.8- முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும்  பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்  பிறந்த நாளையொட்டி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலர் தேனி.சை.அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். கிரசன்ட் ரத்த வங்கி, ஆராய்ச்சி நிலைய உரிமையாளர் பயாஸ் அஹமது வரவேற்றார்.  மாவட்ட செயலர் அக்கீம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். […]

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம், அக்.8- ராமேஸ்வரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா பேரணி தங்கச்சிமடத்தில் இன்று காலை நடந்தது.  விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகம், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவர் அகஸ்டலா முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ரேஷன் பாமாயில் 400 பாக்கெட் பறிமுதல்: முருக்கு மாஸ்டர் கைது..

இராமநாதபுரம், அக்.7- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு முருக்கு கம்பெனியில் ரேஷன் பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதன்படி  ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் சிவஞானபாண்டியன் தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் முருக்கு கம்பெனியை சோதனையிட்டனர். அங்கு பதுக்கியருந்த தலா 1 லிட்டர் வீதம் 400 லிட்டர் ரேஷன் பாமாயில் பாக்கெட்களை கைப்பற்றினர். இது […]

இராமநாதபுரம்,  பரமக்குடியில் தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

இராமநாதபுரம், அக்.7- இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பரமக்குடியில் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலர் எஸ்.சலீமுல்லா கான் தலைமை வகித்தார். சங்பரிவார அமைப்புகளில் அதிகாரம் அநீதியை கண்டித்து அக்.28 ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கருப்பு சட்டை அணிந்து ஆயிரம் பேர் பங்கேற்றல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர்கள் இப்ராஹிம் (மத்தி), ஷேக் அப்துல்லாஹ் (மேற்கு) வாவா ராவுத்தர் (தெற்கு), […]

இராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் முதல் 10 இடம் பிடித்தோருக்கு பரிசு..

இராமநாதபுரம், அக்.7-  அஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டியை  கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்துார ஓட்டப்போட்டியை  பட்டணம்காத்தான் இசிஆர். பகுதியில்  கலெக்ர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். 17 வயது முதல் 25 வயது ஆடவர் ஓட்டத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஏ.முகேஷ் ஷர்மா, கே.ராமர் முதல் 2 இடம், செய்யது அம்மாள் கலை, […]

இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனரா?? சம்பந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா??

மதுரை விமான நிலையத்துக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான மூலம்  இலங்கை., சார்ஜா., துபாய்., சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணித்து வருகின்றனர். முக்கியமாக தென்மாவட்ட மக்கள் வசதியை கருதி மதுரை விமான நிலையத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஆனால் அங்குள்ள சுங்க அதிகாரிகள் பயணிகளை தரக்குறைவாகவும், திருடர்களை போல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.  இதனால் மதுரை விமான நிலையம் என்றாலே விடுமுறை… வியாபாரத்திற்கு வருகிறோம் என்பதை தாண்டி ஒரு பயத்துடனே பயணிகள் வந்து செல்கிறார்கள். இதை உறுதிபடுத்தும் […]

சோழவந்தான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இம் முகாமிற்கு, தொழிலாளர் அணி தலைமைச் செயலாளர் முத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். தமிழ் முருகன் வரவேற்றார். சோழவந்தான் நகர பொறுப்பாளர் சங்கர்,தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கார்த்திகேயன், மாணவர் பாசறை செயலாளர் குணசேகர பாண்டியன் கண்ணுடையாள்புரம் பொறுப்பாளர் அபிநாத் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். […]

சிவகாசி அருகே, சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி பலி…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. சிவகாசி – விருதுநகர் சாலையில்  ஆணைக்குட்டம் அணைப் பகுதி உள்ளது. அணைக்கு அருகில் காப்புக்காடு உள்ளது. இதில் மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. இன்று, சிவகாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி அருகே, 3 வயதுள்ள புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியிலிருந்து வந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது […]

சோழவந்தான் பேரூராட்சியில்மாவட்ட அளவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்..

சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள பி ஜி மஹாலில் மதுரை மண்டலம் பேரூராட்சி இயக்கம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் முக்கிய தூய்மை பணியாளர்கள் அடையாளம் காணுதல் தொடர்பான பயிற்சி நடந்தது இப்பயிற்சியில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் பேரூராட்சி செயலாளர். ஜீலான்பானு சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மாவட்ட […]

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை..சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேச்சு..

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிகிறார்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் உரிமைக்காக எடப்பாடியார் குரல் எழுப்புவார். 520 வாக்குறுதியை கொடுத்தீர்கள் அது கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது எதிர்த்து கேட்டால் கைது செய்கிறீர்கள் எட்டுக்கோடி தமிழர்களும் உரிமைக்காக மு க ஸ்டாலினை எதிர்த்து […]

தூய்மை திருநகர் விழிப்புணர்வு பேரணி 2023 ..

திருநகர் பக்கம் குழு ஒருங்கிணைத்த மதுரை மாநகராட்சி மற்றும் 94 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன்   இணைந்து  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பங்கேற்ற மாபெரும் தூய்மை நகருக்கான விழிப்புணர்வு பேரணியை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர்  சுவிதா விமல் 94 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  சுவேதா சத்யன் 95வது வார்டு […]

பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையம் திறப்பு..

இராமநாதபுரம், அக்.6- இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீளவர்களுக்கான டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக அமைந்த டீசல் விற்பனை மையத்தை  தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன்  திறந்து வைத்தார். அவர் பேசுகையில், […]

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் சாவு.. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலைமறியல்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி காலனியைச் சேர்ந்தவர்கள் தனுஷ் மற்றும் மலை ராஜா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆட்டுப் பட்டியில் 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு சென்ற பின் வழக்கம் போல் இன்று தண்னீர் பருகவிட்டு பட்டியில் கட்டி வைத்துள்ளனர்.சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வாயில் நுரை தள்ளியபபடி மர்மமான முறையில் இறந்துள்ளது.மற்றும் சில ஆடுகள் உயிருக்குப் போராடியுள்ளன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் […]

இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு..

மதுரை மாநகரில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் மற்றும் பின்னால்‌ அமர்ந்திருப்பவரும்‌ தலைக்கவசம்‌ அணிவது குறித்தும் மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‌ 90% பேர்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ தலைக்கவசம்‌ அணியாத காரணத்தினால்‌ இறக்கின்றனர்‌.  இதில் அதிகளவில்‌ இளைஞர்களே இறக்கின்றனர், தலைக்கவசம்‌ அணிந்து செல்கிறவர்கள்‌, அதற்குரிய கழுத்து பட்டையை அணிவது கிடையாது.  இதன்‌ விளைவாக அவர்கள்‌ தலைக்கவசம்‌ அணிந்தும்‌ பயன்‌ இல்லாமல்‌ போய்விடுகிறது என தலைக்கவசத்தின் முக்கியத்துவம்  குறித்து எடுத்துரைக்கப்பட்டது. […]

சாத்தூர் அருகே, விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன் கைது… உரிமையாளர், மேலாளருக்கு போலீஸ் வலைவீச்சு…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள கங்கர்செவல்பட்டி பகுதியில் உள்ள, விக்டோரியா பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, ஆலை உரிமையாளர் ராஜேந்திரராஜா, மேலாளர் மற்றும் போர்மேன் சக்கையா ஆகியவர்கள் மீது, ஆலங்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு […]

பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் தாசில்தார் கைது..

இராமநாதபுரம், அக்.5- ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் இன்று மதியம் கையும், களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர்  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில்  தனது பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய  தாசில்தார் தென்னரசுவை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார். ரூ. 3 லட்சம் லஞ்சம். கேட்ட தென்னரசு, அதில் முதல் தவணையாக ரூ. […]

கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிடோஜாக் பயிற்சி மையத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரை போலிசார் இன்று கைது செய்துள்ளனர்.இது அரசு ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் […]

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழஙகப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஆதார் கார்டு ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வில்லாணி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வில்லாணி ஊர் மந்தை முன் இந்தியக்குடிமகன்களுக்கான ஆவணங்களான ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ரேசன் கார்டு ஆககியவற்றை அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் […]

ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா;15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள  கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்  வேண்டி குதிரை எடுத்தனர். சாமி குதிரையின் முன்னர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!