தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ஈட் ரைட் கிளப் மற்றும் நியூட்ரிஷியன் கிளப் இணைந்து சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிறுதானிய விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவியர்களுடன் எடுத்துக் கொண்டு கையெழுத்து விழிப்புணர்வுப் பதாகையில் கையொப்பமிட்டார். சிறுதானிய அரங்குகளைப் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். சிறுதானிய விழிப்புணர்வு தொடர்பாக […]
Category: தேசிய செய்திகள்
பிரதம மந்திரியின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம்; தென்காசி ஆட்சியர் முக்கிய தகவல்..
பிரதம மந்திரியின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான முக்கிய தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது குறித்த ஆட்சியரின் செய்திக்குறிப்பில், இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்திற்காக 29.09.2023 அன்று நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை […]
சிவகாசி அருகே குடும்ப தகராறில் வாலிபர் படுகொலை…..
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (33). இவரது மனைவி பிரியா (29). இவர்களுக்கு அய்யனார் (7), பவித்ரா (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வம் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குழந்தைகளையும் அடித்து உதைத்து வந்தார். தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து அடி வாங்குவது குறித்து பிரியா தனது […]
சோழவந்தானில் கனமழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வயதான தம்பதியர் ..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மலையின் பாதிப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் சோழவந்தான் ஆர் சி ஸ்கூல் எதிரில் உள்ள வண்ணான் தெருவில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக கணவனும் […]
காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ கருத்தரங்கம்..
காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ கருத்தரங்கம் அக்.15-ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது.. தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பெரிய […]
மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள்உபயோகபடுத்தும் கழிவறையில் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள 4 தங்க உருண்டைகள் சிக்கியது..
இன்று (12/10/2023) காலை 1030 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி வெளியே செல்லும் வழியில் கழிவறை ஒன்று உள்ளது இதனை விமான நிலையத்தின் உட்பகுதியில் விமானம் ஏறும் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கு பயணிகளும் பயன்படுத்துவர். இன்று பகல் 1மணி அளவில் கழிவறை பகுதிகளில் ரோந்து சென்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் கழிவறையில் நான்கு உருண்டைகள் கிடப்பதாக மத்திய சுங்க இயலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு […]
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கார்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் அமைச்சர் மகன்..
முன்னாள் அமைச்சர் தமிழ் குடிமகனின் மூன்றாவது மகன் பாரி. இவர் மதுரை புதூர் டிஆர்ஓ காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது காரில் புதூரில் இருந்து திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி சென்றுள்ளார். மதுரையில் பெய்த கனமழையால் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை முழுவதும் நீர் நிறைந்துள்ளது. தண்ணீர் இருப்பதை அறியாமல் பாரி காருடன் உள்ளே சென்றுள்ளார். இதில் கார் முற்றிலும் மூழ்கிய நிலையில் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ […]
மதுரையில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து..
மதுரை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம், அண்ணாநகர், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், பொன்மேனி, பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை பெரும்பாலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி காணப்பட்டது. குறிப்பாக ராஜாமில் ரயில்வே கர்டர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை […]
கீழக்குயில்குடி கிராமத்தில் 12 ஆண்டுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா..
கீழக்குயில்குடி கிராமத்தில் 12 ஆண்டுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழாமலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா குதிரை எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில்குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. புரட்டாசி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக கூறி எடுப்பு திருவிழா நடைபெறும். மழைவளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி கிராமத்து மக்கள் குதிரை எடுப்பு திருவிழா நடத்துகின்றனர் […]
தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி; தமிழ்நாடு அரசு உத்தரவு..
தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட எஸ்.பி சாம்சன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.பி.சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த இ.டி.சாம்சன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
விக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் இப்பகுதி உள்ள கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர்.முதல் நாள் மேளதாளத்துடன், வானவேடிக்கையுடன் பூசாரி வீட்டிலிருந்து சாமி பெட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சக்திகிரகம் எடுத்து வருதல். பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து கோவிலில் வந்து அடைந்தனர்.இங்கு சிறப்பு பூஜை நடந்தது.இப்பகுதி கிராம […]
சோழவந்தானில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னைமரம் உயரத்திற்கு பீய்ச்சி அடிப்பதால் வீணாகும் குடிநீர் ..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆனையூர் பகுதிக்கு செல்லும் குடிநீர் பைப் சோழவந்தான் அருகே உடைந்து தென்னை மரம் உயர்த்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் குடிநீர் வீணாகிறது. இதில் வீணாக வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள காலிஇடத்தில் பரவி கொசு உற்பத்திஆகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆனையூரூக்கு பெரிய குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்கின்றனர்.இங்கு குடிநீர் குழாய் உடைந்து சுமார் 12 அடிக்கு […]
மதுரையில் அடிப்படை வசதிகள் கோரி, பா.ஜ.க. மனு…
மதுரை மாநகராட்சி 100 வது வார்டு, இமானுவேல் நகர் பகுதியில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான பொது கழிப்பறை மற்றும் சாக்கடை தூர்வாருதல் குடிநீர் வசதி செய்து தராத கவுன்சிலர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. ஆகியோரை கண்டித்து, மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர் கருப்பையா தலைமையில் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, பட்டியல் அணி, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர் ரமேஷ், பொது செயலாளர் கோனகிரி , […]
பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து எஸ் டி பி ஐ , சார்பாக ஆர்ப்பாட்டம்..
பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும் எஸ் டி பி ஐ , சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் […]
மதுரையில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை – 2 மணி நேர விசாரணைக்கு பின் செல்போனை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்..
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை அழைத்துசென்று காவல் கட்டுப்பாட்டு இடத்தில் விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்ற பொழுது பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜுதீனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் […]
நயினார் கோவில் அருகே 67 பேருக்கு ரூ.3.98 லட்சம் நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே அ.பனையூர் ஊராட்சியில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அ.பனையூர் ஊராட்சி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 144 மனுக்களில் 67 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இன்றைய முகாமில் பெறப்பட்ட 96 மனுக்கள், ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வருவாய், […]
பெருங்குளம், பனைக்குளம், தொண்டி பகுதிகளில் இன்று (12-10-2023) மின்தடை…
இராமநாதபுரம், அக்.11- ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (12.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் […]
அருப்புக்கோட்டை அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் படுகொலை…..
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (55). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். கணபதியுடன் அவரது மகன்கள் ராஜா (21) மற்றும் சசிக்குமார் (18) இருந்து வருகின்றனர். இதில் கடைசி மகன் சசிக்குமார் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடி போதையில் வீட்டில் இருப்பவர்களுடன் சசிக்குமார் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு நீண்ட […]
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள், மின்னணு ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்…..
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கட்டிடப் பணிகள், பேப்பர் மற்றும் அட்டை மில்கள், நூற்பு ஆலைகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பீகார், அசாம், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பல தொழிலாளர்கள் ஆண்டுக்கணக்கில் இங்கேயே தங்கி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து வசிக்கும் தகுதியானவர்களுக்கு, மின்னணு ரேசன் கார்டுகள் வழங்கப்பட […]
ராஜபாளையம் அருகே, விபத்தில் மூளைச் சாவு அடைந்த தூய்மை காவலரின் உடல் உறுப்புகள் தானம்..அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்…..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவருக்கு திருமணம் முடிந்து முதல் மனைவி இறந்து விட்டதால், இரண்டாம் திருமணம் செய்திருந்தார். முதல் மனைவியின் மூலமாக 3 குழந்தைகளும், இரண்டாவது மனைவி மூலமாக 3 குழந்தைகளும் உள்ளனர். மாரியப்பன், முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாரியப்பன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு […]