தென்காசியில் மமக பொதுக்குழு கூட்டம்; ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட முக்கிய தீர்மானம்..

தென்காசியில் மமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் அக்.15 அன்று தென்காசி பாபக்கி தங்கள் மதரசாவில் நடைபெற்றது. மமக மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். தமுமுக மாநில துணைத் பொதுச் செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் நயினார் முகம்மது, தமுமுக மாவட்டசெயலாளர் […]

மதுரையில், இலவச மார்பக பரிசோதனை முகாம்..

மக்கள் நீதி மையம் ரோட்டரி மீட் டவுன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மார்பக பரிசோதனை மருத்துவ முகாம் மதுரை மதி தியேட்டர் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. மகளிர் மட்டும் குழந்தைகள் நல அணி, மதுரை மண்டல பத்மா ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மேற்கு ஆறாவது வார்டு வேட்பாளர் கலையரசி வட அமெரிக்கா நார்த் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தலைவர் பத்மாவதி ஆகியவர்களின் ஏற்பாடு பேரில், […]

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் பேட்டி..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள இராமதாரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.. விழாவிற்கு வட்டாரத் தலைவர் இரா.பழனியப்பன் தலைமை தாங்கினார்.முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பி.வரதராஜ் முன்னிலை வகித்தார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வட்டாரச் செயலாளர் இரா.இராமராஜ் வரவேற்றுப் பேசினார். பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மாநிலத் தலைவர் சு.குணசேகரன் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார் இதை அடுத்து செய்தியாளர்களை  மாநிலத் தலைவர் […]

மகளிர் உரிமை மாநாட்டை நடத்த திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது..ஆர்.பி.உதயகுமா….

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள விடத்தக்குளம், மையக்குடி, வடகரை, மேலக்கோட்டை, ராயபாளையம் ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார் மற்றும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே தமிழரசன், கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் சி.முருகன், திருமங்கலம் ஒன்றிய குழு தலைவர் […]

தமிழக மீனவர் 28 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து அக்.18ல் போராட்டம்..

இராமநாதபுரம். அக்.15- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர் மீனவர் 28 பேரை,  5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. இதனால் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து, அக்.18ல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் […]

மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது..

மதுரை: பல்வேறு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில்‌ பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில்‌ செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், மற்றும கஞ்சா, போதை மாத்திரை விற்பனை வழக்குகளில்‌ மதுரை மாநகரைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ லோகநாதன் உத்தரவின்‌ பேரில்‌, முத்துக்குமார் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில்‌ “குண்டர்‌”  தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ அடைக்கப்பட்டனர்‌. செய்தியாளர் வி காளமேகம்

குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்..இஸ்ரோ தலைவர் பேட்டி..

குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டும் செல்ல பணிகள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மதுரை விமான நிலையத்தில் பேட்டி. ராமேஸ்வரம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் சோமநாத்  மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து  சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார் *டிவிடி 1 பிராசஸ் குறித்த கேள்விக்கு* டி.வி.டி  1ல் மூணு,நாலு பிரச்சனைகள் உள்ளது. டி.வி.டி […]

தொடர் மழை காரணமாக முழு கொள்ளவை எட்டிய 70 ஏரிகள்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் 70 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகின்றது. தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழை துவங்கிய பிறகு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை கடந்த சில வாரங்களாக இரவு […]

ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் மன்றம்: 58 வழக்குகளுக்கு ரூ.2.23 கோடி தீர்வுத் தொகை..

இராமநாதபுரம், அக்.14 – தேசிய, தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு படி இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமை வகித்தார். விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பி.சி. கோபிநாத், தலைமை குற்றவியல் நிதித்துறை நடுவர் கே.கவிதா, சார்பு நிதிபதி சி.கதிரவன், நீதித்துறை நடுவர் ஜி.பிரபாகரன், கூடுதல் மகிளா நிதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கு […]

முஹமது சதக் அறக்கட்டளை பொன்விழா கொண்டாட்டம்..

இராமநாதபுரம், அக்.14 – ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் அறக்கட்டளை பொன்விழா  கொண்டாட்டம் இன்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் முஹமது யூசுப் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஹமீது இப்ராஹிம் பேசினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரைக்கு தேசத்தின் பெருமை விருது வழங்கப்பட்டது. எஸ்பி (பணி நிறைவு) கலியமூர்த்தி தன்னம்பிக்கை உரையாற்றினார். அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முஹமது, செயலர் சர்மிளா, முன்னாள் மாணவர்கள் ராஜ் சுப்ரமணியம், லோக சண்முகம், பரமேஸ்வரன், […]

மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் வெண்மை நிறத்தில் நுரை வருவதால் பொதுமக்கள் அச்சம்..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கிறது. இந்த நிலையில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழை நீரோடு கலந்து பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருகிறது. […]

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் நவராத்திரிக்கு அனுமதி வழங்க கோரி கருப்பு கொடி கட்டி  கவன ஈர்ப்பு போராட்டம்..

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் சிவகாமிபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் சேர்ந்த சாலியர் சமுதாயத்தினர்  குலதெய்வமாக கடந்த 400 ஆண்டுகளாக  நவராத்திரி முன்னிட்டு பத்து நாட்கள் மழையில் தங்கி முளைப்பாரி போட்டு வழிபட்டு வந்ததாக  கூறுகின்றனர் இத்தனை ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த எங்களை மழையில் தங்கி வழிபாடு செய்யக் கூடாது புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டதால் வழிபாடு செய்ய வேலை அனுமதி என […]

மதுரை நிலையூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி..

மதுரை மாவட்டம் நிலையூர் கிராமத்தில் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பஞ்சவர்ணம் (65) என்பவர்  வீடு திரும்பாத நிலையில்  சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர் ஆடு மேய்ந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே அவர் பயன்படுத்திய துண்டும் டிபன் பாக்ஸ் கிடந்துள்ளது.  அவர் கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் ஆறு மணி நேரம் தேர்தலுக்குப் […]

திருப்பரங்குன்றம் சரவணப்பொகையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் இருந்தது. இதனை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் சரவண பொய்கையில் இறங்கி பிணத்தை கைப்பற்றினார். 48 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணத்தை கைப்பற்றினர் நீல நிற சட்டை மற்றும் வேஷ்டியில் இருந்த  அவரின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி […]

திருப்பரங்குன்றம் பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரத்த தான முகாம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நாட்டு நல பணிகள் திட்டம் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது இம்முகாமினை திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் Dr.தனசேகரன் தலைமையில்  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு மலை ஏற்பாடுகள் செய்து..இருந்தார். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் விஜயகுமார் இருளப்பன் ராமகிருஷ்ணன் மற்றும்  நாட்டு நல திட்ட பணிகள் குழு மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.  இரத்த தான முகாமில் […]

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம்..

இராமநாதபுரம், அக்.13 –  முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ.அப்துல் கலாம் 92 வது பிறந்த நாளையொட்டி, அவர் பயின்ற ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸ்போரியா பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தேசத்தின் இலக்கை அடையலாம் திட்ட துவக்க விழா நடந்தது.  ராமநாதபுரம் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். கவனம் சிதறாமல் படித்தால் உன்னத நிலையை அடையலாம். படிக்க கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்து கொண்டு படித்தால் பல்வேறு துறைகளில் பலரும் போற்றும் வகையில் ஜொலிக்கலாம். கலாம் கூற்றிற்கேற்ப […]

திருப்பரங்குன்றம் அருகே  மேல அனுப்பானடி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி…

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கையும் பேச்சாற்றளையும் வளர்க்கும் விதமாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் தெற்கு மாவட்ட மாணவரனி அமைப்பாளர் பாண்டி முருகன் தலைமையில், துணை அமைப்பாளர்கள் மருது பாண்டியன்,  ஜெய்லாணி , அவனி கிழக்கு பகுதி ஒருங்கிணைப்பாளர்  தர்மபிரபு  மற்றும் பாலையம்பட்டி  A.P.T துரைராஜ் மேல்நிலை […]

மகளிர் கல்லூரியில் காதி, கிராமத் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம், அக்.13- இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் காதி, கிராமத் தொழில்களுக்கான தொழில்முனைவோர் வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மீரா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ராதிகா வரவேற்றார். கதர், கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் அறம் வளர்த்தான் சிறப்புரையாற்றினார். தொழில்முனைவோர் மேம்பாடு குறித்து பிரதம மந்திரி தொழில் முனைவோர் வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலிபூர் ரஹ்மான் பேசினார். காந்திய போதனைகள், கதர் ஆடைகளின் […]

அப்துல் கலாம் பிறந்த நாள்: ராமேஸ்வரத்தில் அக்.15 ல் மினி மராத்தான் போட்டி..வீடியோ அறிவிப்பு வெளியீடு..

ராமநாதபுரம், அக்.13 – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை (அக்.15) யொட்டி ராமேஸ்வரத்தில் மினி மாரத்தான் போட்டி நடக்கவுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியுள்ளதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்.15 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மினி மராத்தான் ராமேஸ்வரம் தீவு பகுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.rkhm2023.com என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர் இளம்பெண் கொலை வழக்கு; 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..

கடையநல்லூரில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலசை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வலசை காலனி தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் மனோ ரஞ்சித்(20), லிங்கம் என்பவரின் மகன் பாரத்(19), முப்புடாதி அம்மன் கோவில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!