இஸ்ரேலில் இருந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மதுரை வருகை. ..

இஸ்ரேலில் இருந்து தென் மாவட்டத்தை சேர்ந்த  மொத்தம் 14 பேர் மதுரை வந்துள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீன போரால்  இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பொருட்டு மத்திய அரசு ஆபரேஷன் அஜய்த்திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருகின்றனர். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் 2 கட்டமாக வந்த நிலையில் இன்று மேலும் இரண்டு பேர் மதுரை வந்தடைந்தனர். அவர்களை மதுரை வருவாய்த்துறை தாசில்தார் கோபி வரவேற்றார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு […]

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை..வீடியோ பதிவு..

ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து […]

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்..

பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் தினந்தோறும் அம்பிகைக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி சாஹிபா டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இக்கோயிலில், நவராத்திரி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, ‘அக்ஷராபியாசம்’ என்னும் ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்வு நாளை நடக்கிறது.  குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, சன்னிதியில் குழந்தைகள் நெல்மணியில் ‘அ.. ஆ..’ என எழுதி கல்வியை தொடங்குவது அவர்கள் கல்வியிலும், வாழ்விலும் […]

கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்..

இராமநாதபுரம், அக்.23- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ், நேரு யுவ கேந்திரா சார்பில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடந்தது. கல்லூரி டிரஸ்டி ஜெயந்தி ராஜா முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வா் செளமியா தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனைவரும் 75-வது அமுத பெருவிழா உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாணவியர் பேரணி நடந்தது. ரங்கோலி உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் […]

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சித்  திட்டப் பணிகள் ஆணையாளர்  லி.மதுபாலன், ஆய்வு..

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உட்பட்ட கோமதிபுரம், மேலமடை,  வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் திட்டப் பணிகள்  குறித்து ஆணையாளர் லி.மதுபாலன்,   ஆய்வு மேற்கொண்டார்.   மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மைப்பணிகள்,  சாலை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன்படி மதுரை மாநகராட்சி கோமதிபுரம், அண்ணாநகர்  வைகை காலனி உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]

எந்தஒரு ஆதாயத்தையும் எதிர்பார்காதவர்கள் ஆசிரியர்கள்…பழைய மாணவர்கள் பேச்சு….

வாடிப்பட்டி, அக்:22. இருபதில் பிரிந்து அறுபதில் சந்தித்து பசுமை நிறைந்தநினைவுகளை பகிர்ந்துகொண்ட மாணவர்கள்.  மதுரை தியாகராசர் கல்லூரியில் 1981-1984 கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன்  தலைமை தாங்கினார். உதவிஒருங்கிணைப்பாளர்  இளஞ்செழியன் வரவேற்றார். இந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் 80வயதுக்கு மேற்பட்ட கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு  ஆகியோரிடம் பழையமாணவர்கள் 60வதுவயதில் ஆசிபெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில், பழையமாணவர்கள் பலர் பேசினர் அப்போது அவர்கள் கூறியதாவது.- […]

மண்டபம் வட்டார கலைத்திருவிழா போட்டிகள்…

இராமநாதபுரம், அக்.22- இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, வட்டார வள மையம் சார்பில் மண்டபம் வட்டார கலைத்திருவிழா போட்டிகள் உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் 3 நாள் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ் கர்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், நேஷனல் அகாடமி பள்ளி முதல்வர் வசுந்தாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உச்சிப்புளி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யலட்சுமி. வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை ஆகியோர் முன்னிலை […]

குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள .அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36 இவர் துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து வருகிறார். துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று பகல் ஒரு மணி அளவில் மதுரை விமான நிலைய வந்தார்  அவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்ததில் அவர் மீது 2012 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மேலூர் அனைத்து மகளிர் […]

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம், அக்.20 –  இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.  மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செயலர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி ஒன்றிய செயலர் மக்தூம் கான் வரவேற்றார். மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் துவக்க வேண்டும் கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும். வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12ல் 7 பங்கு நீரை […]

தென்காசியில் அக்.27 விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.10.2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே, […]

பெருங்குடி கிராமத்தில் மதுரை விமான நிலைய அதிகாரிகள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்..

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலைய  இயக்குனரகம் மற்றும் தென்மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை இணைந்து பெருங்குடி கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு குறித்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் .தென் மண்டல லஞ்ச ஒழிப்பு முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு முதுநிலை மேலாளர் மகேஷ் மற்றும் பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்ம முருகேசன் கிராம கமிட்டி கல்யாணசுந்தரம் ஊராட்சி செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு  […]

பரமக்குடி வட்டார வளர்ச்சி பணிகள் அரசு செயலர் ஆய்வு..

இராமநாதபுரம், அக்.20 –  இராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி வட்டார வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார். உரப்புளி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அருகே வைகை ஆற்றின் கரை ஓரத்தில் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார். நென்மேனி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு […]

ராமநாதபுரத்தில் 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: கலெக்டர் தகவல்..

இராமநாதபுரம், அக்.20- இராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 215 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 16,053 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை பெறுவதற்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் குறைதீர் நாள் கூட்டங்களில் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு […]

வாடிப்பட்டி தாலுகா இ-சேவை மையத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும்  இ-சேவை மையத்தில்  பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கள் வந்து செல்லும் இந்த இ-சேவை மையத்திற்கு மக்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கைகள் கிடையாது. வாடிப்பட்டி வட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது… செய்தியாளர் வி காளமேகம்

ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாய பயிற்சி..

இராமநாதபுரம், அக்.20- இராமநாதபுரம் உழவர் மையத்தில் அட்மா சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயப் பயிற்சி நடந்தது. உயர் சாகுபடி தொழில்நுட்பம், நெல் செயல்விளக்கத்திடல்அமைத்தல், மண்புழு உரக் கூடாரம் அமைத்தல், தீவனப் பயிர் சாகுபடி செய்தல், கறவை பசுக்கள், வெள்ளாடுகள், நாட்டுக்கோழி வளர்த்தல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணைய திட்டப் பணிகள் தொடர்பாக ராமநாதபுரம் வட்டாரத்தில் இருந்து மானாவாரி பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க தேர்வான 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை […]

மண்டபம் வட்டார சுகாதார பேரவை கூட்டம்..

இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப் புளியில் உள்ள மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டபம் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். பருவ மழை தொடங்கி உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் […]

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அமைச்சர் கே.என்.நேருவிடம் முக்கிய கோரிக்கை..

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். மனுவில், சாம்பவர் வடகரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு திருமண மண்டபம், குடிநீர் வசதி மற்றும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றுத்தர வேண்டும் என திமுக தெற்கு […]

இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் இரவில் பறிமுதல்..

இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள பத்திப்பதிவு அலுவலகத்தில் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு  நெ 1 சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக சார் பதிவாளர் முத்து பெத்தாச்சியிடம் விசாரித்து வருகின்றனர். இரவில் நடத்திய சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்..

ராமநாதபுரம், அக்.20 –  திருவாடானை வட்டார விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக் கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமை வகித்தார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.சி.ஆனி முத்து, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஅன்வர்ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் மதிவாணன் வரவேற்றார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் சாகுபடி பாதித்த விளைநிலங்கள்  உரிய முறையில் […]

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி 120வது ஆண்டு விழா..

இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியின் 120 ஆம் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை. ஆர்.அருண்மொழி வரவேற்றார். பள்ளி தாளாளர் ஆர் பி கே ராஜேஸ்வரி நாச்சியார் தலைமை வகித்தார். பள்ளி செயலர் ராஜ கே பி எம் நாகேந்திர சேதுபதி முன்னிலை வகித்தார். நடிகர் கலைமாமணி செந்தில் பேசினார்.  ராமநாதபுரம்.l இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!