திமுக கட்சி வன்முறையை ஆதரிக்காது…விருதுநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…..

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசும்போது,  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக […]

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி..

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை  மற்றும் பிட்( fit India) இந்தியா  எனும் அமைப்பு சார்பில் ஆரோக்கியம், உடல் நலம் மனநலத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது . இதில்  மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டட் விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் நரேந்திர குப்தா மற்றும் 50 வீரர்கள் கலந்து கொண்ட உடல்நலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகய்களை ஏந்தி சைக்கிளில் விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.52 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்..

இராமநாதபுரம், அக்.28 – இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர்விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்டார். இதன்படி 4 சட்டமன்றத் தொகுதிகளில் 5,73,462 ஆண், 5,78,771 பெண், மூன்றாம் பாலினத்தவர் 69 பேர் என 11,52,302 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன் ஜன […]

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் “கலைத் திருவிழாவினை” 26.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கொண்டு கலைகளை மாணவர்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கவின் கலை, நுண்கலை, இசை, கருவி இசை, இசை சங்கமம், நாடகம், நடனம் மற்றும் மொழித்திறன் […]

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்..டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு..

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா, நாளை துவங்கி, 30ம் தேதி நிறைவு பெறுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பாதுகாப்பு பணியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பை பலப்படுத்த டி.ஐ.ஜி.,க்கள் வேலுார் முத்துசாமி, திருச்சி பகலவன், கோவை சரவணசுந்தர், தஞ்சாவூர் ஜெயந்திரன் ஆகியோரும், எஸ்.பி.,க்கள் வேலுார் […]

மதுரையில், அரசு நிறுவனங்களில், பொது கணக்கு குழுவினர் ஆய்வு..

மதுரை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர்/சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை  தலைமையில் , சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்/சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ஆர்.ஈஸ்வரன்  (திருச்செங்கோடு), நத்தம் இரா. விஸ்வநாதன், (நத்தம்) எஸ்.எஸ்.பாலாஜி, (திருப்போரூர்) ஜி.வி.மார்க்க ண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் சிட்டம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலும், மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும் மதுரை டோக் பெருமாள் கல்லூரியிலும், மதுரை ஆவின் பாலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்றப் பேரவை […]

இடிந்து விழும் நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் விபத்து ஏற்படும்முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனையானது தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் இந்த மருத்துவமனை முன் நுழைவாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விடுவடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில்விரிசல் ஏற்பட்டுள்ளது  மருத்துவமனைக்கு […]

மதுரை  மாநகராட்சி முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் மேயர்  இந்திராணி பொன்வசந்த் ஆய்வு..

மதுரை: மதுரை மாநகராட்சி கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலை மற்றும் தெப்பக்குளம் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலை இடங்களில், மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் லி.மதுபாலன்  ஆகியோர் இன்று (26.10.2023) ஆய்வு மேற்கொண்டனர். முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர்களின் பிறந்த நாள் விழா எதிர்வரும் 30.10.2023 அன்று  தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் […]

மனித நேயம் மாறாத காவல் துறை.. குவியும் பாராட்டுக்கள்…

மதுரை:                                                                              பொதுவாக, போலீசார் என்றால் மிகவும் கடுமையானவர்கள் என்றும், எதிலும் கடுமையாக இருப்பார்கள் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் நிலையை மாற்றி, காக்கி […]

உலக அமைதிக்காக 15ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உபி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு  மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார்  சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து  பாராட்டினார். உத்திரபிரதேச மாநிலம் ஜோன்பூரை சேர்ந்தவர்   வீரேந்திர குமார் மோரியா வயது 32. உலக அமைதிக்காகவும், போதை பொருள் இல்லா உலகம் உருவாகவும் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 12 ஜோதி லிங்க தரிசனம் […]

மதுரையில் குடும்ப பிரச்சனையால் நகரின் முக்கிய  சிக்னலில் தீக்குளிக்க முயன்ற முதியவரால்  பரபரப்பு- பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..

மதுரையின் முக்கிய சாலை சந்திப்பதாக இருக்கும் காளவாசல் சிக்னலில் முதியவர் ஒருவர் தன்மீது பெட்ரோலை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டு எரிந்த நிலையில் சாலையில் ஓடியவரை அங்கிருந்த போக்குவரத்து காவல் பணியில் இருந்த காவலர் அனிதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்  அக்கம்பக்கத்தினர் சாதுரியமாக செயல்பட்டு அவர் மீது பற்றி இருந்த தீயை அனைத்து பின் முதியவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் தீக்குளிக்க முயற்சி […]

விதைப்பந்துகள் தயார் செய்து பள்ளி மாணவ மாணவிகள் சாதனை; பொதுமக்கள் பாராட்டு..

தென்காசி மாவட்டம் வல்லம் நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் ஒரு லட்சம் மர விதைகளைக் கொண்டு 18,000 விதைப்பந்துகளை செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் அந்த விதைப்பந்துகளை சமூகப் பொறுப்புடன் மலைப் பகுதிகளில் விதைக்க மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனிடம் ஒப்படைத்தனர். சாதனை படைத்த வல்லம் பள்ளி மாணவ மாணவிகளை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் பெரிதும் பாராட்டினர். டாக்டர் அப்துல் கலாமின் கனவு திட்டமான மரம் வளர்ப்பை ஆதரித்து அதிகரிக்கச் செய்யும் பணியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த […]

மதுரை பசுமலையில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகன மோதி விபத்து..

மதுரை பசுமலை அருகே இன்று மாலை 4.30 மணி அளவில் சிவகாசியிலிருந்து சேலம் செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி வந்தவர் மலைச்சாமி., இவர் ஆரப்பாளையம் செல்வதற்காக பசுமலை பகுதிக்கு வந்த போது உசிலம்பட்டி தாலுக்கா சீமானுத்து கிழக்குத் தெரு சேர்ந்த அழகுபாண்டி (24) வயது இளைஞர் உயர்ரக அதிக திறன் கொண்ட யமஹா இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து முன்பு மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் […]

இராமநாதபுரத்தில்  வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு  நவ.4, 5, 18, 19ல்  வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..

இராமநாதபுரம், அக்.26- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள் 1374 வாக்குச் சாவடிகளில் நவ. 4, 5, 18,19 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி நாளை( அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள்ளன. 2024 ஜன.1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு […]

எடப்பாடி பழனிச்சாமி அக்.30 ல் பசும்பொன் வருகை: பரமக்குடியில் அதிமுக ஆலோசனை..

இராமநாதபுரம், அக்.26 – இராமநாதபுரம்  மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி அக் 30ல் பசும்பொன் வருகிறார். அவருக்கு வரவேற்பளித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாவட்ட செயலர் முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக அமைப்புச் செயலர் சுதா.கே.பரமசிவம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மகளிரணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி (பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவர்), எம்ஜிஆர் மன்ற இணை செயலர்கள் நிறைகுளத்தான் (முன்னாள் எம்பி), […]

நெல்லையில் முக்கிய இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கும் பணி..

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதிய அடையாளங்கள் அழிக்கும் பணியை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கட்டுடையார் குடியிருப்பு பகுதியில் 24 மின்கம்பங்களிலும்,களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், புதுதெரு பகுதிகளில் 20 மின்கம்பங்கள், 1 தண்ணீர் தேக்க […]

மதுரையில் பட்டப்பகலில் மனைவியின் கண்முன் முதியவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த இளைஞர்கள் – காவல்துறையினர் தீவிர விசாரணை..

மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி (S/O மாயாண்டி) மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமானதை தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.   இங்கு கணவன் மனைவி இருவர் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பொங்கொடி யின் வீட்டிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த […]

சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம், அக்.24-  ராமநாதபுரம் மாவட்டம் சோஷியல் டெமாகரடிக், டிரேடு யூனியன் சார்பில் ஊரக பனியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. டிரேடு யூனியன் மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை வகித்தார்.  மாநில தலைவர், முஹமது ஆஷாத், மாநில பொதுச் செயலர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர், வுமன் இந்தியா இயக்க மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வு கூட்டத்தில், CSTs, CBC, CRP போன்ற துறை களைசேர்ந்த, ஊரக […]

பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கான கூடைப்பந்து போட்டி

இராமநாதபுரம், அக்.24- இராமநாதபுரம் கூடைப்பந்து சங்கம் சார்பில் கனகமணி அம்மாள் கோப்பைக்கான பள்ளி,  கல்லூரிகளுக்கு இடையிலான 16 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. டாக்டர் அரவிந்தராஜ் தலைமையேற்றார்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் திருவெற்றியூர் SNMS மெட்ரிக். பள்ளி, ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதல் 2 இடம் பிடித்தன. பள்ளி, கல்லூரிக்கான மாணவிகளுக்கான போட்டியில் வேலுமாணிக்கம் மெட்ரிக் […]

சினிமா பாடலுக்கு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி..வீடியோ பதிவு..

மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப்புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை என்பதால் , ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அவ் வழியே கடந்து செல்கின்றனர். இந்த நிலையில்,  ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டவுன்ஹால் பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் ஒலிபெருக்கியில் பாடல்கள் இசைக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்த போதை ஆசாமி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!