மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆலையின் அரவைப் பணிகளை துவங்காமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசை கண்டித்தும், இந்த (2023- 2024) ஆண்டிற்கான அரவை பணிகளை துவங்க வலியுறுத்தியும், ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் கையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆயிரகணக்கான கரும்பு விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் […]
Category: தேசிய செய்திகள்
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தை துார்வார கோரிக்கை..
இராமநாதபுரம், அக்.31- பரமக்குடி அருகே பிரசித்தி பெற்ற நயினார்கோவில் நாகநாத சுவாமி வாசுகி தீர்த்த குளத்தை தூர்வாரக் கோரி தீர்த்த பாதுகாப்பு சங்கத்தினர் வலியுதுத்தி உள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகள் பெற்ற இக்கோயில் முன் வாசுகி தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு பரிகாரம் தேடி வருவோர் குளத்தில் நீராடிய பின் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். குளத்தில் கழிவு நீர் கலந்து […]
நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு..
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை காவலர்கள் ஏற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் தலைமையில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தனுசியா மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேசிய ஒற்றுமை நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் […]
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா: 117 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம், அக்.30 – இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி, 61-வது குருபூஜையையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை ஏற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பயனாளிகளுக்கு அரசு […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் மதுரை […]
உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா..
உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் தேவர் போல் வேடம் அணிந்து ஊர்வலம் வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதன் முறையாக சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தேசியத்தலைவர் பசும்பொன் தேவர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.பின்னர் […]
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை..
இராமநாதபுரம், அக்.30- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (அக்.30) மலர் மாலை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் வருவாய், பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதி, மனிதவள மேலாண் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, […]
உதகையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாடு..
தமிழக பத்திரிக்கையாளர்கள் சார்பாக உதகையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பாட்ஷா மற்றும் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இதில் உதகை மாவட்ட நீதிபதி உதகை சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ மனை டீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறந்த சேவையாற்றிய சமூக சேவைக்கான விருதுகள் மற்றும் சிறந்த நிர்வாகிகளுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. […]
கேரளா மாநிலத்தில் குண்டுவெடிப்பு எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு..
கேரளம் மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே […]
கீழக்கரை கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் துவக்கம்..
இராமநாதபுரம், அக்.30 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் நிறுவப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து பேசுகையில் செய்யது ஹமிதா கல்லூரியில் தொடங்கிய ரோட்டரி கிளப் மூலம் தலைமைப்பண்பு தனித்திறன் மேம்பாடு, கூர்நோக்கு சிந்தனை, சமுதாயப் பணி ஆகிவற்றில் மாணவ மாணவியர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமையும் என்றார். மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் தினேஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் […]
உசிலம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணியை துவங்கிய தன்னார்வ அமைப்பினர்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி கண்மாய்., சுமார் 40 க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் உசிலம்பட்டி நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த கண்மாயை தூர்வார கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து தூர்வாரி தூய்மையான கண்மாயாக மாற்றினர். […]
பசும்பொன்னில் தேவர் நினைவிடம் முன் மேற்கூரை திறப்பு..
இராமநாதபுரம், அக்.29- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி பரமக்குடி, கமுதி வட்டங்களில் மேற்கொண்டுள் திட்டப்பணிகளை பார்வையிடுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ, முருகேசன் எம் எல் ஏ முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.35.24 கோடி மதிப்பில் பார்த்திபனூர் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கமுதி புறவழிச்சாலை பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து […]
ராமநாதபுரத்தில் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பாராட்டு சான்று..
இராமநாதபுரம், அக்.29- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கல்வி ஒருங்கிணைப்பாளர் சதக் அப்துல்லா வரவேற்றார். அறிவியல் கண்காட்சியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்ய ராஜ் துவங்கி வைத்தார். அழகப்பா பல்கலை. அரசுக் கல்லூரி இணைப் பேராசிரியர் கருணாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் முத்துலட்சுமி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் […]
பசும்பொன்னில் தேவருக்கு ரூ.1.55 கோடி மதிப்பில் 2 மண்டபம்..
இராமநாதபுரம், அக்.29- இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாடு அரசால் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் 2 மண்டபம் அமைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர். ராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் மிகுந்த வசதி […]
பாடி பில்டிங் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் தமிழர்கள் பலர் பதக்கத்தை வென்று வருவார்கள் நடிகர் ரோபோ சங்கர் பேச்சு..
மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 37 வது மிஸ்டர் மதுரை போட்டியானது காந்தி அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர், மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில் குடும்பத்துடன் கலந்து கொண்ட திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டார். பின்னர் […]
சோழவந்தான் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்..
சோழவந்தான் எம் வி எம் மருது மகாலில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார் வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் விழாவினை தொகுத்து வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்கரை மஞ்சுளா ஐயப்பன் மன்னாடிமங்கலம் பவுன் முருகன் காடுபட்டி ஆனந்தன் குருவித்துறை ரம்யா […]
கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..
மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,மதுரை திருப்பாலை. இ.எம். ஜி. யாதவர் பெண்கள் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடன் உள்ளனர். செய்தியாளர் வி காளமேகம்
பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதி விபத்து. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.
மதுரை அவனியாபுரம்,சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார் நேற்று காலை மருதுபாண்டியர் குருபூஜை தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, திடீரென செக்போஸ்ட்டில் இருந்த போலீசார் மீது மோதியது. இந்த விபத்தில் செக் போஸ்ட் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வேலாயுதம், கிங்சன் ஜேக்கப், காவலர் கண்ணன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடன் பணிபுரிந்த சக காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உடனே […]
திறன்களை வளர்க்கும் தமிழ்நாடு அரசின் சிறார் இதழ்கள்; தென்காசி மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி..
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன், அறிவு, படைப்பாற்றல், எழுத்தாற்றல், வாசிப்பு திறன், மொழி உணர்வு உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் சிறார் இதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழ்களை படித்த தென்காசி மாவட்ட பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தோண்ட தோண்ட ஊற்று நீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்க படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். […]
நகரவாசிகளுக்கு முன்மாதிரி கிராமம்..ஆடம்பரம்-வீண் செலவுகளுக்கு தடை..
மாறிவரும் நவீன காலத்திற்கேற்ப மனிதர்களின் பழக்கவழங்கங்களும் மாறி வருகின்றது. அனைவரும் ஆடம்பரத்தின் பின்னால் சென்று கொண்டுள்ளனர்.இவ்வாறில்லாமல் தனி நபர் மட்டுமல்லாமல் ஒரு கிராமமே தங்களுக்கு தாங்களே ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு சுய கட்டுப்பாட்டை விதித்து சத்தமில்லாமல் ஊர் கட்டுப்பாடாக்கி சாதித்துக் காட்டியுள்ளனர் கிராம மக்கள்.இதுபற்றிய விபரம் வருமாறு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி பஞ்சாயத்து.இந்த பஞ்சாயத்தில் நக்கலப்பட்டி மாதரை குஞ்சாம்பட்டி பெருமாள் கோவில்பட்டி பூச்சிபட்டி உள்பட 12 கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட […]
You must be logged in to post a comment.