ராமேஸ்வரம் மீனவர் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் முடிவு..

இராமநாதபுரம், நவ.3 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமேஸ்வரம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 64 மீனவர்கள், 10 விசைப்படகுகளை மீட்டு தரக்கோரி உண்ணாவிரதம், ரயில் மறியல் போராட்டத்திற்கு மீனவர்கள்  இன்று (நவ.3) அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்குப்பின்னர் கலெக்டர் கூறுகையில், மீனவர்களின் பிரச்னை குறித்து , மத்திய அரசிற்கு மாநில அரசு […]

திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் பலி..

திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் பலி. தென்னந்தோப்பில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே கீழ முத்துப்பட்டி பொற்காலம் நகரை சேர்ந்தவர் முத்துராமன் இவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் அஜித்குமார் (வயது 27) இவர்  கப்பலூர் அருகே தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான 13 ஆடுகளை தினமும் ஈஸ்வரி மேய்ச்சலுக்கு  […]

அறிவியல் களியாட்டம்…எளிய அறிவியல் சோதனைகள்..

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம்  எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பாக அறிவியல் களியாட்டம் என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் அவர்கள் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் […]

உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது..

உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்; குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன் பிரபு ஏற்பாட்டில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் இயற்கை உணவு அருந்தினால் அதன் நன்மைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பாரம்பரிய […]

முதுகுளத்தூர்,  பரமக்குடி தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்..

இராமநாதபுரம், நவ.2 – இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர், பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான அய்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், அதிமுக அமைப்புச் செயலருமான சுதா.கே.பரமசிவம், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர்கள் நிறைகுளத்தான், சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலர்கள் காளிமுத்து, முனியசாமி […]

இராமநாதபுரம் அருகே உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் பங்கேற்பு..

இராமநாதபுரம், நவ.2 ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உள்ளாட்சி தின கிராம  சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று  பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மிக முக்கியம் வாய்ந்த இக்கிராம சபை கூட்டம் என்பதால் அனைவரும் கலந்து கொண்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதி பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான மருச்சுக்கட்டி […]

இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரி கீழக்கரையில் அனைத்து ஜமாத் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம், நவ.2- பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து, அப்பாவி மக்களுக்கு எதிரான போரை நிறுத்த கோரி கீழக்கரை பொதுமக்கள் – அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.எஸ்.ஹபீப் நெய்னா கிராத் ஓதினார்.  எஸ்.பாசித் இலியாஸ்  வரவேற்றார். எம்.முகமது பரூஸ்,  எஸ்.சுல்தான் சிக்கந்தர், எம்.எஸ்.ஹமீது பைசல், கே.எம் எப்.பாரூக் ராஜா ஆகியோர் கண்டன கோஷமிட்டனர்.  போர் விதி முறைகளை மீறி  பாலஸ்தீன குழந்தைகள, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை […]

ஆளுநருக்கு கருப்பு கொடி அறிவிப்பு.. மதுரையில் பலத்த பாதுகாப்பு..

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் விமான நிலையம் .காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நான் உங்களை பொதுகூட்டை நான்கு வழிச்சாலை நுழைவாயில் கீழக்குயில்குடி விளக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் […]

தென்காசி நகராட்சியில் புதிய தூய்மை பணி வாகனங்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் துவக்கி வைத்தார்..

தென்காசி நகராட்சியில் தூய்மை பணிக்காக 6 புதிய வாகனங்களை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் துவக்கி வைத்தார். தென்காசி நகராட்சியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் மூலம் 43 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக புதிதாக வாங்கப்பட்ட 6 இலகுரக வாகனங்களை தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்காசி நகராட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பு நல்கவும், கழிவுகளை மக்கும் கழிவுகள், மக்காத […]

அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி..

இராமநாதபுரம், நவ.1- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.  அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.  முஹமது சதக் அறகட்டளை இயக்குனர் ஹபீப் முஹமது துவங்கி வைத்தார். 22 ஆடவர்,15 மகளிர் அணிகள் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் திருப்பத்தூர் ஆறுமுக பிள்ளை சீதையம்மாள் கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, […]

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..

இராமநாதபுரம், நவ.1 – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது.  இதில்  கலந்து கொண்ட  200க்கும் மேற்பட்ட மாணவர்களில்  87 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இதில் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தமிழ் வழி ஜூனியர் பிரிவில் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தேவிபட்டினம்  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ஆங்கில வழி ஜூனியர் பிரிவில் ராமநாதபுரம் நேஷனல் […]

பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..

இராமநாதபுரம், நவ.1 – இராமநாதபுரம் ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகியன சார்பில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த நில்! கவனி! செல்!  விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.  செய்யது அம்மாள் பொறியியல்  கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, விருதுநகர் ரோட்டரி சங்க […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: நவாஸ் கனி எம்பி வலியுறுத்தல்..

இராமநாதபுரம், நவ.1- தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை-ராமேஸ்வரம் என இரு மார்க்கங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எம்பி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு  ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி விடுத்துள்ள கோரிக்கை:  ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வெளியூர்களில் பணி செய்பவர்களாகவும், வியாபாரம் செய்வோராகவும் உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு […]

மதுரை-உசிலம்பட்டி அருகே மூன்று பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடு மற்றும் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு இரவு வீட்டின் கொட்டத்தில் கட்டி வைத்த நிலையில் காலையில் எழுந்து தண்ணீர் வைப்பதற்கு சென்றபோது 3 பசு மாடுகள் மற்றும் ஒரு ஆடு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இதுகுறித்து பின்னியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் […]

தென்காசியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி; அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்பு..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, […]

சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூர் கொண்டைம்பட்டியில் ஏஐடியுசி 104 ஆம் ஆண்டு துவக்க விழா..

சோழவந்தான் அக் 31. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஏ ஐ டி யு சி கட்டுமான சங்கத்தின் 104 ஆவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது .மாவட்ட செயலாளர் தாமஸ் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் கிளை செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு ராமர், கிளை பொருளாளர் சுரேஷ் ,மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக […]

இராஐபாளையத்தில் தொல்லியல் கண்காட்சியை துவங்கி வைத்த தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தங்க அரியலன்கள். சங்கு வளையல்கள், சுடுமண் உருவ பொம்மை, தண்ணீர் சேமித்து வைக்கும் குடுவைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்வில் தற்போது சூது பவள மணிகள், தங்க அணியாளர்கள், செப்பு காசுகள், தலையுடன் கூடிய திமிழ் காளைகள் உள்ளிட்ட 4600 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் கல்லூரி […]

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுக்க மத்திய அமைச்சரிடம் திமுக கூட்டணி எம்பிக்கள், மீனவர்கள் முறையீடு..

இராமநாதபுரம், அக். 31-  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் படி  மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, புதுதில்லியில் இன்று (அக்.31) சந்தித்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடிக்க தமிழக மீனவர் 37 பேரை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், 10 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

பரமக்குடி அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம்..

இராமநாதபுரம்,  அக் 31 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்விரோதம் காரணிமாக வாலிபரை ஓட, ஓட விரட்டி கொலை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ் (எ) வாணி கருப்பு, 25. எமனேஸ்வரம் வைகை நகரில் வசிக்கும் உரப்புளி அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நிதீஷ் 24. இருவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோயில் திருவிழாவில் தகராறு […]

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான  பள்ளிக்கல்வி கலைத் திருவிழா..

இராமநாதபுரம், அக்.31- தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா  ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளின் தொடக்க விழா இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து போட்டிகளைத் துவக்கி வைத்தார்  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.  முதன்மைக் கல்வி அலுவலர் அ.ரேணுகா வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உ.திசைவீரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!