மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இதுபோன்ற சம்பவம் விளாங்குடியில் தொடர்கதையாகவே உள்ளதாகவும், சேரும் சகதியுமான சாலையில் நடந்துக்கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த […]
Category: தேசிய செய்திகள்
சோழவந்தான் எம் வி எம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி உறுதிமொழி..
சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சோழவந்தான் தீயணைப்புத்துறை சார்பில் விபத்திலா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை வகித்தார் பள்ளி முதல்வர் செல்வம் முன்னிலை வகித்தார் சோழவந்தான் தீயணைப்பு நிலைய எழுத்தர் பெரியசாமி வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார் […]
இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..
விருதுநகர்: இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு பேரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ,அங்கு சோதனை செய்த அதிகாரிகள் […]
மதுரையில் மின்னல் தாக்கியதில் இரண்டு பழமையான கட்டடங்கள் சேதம்..
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களில் கனமழையானது பெய்து வருவதனால் நள்ளிரவு நேரங்களில் மதுரையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை காக்கா தோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டடத்தின் […]
உசிலம்பட்டி அருகே குடியிறுப்பு பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு …
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் உள்ளது டி.இராமநாதபுரம் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் அருகிலுள்ள வண்டாரி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடை எவ்வித முன்அறிவிப்பும் இன்றி டி.ராமநாதபுரத்திற்கு இன்று மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.கிராமத்தில் குடியிறுப்பு பகுதியில் திடீரென மது பானக்கடை வந்ததால் ஆவேசமடைந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஒயின்ஷாப்பை முற்றுகையிட்டனர்.இவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மகளிர் அணித்தலைவர் அம்பிகா தலைமையில் பெண்கள் திரண்டதால் அப்பகுதியில் […]
உசிலம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பனை மரத்து பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராவணண்(47).கறிக்கடை வைத்துள்ளார்.வரும் தீபாவளி நேரம் என்பதால் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்வதற்காக வெளியூரிலிருந்து 3 ஆடுகளை வாங்கி தனது உறவினர் வீட்டின் அருகிலுள்ள காலியிடத்தில் கட்டி வைத்து கேட்டை பூட்டியுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு உசிலம்பட்டிப் பகுதியில் நல்ல பெய்துள்ளது.நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.ராவணனின் உறவினர் கடைக்கு ஆடுகளை வெட்டுவதாக நினைத்து வெளியே வந்து பார்க்காமல் தூங்கியுள்ளார்.ராவணன் அதிகாலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகள் […]
10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை: இராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு..
இராமநாதபுரம், நவ.7- அரசு அங்கீகரித்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என பொய் தகவல் பரவி வருகிறது. இன்றும் பல்வேறு கிராம பகுதி கடைகளில் 10 ரூபாய் நாணயம் ஏற்க மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும். நாட்டின் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் […]
ஆதரவற்றோருக்கு தீபாவளி பொருட்கள்..
இராமநாதபுரம், நவ.,6 – இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பா சேவை நிலையம் – அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகை புத்தாடை வழங்கும் சேவை விழா நடந்தது. ராமையா சுவாமி தலைமை வகித்தார். கண்ணபிரான் வரவேற்றார். அறக்கட்டளையின் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து குருநாதர் ஶ்ரீ ஆர்.எஸ்.மோகன், சேவைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். ராமநாதபுரம் ஶ்ரீ ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரை ஆற்றினார். 10, பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த […]
ராமநாதபுரத்தில் மாநில யோகா போட்டி: பள்ளி மாணாக்கர் பங்கேற்பு..
இராமநாதபுரம், நவ.5 தமிழ்நாடு யோகாசன சங்கம் ராமநாதபுரம் கிளை, நேரு யுவ கேந்திரா, இன்பன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில ஓபன் யோகாசன போட்டி இன்று நடந்தது. ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்க செயலர் யோகா என்.ஸ்ரீதரன் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்க துணைத்தலைவர் பி.நம்பூதியன் முன்னிலை வைத்தார். இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் எம்.தாமஸ் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் […]
ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம், நவ.5- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு பகுதிகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். ஆய்வுக்கூடம், மருந்துகள் இருப்பு வைப்பு அறை, நோயாளிகள் உடன் வருவோர் தங்கும் அறை, ஆரம்ப சுகாதார நிலைய உட்கட்டமைப்புகள் வசதிகளை பார்வையிட்டார். […]
மதுரையில் சாலையில் பைக்கில் சென்றபெண்ணிடம் தாலி செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்.. சாலையில் இழுத்து சென்ற கொடூரம்..சிசிடிவி காட்சிகள்..
மதுரை மாநகர பகுதிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் பகுதியில் இன்று இரவில் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது பின்னால் வந்த மர்ம நபர்கள் திடீரென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை இழுத்து வழிப்பறி செய்துள்ளனர். அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த நிலையிலும் அப்பெண்ணை தரதரவென இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூடல் புதூர் காவல்துறையினர் வழிப்பறிக் கொள்ளையர்கள் […]
2 பெண் குழந்தைகளின தாய் தூக்கிட்டு தற்கொலை..
இராமநாதபுரம், நவ.5- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது 2 வது மகள் கனிமலர், 35. ஏர்வாடி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் நாகநாதன். கனிமலருக்கும், நாகநாதனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மனநலம் பாதித்த கனிமலர் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள முயன்ற கனிமலரை உறவினர்கள் […]
(e-NAM) திட்டத்தில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் பயிற்சி..
இராமநாதபுரம், நவ.5- இராமநாதபுரம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழு சார்பில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை சார்ந்த தொழில்நுட்ப அலுவலர்களுக்கான தேசிய மின்னணு வேளாண் சந்தை (e-NAM) பண்ணை முறையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் பயிற்சி நடந்தது. ராமநாதபுரம் வேளாண் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் ஆ.பாஸ்கர மணியன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் பொ.ராஜா வரவேற்றார். அவர் பேசுகையில், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல […]
கல்லூரி மாணவியின் கல்விக்கு உதவிய தென்காசி காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..
குற்றாலம் மாணவியின் கல்விக்கு உதவிய தென்காசி காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது குடும்ப வறுமை காரணமாக தேர்வு கட்டணம் செலுத்த சிரமப்பட்ட நிலையில், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கட்டண தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை மாணவியிடம் உடனடியாக வழங்கி உரிய நேரத்தில் உதவி செய்துள்ளார். மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய […]
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு: கீழக்கரையில் மாணவர்கள் பேரணி..
இராமநாதபுரம், நவ.5 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை செயல் திட்ட மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் அக் 30 முதல் நவ.5 வரை ஊழலுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேரணி மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார். கல்லூரி முதல்வர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் […]
ராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி உடைகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்..
இராமநாதபுரம், நவ.4- மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். கலெக்ர் விஷ்ணு சந்திரன் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இக்கண்காட்சி நவ.3 முதல் நவ.9 வரை நடைபெறுகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, கைத்தறி ஆடைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் […]
ராமநாதபுரத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் துவக்கம்: கலெக்டர் பங்கேற்பு..
இராமநாதபுரம், நவ.4 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன், துவக்கி வைத்து நடை பயிற்சியில் பங்கேற்றார். நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் 8 கிமீ தூரம் பாதை தேர்வு செய்யப்பட்டு, நடைபயிற்சி துவங்கி வைக்கப்பட்டது. பொதுமக்களிடையே உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்கம் மாறுதல் அதிகரிப்பால் […]
மதுரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர்.. முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறையினர்..
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். ஏர் இந்தியா விமானம் மூலம் பகல் ஒன்றும் போது மணியளவில் மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான […]
திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி இரு சக்கர வாகத்தில் சென்ற வாலிபர் பலி..
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் நோக்கி செனற அரசு பேருந்தை ஓட்டுனர் ஜெயக்குமார் நடத்துனர் பாக்கியராஜ் மற்றும் பயணிகளுடன் திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த பஸ் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் […]
கமுதியில் 123 மிமீ மழைப்பொழிவு: மரம் விழுந்து கடை முற்றிலும் சேதம்..
இராமநாதபுரம், நவ.4 – இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. கடலோரப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது. இதில் கமுதியில் 123 மிமீ., தீர்த்தாண்டதானம் 69.80 மிமீ, பரமக்குடி 66 மிமீ ஆர்.எஸ் மங்கலம் 63 மிமீ, வட்டாணம் 40.20 மிமீ, ராமநாதபுரம் 36.40 மிமீ, திருவாடானை 27 மிமீ, முதுகுளத்தூர் 20 மிமீ, தங்கச்சிமடம் 19மிமீ என மாவட்டம் […]
You must be logged in to post a comment.