ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே டாட்டா சுமோ காரில் கடத்தி வரப்பட்ட 2,659 கிலோ (58 மூட்டைகள்) ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா மற்றும் ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதற்கு முன்பு, ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் […]
Category: தேசிய செய்திகள்
ஏர்வாடியில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகரில் கட்டிட தொழிலாளியான செல்வராஜ் (விழுப்புரத்தைச் சேர்ந்தவர்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (வயது 22) மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜுக்கு முதல் மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் மற்றும் மகள் கோமதியும், இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் மகன் சுரேஷ், மகள் தேவி ஆகியோர் உள்ளனர். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.இதனிடையே […]
தொண்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில் உள்ள மகாசக்திபுரம் பகுதியில், அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 25 படகுகள் பங்கேற்றன. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு […]
திருவாடானை பெரிய சிவன் கோயிலில் சப்தாவர்ணம் விழா:
ராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. 10 நாள் திருவிழா மற்றும் தேரோட்டம்: கடந்த மே 31 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய 10 நாள் திருவிழா, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான அன்று, இரண்டு தேர்கள் ஓடும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான […]
பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா புல்லந்தை கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் பூர்வீக விவசாய குடிகளாக இருந்து வருகிறார்கள் . கிராமத்தை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் நெல் விவசாயம் செய்ததில் பருவமழை தவறி பெய்த காரணத்தினால் கடந்த 2023 24 மற்றும் 202425 25 ஆம் ஆண்டு நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்நிலையில் இவர்கள் பயிர் காப்பீடு செய்ததால் அதற்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை […]
கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை .!
பக்ரீத் பண்டிகை தியாகப் திருநாள் கொண்டாட்டம். ! இஸ்லாமியர்கள் இறைவனை வணங்கி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.!! ஹஜ் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, இஸ்லாத்தின் […]
சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் சிறப்பு சொற்பொழிவை மௌலானா பிலால் முஹம்மது அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் […]
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் 26 கூட்டமைப்பு இணைந்து ஈதிக மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தினர் தமிழகம் முழுவதும் இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள் பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் […]
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு.!
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு மற்றும் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது கோவையில் வருகின்ற 2025 நவம்பர் மாதம் 6.7.8.9. ஆகிய தேதிகளில் கோவையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது இந்த மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது இதில் சி பி ஐ எம் மாநில மாவட்ட நிர்வாகிகளும் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சி ஐ டி யு […]
ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம்விழா.!
திருவாடானை அருகே ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம் விழா. பக்தர்கள் திரளாக பங்கேற்பு ராமதாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அ.கீழக்கோட்டை கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வோர் நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. திருவிழாவான இன்று பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கருப்பசாமி கையில் அரிவாளுடன் பிள்ளையார் கோவிலில் இருந்து கரகம், மதுக்குடம், சந்தன குடம், […]
திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது. முன்னதாக, அனுஞ்சை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் […]
ஊரணியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஊரணியில் மூழ்கி ஒன்பது வயது ரோஷினி மற்றும் பதினொரு வயது பிரசன்னியா ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இந்த இரண்டு சிறுமிகளும் குளிக்கச் சென்று வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஊரணியின் கரையில் குளிப்பதற்கான பொருட்கள் (வாளி, துண்டு, சோப்பு டப்பா, செருப்பு) கண்டெடுக்கப்பட்டதால், ஊரணிக்குள் தேடுதல் வேட்டை […]
என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் […]
மேட்டுப்பாளையம் நகராட்சி பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் தேர்வு விடுமுறைக்கு பின்பு வருகின்ற ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளிகள் துவங்க உள்ளதால் தூய்மைப் பணி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை நகராட்சி ஆணையாளர் அமுதா பார்வையிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைகளின் படியும், மேட்டுப்பாளையம் நகராட்சிப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்திலும் தூய்மைப்பணிகள் மற்றும் […]
திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]
திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!
திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு […]
திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!
திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!
பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]
வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!
வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..! ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]
தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை.!
தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை தாய் உள்ளிட்ட யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் இரண்டு நாளாக முயற்சி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி அமைந்துள்ளது இப்பகுதியில் (மே 26 அன்று) ஆண் குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ஆற்று மீனவர்கள் மூலமாக தகவல் கிடைத்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் […]