தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்., இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு […]
Category: தேசிய செய்திகள்
மதுரையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு .. நிர்வாகத்தின் கவன குறைவா??
மதுரை: மதுரை மாவட்டத்தில், தீபாவளி இனிப்புகள் தயாரிக்க இலக்கு வைத்து ஆவின் நிர்வாகம் செயல்பட்டதால், உற்பத்தி பாதித்து பால் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் பாக்கெட் பால் சப்ளை பாதிக்கப்பட்டது. மதுரையில் தினமும் 1.92 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது. பால் வரத்து குறைவு, இனிப்புகள் தயாரிக்கும் பாலினை மடை மாற்றம் செய்வது, உள்ளிட்ட காரணங்களால் ஒரு லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில், வழக்கம் போல பால் […]
தீபாவளியன்று மதுரையில் ஏற்பட்ட தீ விபத்துக்கள்..
மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால் திடீரென அவற்றில் தீபிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் […]
மதுரையில் மலையளவு குவிந்திருக்கும் குப்பைகள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்..
தீபாவளி பண்டிகை இன்று காலை முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று நள்ளிரவு வரையில் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான சாலையோரக்கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக புத்தாடைகள், பாய், தலையணைகள், கைலிகள், குறைந்த விலை துணி ரகங்கள், காலணிகள், பேன்சி ரகங்களான கவரிங் வளையல் , கம்மல், நெக்லஸ், செயின் ,பேக்குகள், போர்வை, மிதியடிகள் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருள்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.அதனை பொதுமக்கள் மிகுந்த […]
மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள்: ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..
இராமநாதபுரம், நவ.12 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் ஆக.18ல் மீனவர் நல மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவ வீட்டு வசதி திட்டம் மூலம் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் மண்டல மீன்வளம், மீனவர் நலத்துறை துணை […]
மதுரையில் வடகிழக்கு பருவ மழைக்கு இதுவரை 4 கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..
மதுரை ஹார்வி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு எஸ்எஸ் காலனி வடக்கு வாசல் பகுதியில் 35 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு கட்டடம் உள்ளது. இதில் பழைய பொருள்கள் வைப்பதற்கும், வீட்டிற்கு அருகாமையில் உள்ள உணவகத்தின் பொருள்களை வைத்து எடுத்து செல்வதற்குமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல உணவகத்தில் பணியாற்றும் பிரசாத் என்பவர் வீட்டின் கதவை திறக்க முயற்சிசெய்த போது திடீரென கட்டடம் […]
பேரையூரில் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது..
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவரது பூட்டியிருந்த வீட்டில் கடந்த மாதம் 16ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த ( 20 1/2 ) இருபதரை பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக பேரையூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி இலக்கியா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்., இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் […]
விவசாயிகள் உசிலம்பட்டி அருகே காத்திருப்பு போராட்டம்..
வைகை அணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் நீர் திறக்க கோரி விவசாயிகள் உசிலம்பட்டி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணை தனது முழு கொள்ளவான 71 அடியை எட்டியுள்ள சூழலில் கடந்த செப்டம்பர் மாதமே தண்ணீர் திறந்திருக்க வேண்டிய திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தற்போது வரை தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பல்வேறு விவசாய சங்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த […]
கடந்த 5 நாட்களாக நுரை வெளிவர தொடங்கிய நிலையில்., நுரைக்கு திரை போட்ட மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் மறுகால் பாயும் தண்ணீரில் கழிவு நீர் கலந்து கடந்த ஐந்து தினங்களுக்கு மேல் மலை போல் எழும்பி பொங்கி வரும் நுரை காற்றில் கலந்து அவனியாபுரம் – விமானநிலைய சாலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில்., கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் மறுகால் பாயும் போது ஏற்படும் வெண்ணிற நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த […]
ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம்..
ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம் தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணியசாமி அவர்கள் தலைமையிலும், பொற்கூடம் எஸ்.வி.ராணி, ஸ்டார் பில்டர்ஸ் டாக்டர் சித்ரா, அகஸ்தியர் ஹெர்பல் பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும், நிறுவனர், செயலாளர் செல்வி டாக்டர் பி.விஜயபாரதி வரவேற்புரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக […]
சங்கரன்கோவில் அருகே ரூ.4.61 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கீழவீரசிகாமணி கிராமத்தில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 97 பயனாளிகளுக்கு ரூ.4.61 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கீழவீரசிகாமணி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா முன்னிலையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களின் […]
இலஞ்சி டிடிடிஏ கல்லூரியில் தமிழ் மன்ற விழா; தென்காசி எம்எல்ஏ திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஷீலா நவரோஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவ ஆசிரியர் ஜெசுலின் அமிர்தா வேத பகுதி வாசித்தார். […]
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டம்…ஆலோசனைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்..
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாகதிருவாலவாயநல்லூர் சி புதூர் சித்தாலங்குடி கட்டகுளம் குட்லாடம்பட்டி செம்மிணிபட்டி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்டகிராமங்களில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா, மாணிக்கம் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமிராஜேஷ்கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறை துணை செயலாளர் எம் கே மணிமாறன் கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி ஆகியோர் வரவேற்றனர் முன்னாள் […]
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையத்தில்மழைக்கு கட்டிட சிமெண்ட் மேற்பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு..
தென் மாவட்டங்களில் ஒன்றிணைக்கும் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து பேருந்துகள் இயக்கப்படுகிறது கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வந்த மழையினால் முதலாவது நடைமேடையில் உள்ள மழைக்கு கட்டிட சிமெண்ட் மேற்பூச்சுக்கள் பெயர்ந்து திடீரென கீழே விழுந்தது. பயணிகள் அலறி அடித்து ஓடினர். நல்வாய்ப்பாக பயனளிக்கும் யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் […]
உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த இளைஞர் கைது… 4 கிலோ கஞ்சா பறிமுதல்..
தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் குறிப்பாக கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது அதனை தடுக்கும் விதத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் தனி குழு அமைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வப்போது கஞ்சா மற்றும் புகையிலை பறிமுதல் செய்து விற்பனை செய்து வருவதே கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எவ்வளவு தான் கஞ்சா குட்கா புயலே விற்பனை செய்து வருபவர்களே காவல்துறையினர் அடக்கி […]
உசிலம்பட்டியில் மாணவர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள நூலகம் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்எல்ஏ ஐய்யப்பன் இடம் கோரிக்கை வைத்திருந்தனர். எம்எல்ஏ ஐயப்பன் பலமுறை யூனியன் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .இந்நிலையில் இன்றும் மாணவர்கள் எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ நூலகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் உடன் எம்எல்ஏ ஐயப்பன் தலைமையிலான […]
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட முதலாளி குடியிருப்பில் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார். தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 […]
இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் கணித ஆசிரியர் உட்பட பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது..
இராமநாதபுரம், நவ.8- இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. பட்டயத்தலைவர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். தலைவர் ரம்யா தினேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயிருக்கு போராடிய பலருக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றிய டாக்டர் எம்.ஜவஹர் பாரூக், சிறந்த கல்விப்பணி ஆற்றிய கணித ஆசிரியர் எம்.சீனிவாசகன் (ஓய்வு), ஓவிய ஆசிரியர் ஜி.வேல்முருகன், விழாக்கள், விஷேசங்களில் சிறந்த […]
பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி தரிசனம்…
ராமநாதபுரம், நவ.7- கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். கடந்த அக்.30 தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இயலாததால் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு இன்று (நவ.7) மாலை அணிவித்து தரிசனம் செய்தார், தேவர் வீட்டில் […]
மனைவியின் பிறந்த நாள் அன்று மதுரையில் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்..
மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்தவருபவர் காளிமுத்து (42) இவர் கார்ப்பென்டராக பணிபுரிந்துவருகிறார். இவர் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து மரவேலைகளை பார்த்துவருகிறார். இவர் தனது மனைவி ஜாக்லின் ராணி (36) மகள் மதுமிதா (12) ஆகியோருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் இன்று காளிமுத்துவின் மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காளிமுத்து வாட்ஸ்அப் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து […]
You must be logged in to post a comment.