விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி சேர்ந்த கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி தனது ஊராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆனால்கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க விடாமல் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் இங்கே உள்ள 600 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்களுக்கு […]

நெல்லை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு தமுமுக சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் உணவு வழங்கல்..

நெல்லையில் தமுமுக சார்பில் ஆதரவற்ற‌ முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO WATER PURIFIER) மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபம் (ஆர்யாஸ் கல்யாண மண்டபத்தில்) இயங்கிவரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து நெல்லை டவுன் நகர தமுமுக சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO WATER) மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]

சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். மதுரையில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மருத்துவகல்லூரி டீன் ரத்தினவேல் பேச்சு..

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள (மேக்ஸிவிஷன்) தனியார் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. விழிப்புணர்வு பேரணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் துவக்கி வைத்தார். முன்னதாக நீரழிவு நோயினை பற்றி அவர் பேசியபோது‘ சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். ஒரு காலத்தில் காலரா போன்ற நோய் மேஜர் கில்லராக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை […]

பீச் வாலிபால் மாநில போட்டி: சித்தார்கோட்டை பள்ளி தகுதி..

இராமநாதபுரம், நவ.25 – இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து (பீச் வாலிபால்) 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் ஆடவர் பிரிவு போட்டி மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது . இதில் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப்பள்ளி 14, 17, 19 வயது பிரிவுகளில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போல் டேக்வாண்டா போட்டியில் மாணவி ராகவி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த மாணவர்களை […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் 24.11.2023 அன்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 6270 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 15698 ஹெக்டேர், பயறு வகைகள் 349 ஹெக்டேர், பருத்தி – 1255, கரும்பு 1222 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1255 ஹெக்டேர், தென்னை 14130 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு […]

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் ஆய்வுக் கூட்டம்; ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்..

தென்காசி மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை ஆய்வுக்கூட்டம் 24.11.2023 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய நோய்களை தடுக்கும் விதமாக நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பற்றியும் மற்றும் பொது சுகாதார துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெங்கு, மருத்துவ பேறு சம்பந்தமான ஆய்வறிக்கையினை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர். P.R.முரளிசங்கர் சமர்ப்பித்தார். அதனடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய […]

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் நேரில்ஆய்வு..

மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்  பிரமாண்டமாக தயாராகி வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு, மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர் . அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் மைதானத்தின் கட்டுமான பணிகளை  நிறைவு செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர், தென் தமிழக பகுதிகளிலே தமிழர்களின் பாரம்பரியத்தின்  அடையாளமாக திகழ்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக உலக […]

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம்..

இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம்  மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று பேசுகையில், மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க மாதந்தோறும் மீனவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதனடிப்படையில் இன்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைத்த […]

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசாரம்..

இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரசார துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். அவர் தெரிவிக்கையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023 டிச. 4 வரை அனைத்து […]

கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி: அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு..

இராமநாதபுரம், நவ.24 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் ராமேஸ்வரத்தில் நடந்தன. பள்ளி மாணாக்கருக்கான கலைஞர் காத்த மனித நேயம் கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி மீகா ஸ்னோபிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை, சான்று கேடயம் வழங்கப்பட்டது. பெரியார் அண்ணா வழியில் கலைஞர்  பேச்சு போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இப்பள்ளி […]

குற்றாலத்தில் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றும் கருத்தியல் பயிலரங்கம்; மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிக்கை..

குற்றாலத்தில் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றும் வகையில், திமுக மாணவரணி பயிலரங்கம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நவ.24 முதல் நவ.26 வரை தென்காசி குற்றாலம் கிரீன் ராயல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் திமுக மாணவரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இந்த பயிலரங்கத்தில் மதுரை […]

வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறப்பு… இருபுறங்களும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளும் ஓடுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் இடங்களையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பருவமழை கடந்த 15 நாட்கள் மேலாக தொடர்ந்து பெய்து வரக்கூடிய சூழலில் வைகை ஆற்றில் விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரில் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் விவசாயம் மற்றும் குடிநீர் சேவைகளை போட்டி […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

Mதென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.24 வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.11.2023 வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: கடலாடியில் 174 மிமீ மழை..

இராமநாதபுரம், நவ.23 – இராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரம் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய மழை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்தது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் கடலாடியில் 174 மிமீ, மழை அதிகளவாத பெய்துள்ளது. இதை தொடர்ந்து வாலிநோக்கம் 146 மிமீ, பரமக்குடி 88 மிமீ, ராமநாதபுரம் 85.60 மிமீ, தொண்டி 82.20 மிமீ, முதுகுளத்தூர் 80 மிமீ, கமுதி 74.80 மிமீ, தீர்த்ததாண்டதானம் […]

திருப்பரங்குன்றம் வந்தடை திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்குபெற இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர். 50 இருசக்கர வாகனத்தில் வந்த திமுக இளைஞரணியினருக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரவேற்பு. திருப்பரங்குன்றத்தில் திமுக  இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணியிருக்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன். மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்து நினைவு பரிசு வழங்கி இளைஞரணியினரை உற்சாகப்படுத்தினர். […]

நடுக்கடலில் விசைப்படகு மோதியதில் நாட்டுப்படகு மீனவரின் 2 கால் முறிவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இராமநாதபுரம், நவ 23- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. துறைமுகத்தில் இருந்து 3 நாட்டிக்கல் தொலைவில் வந்த ஜெயசீலன் என்பவரது விசைப்படகு, அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகு மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் நாட்டுப்படகு மீனவரான கரையூரையைச் துரைசிங்கம் என்பவரது 2 கால்கள், ஜெயசீலன் விசைப்படகின் இன்ஜின் இழையில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது.  காயமடைந்த துரைச் சிங்கத்தை சக மீனவர்கள் துரிதமாக மீட்டு […]

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு..

இராமநாதபுரம், நவ.23- இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மழை நீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து மழைநீர் தேங்காத வகையில் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிய கட்டடங்களை பார்வையிட்டார். மருத்துவ பயன்பாட்டிற்கான குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை பார்வையிட்டார். […]

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்..

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படுவது 58 கிராம கால்வாய் ஆகும்.கால்வாயில் தண்ணீர் வந்தால் 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில் வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்.ஆனால் தற்போது வைகை அணையின் நீர்;மட்டம் 70 […]

பள்ளி மாணாக்கர் குழுவினருக்கு பேட்ஜ். கலெக்டர் அணிவிப்பு..

இராமநாதபுரம், நவ.22 – இராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர் அணிக்கு பேட்ஜ் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குழு தலைவர்களுக்கு  கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேட்ஜ் அணிவித்தார். அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், இணைத்திறன் மேம்பட அணி துவங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் மாணாக்கரிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ஒவ்வொருவருடைய மேம்பாட்டுத்திறன் சிறந்து விளங்கி வருவதை எளிதாக உணர முடிகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டத்தை துவங்கி மாணாக்கரிடையே கல்வி சார்ந்த […]

உசிலம்பட்டியில் அமுமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ உடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளருமான மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் அமுமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மகேந்திரன் அலுவலகத்தில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் எழுமலை, பேரையூர் உசிலம்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!