மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..

மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா திங்களன்று ஐந்து மாநிலங்களில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய ஜன் ஔஷதி கேந்திரங்களின் செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை விநியோகித்தார். “பிரதமர் ஜன் ஔஷதி கேந்திராக்களில் கிடைக்கும் மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் பிஏசிஎஸ் மூலம் கிராமப்புறங்களில் […]

தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை […]

விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது […]

பல்கலை இடையே செஸ் போட்டி: 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி..

இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு […]

முதுநிலை நீட் தேர்வு 2024 ,வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

முதுநிலை நீட் தேர்வு 2024 , வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி […]

அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசு.!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி அறிக்கை..

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000/- வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் அறிக்கை.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000/- யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் […]

இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…

இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார்.  ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட […]

சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

 சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம் ஏற்ப்பட்டது இந்த பள்ளத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் இராஜபாளையம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியாக காணப்படுகிறது நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாததால் […]

குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது…

வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை […]

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில் தொடர்புடைய, 11 குற்றவாளிகளுக்கு 2008ஆம் ஆண்டில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது (12 பேரில் ஒருவர் இறந்து போனார்) இதனிடையே, பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகள் குஜராத் அரசால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் பூர்த்தி செய்தது, வயது, குற்றத்தின்தன்மை, சிறையில் நன்நடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு […]

இராமநாதபுரத்தில் முகவை சங்கமம் சார்பில் 6வது புத்தகத் திருவிழா பிப்.2ல் தொடக்கம்: கலெக்டர் தகவல்..

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் முகவை சங்கமம் 6.0 சார்பில் வாசிப்பை சுவாசிப்போம் எனும் 6 வது புத்தகத் திருவிழா பிப்.2 முதல் பிப்.12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் பார்வைக்கும், விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு புத்தகம் வாசிப்பு தொடர்பாக ஓவியக் கண்காட்சி, மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி இடம் பெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் […]

ராமேஸ்வரம், கமுதி பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு..

இராமநாதபுரம், ஜன.7- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்.கரிசல்குளம், பரளச்சி துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நாளை (08.01.24) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நீராவி, ராமசாமிபட்டி, KM கோட்டை, MM கோட்டை,  கரிசல்குளம், கோரைப் பள்ளம், TC புரம், முஸ்ட்டக்குறிச்சி, முதல்நாடு, மணக்கும், ஆசூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் தாலுகா வேர்க்கோடு […]

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை இன்று (07.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் தொழில் முனைவோர்கள் இணைந்து காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர்.

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி!!

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி.வரும் 19ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைக்கிறார், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்..

ஹைட்ரோ கார்பன் திட்டம்: ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்..

ராமநாதபுரம், நவ. 27- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதி கொடுக்கக் கூடாது எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில்  விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன்திட்டத்திற்கு ஓஎன்ஜிசி ., க்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் காசிநாத துரை தலைமை  வகித்தார். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார்.  மாவட்ட செயற்குழு […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே  நகைக்கடையில் பயங்கர தீ…ஒருவர் உயிரிழப்பு

மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் இரவு கடையில் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ்நான்கு மாடிகளை கொண்ட இந்த கடையில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டதால் உள்ளே இருந்த ஊழியர்கள் அவசரவசரமாக வெளியேறினர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில். மதுரை திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் […]

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்திலுள்ள சிறு குறு வியாபாரிகளிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பேசினார். அப்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன் அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் […]

அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் சேவாலயம் மாணவர்கள் விடுதியில் அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்தி புத்தகங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் நூலகத்தில் வாசித்த புத்தகங்களில் அவர்கள் மனதில் நிற்கும் விஷயங்கள் குறித்து பேச வைத்து பாராட்டப்பட்டனர். அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில்: தாய்மொழியை முதன்மையாக விரும்பி கற்பதோடு பல்வேறு மொழிகளை அறிந்துகொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். இன்று நாம் பேசும் போது தாய்மொழியோடு பிற […]

58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்..

உசிலம்பட்டி 58 கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்திட அறிவிப்பு செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இந்நிலையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், வைகை அணை 71 […]

மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசம் செய்த வாலிபர் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு..

மதுரை தேசிய நெடுஞ்சாலை மாடகொட்டான் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசத்தில் ஈடுபட்ட விஜய், பவித்ரன் ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். சாகசம் செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!