எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடுக்கடலில் விசாரணை !

ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் […]

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு !

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் R.N ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு இருப்பதுவெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்தூத்துக்குடி வெள்ளம் மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ராபிஸ்டன் குடும்பத்தில் […]

இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு […]

மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..

மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி.. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்..

சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்.. சோழவந்தான் பேரூராட்சியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தை திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் இதன்படி வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் உடைந்து போன மர சாமான்கள் போன்றவற்றை போகிப் பண்டிகை என்று தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி வாகனங்களில் பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுகள் சேகரிப்பு மையங்களிலும் கழிவுகளை கொடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது பேரூராட்சி சார்பில் அனைத்து […]

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்.. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி ஜனவரி-15 அன்று நடைபெறுவது வழக்கம். முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., கடந்த எட்டாம் தேதி மாவட்ட […]

தேசிய இளைஞர் தினம்: விவேகானந்தர் ஸ்தூபிக்கு சிறப்பு பூஜை !

அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் நடந்த ஆன்மிக மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் 1897 ஜன.25 ஆம் தேதி ராமநாதபுரம் வருகை புரிந்ததாகவும் . அவர் உரையாற்றிய கேணிக்கரை பகுதியில் விவேகானந்தர் ஸ்தூபி விளக்கு தூண் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விவேகானந்தர் நண்பர்கள் குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தர் ஸ்தூபிக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு […]

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை, அரசின் கருணை அடிப்படையிலான விடுதலை நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றது. மதுரையில் நடந்த மாநாட்டிலும் தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகும் பட்சத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை […]

யானை பாகருக்கு உதவிக்கரம் நீட்டிய கடையநல்லூர் எம்எல்ஏ..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க […]

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுதல் செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுதல் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சரக்கு […]

மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..

மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா திங்களன்று ஐந்து மாநிலங்களில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய ஜன் ஔஷதி கேந்திரங்களின் செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை விநியோகித்தார். “பிரதமர் ஜன் ஔஷதி கேந்திராக்களில் கிடைக்கும் மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் பிஏசிஎஸ் மூலம் கிராமப்புறங்களில் […]

தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை […]

விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது […]

பல்கலை இடையே செஸ் போட்டி: 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி..

இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு […]

முதுநிலை நீட் தேர்வு 2024 ,வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

முதுநிலை நீட் தேர்வு 2024 , வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி […]

அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசு.!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி அறிக்கை..

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000/- வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் அறிக்கை.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000/- யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் […]

இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…

இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார்.  ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட […]

சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

 சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம் ஏற்ப்பட்டது இந்த பள்ளத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் இராஜபாளையம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியாக காணப்படுகிறது நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாததால் […]

குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது…

வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை […]

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில் தொடர்புடைய, 11 குற்றவாளிகளுக்கு 2008ஆம் ஆண்டில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது (12 பேரில் ஒருவர் இறந்து போனார்) இதனிடையே, பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகள் குஜராத் அரசால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் பூர்த்தி செய்தது, வயது, குற்றத்தின்தன்மை, சிறையில் நன்நடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!