ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விசைப்படகு உரிமம் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரீடம் வழங்குவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து […]

உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டாய்வு !

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது. திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எம்.கே. அமர்லால் தெரிவித்ததாவது , விவாசாயிகளிடம் பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும், தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது உரமாகிறது. இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள […]

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் பேரூராட்சிகள் நிர்வாகத்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்ததுடன் தரம் மற்றும் அதன் தன்மை […]

மேட்டுப்பாளையத்தில் மகளிர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கற்பகம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகத்திற்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு சார்பாகவும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.

அரியமான் கடற்கரை டோல்கேட்டில் வசூல் வேட்டை ! சுற்றுலா பயணிகள் அவதி !!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியததிற்கு உட்பட்ட அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 20,மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 30 என்ற முறையில் வசூல் செய்யப்படுகிறது. வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில […]

தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள் !  

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக இளைஞரணி தலைவர் துரைவைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது திமுக கூட்டணியில் மதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடந்து வருவதாகவும் கடந்த தேர்தலில் ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்கப்பட்டது என்றும் இந்த தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம் என்றும் தெரிவித்தார், தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது  பாமாயில் […]

ராமநாதபுரத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக கூறி இன்று முதல் நாள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே […]

ஊழல் தடுப்பு போலீஸ்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளர் கைது ?..

இராமநாதபுரம், பிப்.22- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவாகுளம் கிராமத்தில் அம்மா சி மனைவி பெயரில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு கோரி சிக்கல் மின் வாரிய உதவி மின் பொறியாளர் மலைச்சாமி (49) என்பவரை தொடர்பு கொண்டார் அதற்கு அவர் ரூ.12 ஆயிரம் செலவாகும் எனவும் இதில் இணைய தளத்தில் பதிவு செய்ய ரூ.5,192 போக எஞ்சிய தொகை தனக்கு […]

18 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஆறு மாத சிறை- ஒரு படகு அரசுடைமை.. மீண்டும் மீனவர்களுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு !கொந்தளிப்பின் உச்சத்தில் மீனவர்கள் !!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 18 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு படகோட்டிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து மீண்டும் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்.,8ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று(பிப்.,22) இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அப்போது 19 மீனவர்களில் 18 […]

இராமநாதபுரத்தில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார்கள் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகை !

இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் மீன் பிடிக்கம் மீனவர்கள் உரிய அடையாள அட்டைகள் மற்றும் படகின் ஆவணங்களை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பாதுகாப்பு ஒத்திகையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நிய படகுகளின் ஊடுருவல் குறித்த தகவல்களை 1093 அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தாபட்டு வருகின்றனர். அதனை […]

ராமநாதபுரத்தில் பண மோசடி எஸ் பி யிடம் மனு !

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல் கிணற்று வலசை பகுதியில் சேர்ந்தவர்கள் உறவினர் தானே என நம்பி கட்டிய குலுக்கள் சீட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பெண்கள் கண்ணீர் மல்க  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு  அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் தனது உறவுக்கார பெண்ணான உச்சிப்புளியை சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் மாத குலுக்கள் சீட்டுக்கு பணம் கட்டி வந்ததாகவும் மாதம் 10,000 […]

ராமேஸ்வரத்தில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளின் கயாகிங் சாகச பயணம் !

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தீவை சுற்றி வரும் சவாலான கயாகிங் சாகச பயணம் இரண்டாவது நாளாக ஓலைக்குடா கடற்கரையில் இருந்து  துவங்கியது இந்த பயணத்தின் போது டெவில் பாயிண்ட் லைட் ஹவுஸ் வில்லுண்டு தீர்த்தம் போன்ற பல்வேறு  கடல் பகுதிகளை கடந்து சென்றனர் அவர்களின் பயணத்தின் இடையே பாம்பன் பாலத்தில் உள்ள ஐ சி ஜி எஸ் மண்டபத்தின் கட்டளை குழுவினர்   வரவேற்று உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாம்பன் தூக்கு பாலம் வழியாக […]

இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம் ! கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு !!வேலை நிறுத்தம் தொடரும் !!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை […]

ராமநாதபுரத்தில் சாலை விதியை கடைப்பிடித்த ஓட்டுனருக்கு பாராட்டு சான்றிதழ் !

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 34-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலை விதிகளை சீரிய முறையில் கடைபிடித்த போக்குவரத்து துறை வருவாய் துறை மருத்துவ துறை தீயணைப்பு துறை மற்றும் சிறப்பாக விழிப்புணர் ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். […]

திருப்பாலைக்குடி சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களை மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பகுதியில் வசிக்கும் வைரசெல்வம் , ரமேஷ் , முகமது , முத்துகிருஷ்ணன் , சரவணகுமார் ஆகியோர் ஓமன் நாட்டில் அல்மசீரா என்ற இடத்தில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றுள்ளதாகவும் , தொழிலுக்குச் சென்ற இடத்தில் படகு உரிமையாளர் உரிய கூலி தர மறுத்ததையொட்டி சொந்த ஊர் திரும்பிட பாஸ்போட்களை தர மறுத்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அவர்களில் குடுப்பத்தினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் […]

ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதிய விவாசாய பெண் ! மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி ஆட்சியரிடம் மனு !!

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மனைவி சகாயமாதா வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் மோட்டாரை 40 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொண்டதால் நெற்பயிர்கள் கருகி சாவியானது என்றும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பியை கண்டித்தும் கருகி சாவியான நெற்பயிர் மற்றும் இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக […]

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் முத்துக்குமார் ( வயது37/24) என்பவர் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்துவிட்டார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் தன் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் வல்லந்தை கிராமத்தில் பரமக்குடி சார ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் […]

கமுதியில் வேளாண்மை தொழில் நுட்ப கருத்தரங்கம் !

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் மகாலில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவாக்க கல்வி இயக்ககம் இணைந்து மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்கக் கல்வி இயக்குனர் முனைவர் முருகன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக வேளாண்மை தொழில்நுட்ப […]

சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த  போலீசார்..

சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த  போலீசார்.. மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த, 12ம் தேதி மாலை எனது மகன் ரக்ஸன் பிரணவை, அழைத்து கொண்டு வண்டியூர் தேவர்நகர் அருகே உள்ள ஸ்கேட்டிங் வகுப்பிற்கு சென்றேன். மகனை வகுப்பில் விட்டுவிட்டு, நானும் எனது, மகளும் காரில் இருந்தோம். மாலை, 5:15 மணியளவில் எனது மகன் […]

திருப்புல்லாணியில் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 600 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பதறாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் நிழல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!