கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகளிடம் சிறப்பு விருந்தினர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றினர். இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை […]

மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் “அன்னை சாரதா நடமாடும் மருத்துவ முகாம்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் சங்கர் நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் நந்தா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு, […]

சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் அன்பு சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித் துறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து வெள்ளி விழா கண்ட கணினி பயிற்றுநர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஹரி பிரகாஷ் வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ […]

இராஜசிங்கமங்களம் ஒன்றிய தேசியக்கொடி யாத்திரை.!

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி இராஜசிங்கமங்களம் ஒன்றிய தலைவர் S.M.A. வடிவேலன் தலைமையில் தேசியக்கொடி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்து, ஸ்ரீ சமயா கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், காந்திநகர் நூலகம் வழியாகச் சென்று ஸ்ரீ பாண்டிகோவிலில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவசங்கர், திரங்கா யாத்திரை பொறுப்பாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் சசிகனி, மற்றும் M.R. […]

கமுதியில் லஞ்சம் வாங்கிய விஏஓ ப்ரோக்கர் கைது.!

கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்! இராமநாதபுரம்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர். VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் […]

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு […]

நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழா.!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் […]

ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா.!

உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வழுதூர் பகுதியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் முளைப்பாரிகள் தலையில் சுமந்து ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது வழுதூர் கிராமம் இந்த பகுதியில் உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து கிராமப் பகுதிகளில் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா நடைபெற்றது கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது ஞாயிற்றுக்கிழமை […]

ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.!

கள்ளக்குறிச்சி நகர ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் கோமுகி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தும் , புது வஸ்திரம் சாற்றியும் , பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். ஆரிய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தலைவர் ஜெகந்நாதன் , செயலாளர் தாமோதரன் , பொருளாளர் ராகவன் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகள் , மற்றும் சங்க ஆலோசகர்கள் இன்னர் வீல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு, மேள தாளம் முழங்க […]

துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி.!

  துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் வழமையாக காலை 12:10 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் அடிப்படையில் இந்த விமானத்தின் புறப்பாட்டு நேரம் முதலில் மாலை 5:10 ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மாலை 6:10 ஆக மாற்றப்பட்டதற்கும் தொடர்ச்சியான நேர மாற்றங்களுக்கும் விமான பயணிகள் கடும் வேதனையை எதிர்கொண்டு வருகின்றனர்.   தொடர்ச்சியாக எந்த […]

ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு .!

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அறிமுக கூட்டம் நடைபெற்றது புதிய தலைவராக நந்திகா செயலாளராக ஆசிபா  பொருளாளராக ஹாசினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திர கலந்துகொண்டு மாணவிகளிடையே தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி உதவி […]

ராமநாதபுரத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு.!

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை […]

கமுதி பேரூராட்சியில் தூய்மை பணிகள் பாதிப்பு.!

கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், […]

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடுகின்றனர்: மாவட்ட ஆட்சியரிடம் மனு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வேதாளை பஞ்சாயத்தின் கீழ் functioning அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டியல்வகுப்பு மக்களுக்கு நில உரிமை (பட்டா) கிடைக்காமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கியும், எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் […]

கருக்காத்தி காலணி மக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் மேலமடைப் பஞ்சாயத்திலுள்ள கருக்காத்தி காலணி கிராம மக்கள், தங்களுக்கான குடிநீர் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட குடிநீர் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். நாங்களும் ஓட்டு போட்டோம் எனவே மற்ற கிராமங்களைப் போன்று நாங்களும் குடிநீர் வசதியை பெற வேண்டும்,” என்கிறார்கள். தற்போது உப்பு தண்ணீரையே குடிக்க […]

இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் வழங்கிய தூய்மை பணி இயந்திரம்.!

சேதுக்கரை ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தூய்மை பணியந்திரம் வழங்கப்பட்டது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் சார்பில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்கான இயந்திரம் சேதுக்கரை ஊராட்சிக்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று  நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய தூய்மை பணியந்திரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. […]

ராமநாதபுரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் 34வது ஆண்டு பேரவை கூட்டம் .!

ராமநாதபுரம் மாவட்டம், தனியார் மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் 34வது ஆண்டு பேரவை கூட்டம் திட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக, மின்துறையை பொது துறையாகவே பாதுகாக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2026-ஐ அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், 60,000-க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக […]

311 வாக்குறுதி என்னாச்சு? –இடைநிலை ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.!

ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக, இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோஷத்துடன், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், திமுக அரசு 2021 தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் வழங்கிய 311வது வாக்குறுதியை மேற்கோளாகக் காட்டி, “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் 311 […]

திருவாடானை: சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர் சுவாமி, அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமைந்து கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 8-ம் நாள் விழா இன்று விழாவூர்வாக நடைபெற்றது. இதில், முன்னதாக விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக […]

கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!