சென்னை வருவாய் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த வருவாய் துறையினர் ! பொதுமக்கள் பாதிப்பு !! அரசு அழைத்துப் பேச சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !!!

சென்னையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சுமார் 5000 வருவாய்த்துறை அலுவலர்கள் வருவாய் ஆணையர் அலுவலகம் முன்பாக முகாமிட்டு இன்று முதல் (07.03.2024) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி […]

கீழக்கரையில் 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 34 வது போட்டி நடைபெற்றது, இதில் தமிழ்நாடுகோவா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உள்ளிட்ட 32 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், தேசிய அளவிலான நடுவர்கள்குழு போட்டியை 5 நாட்கள் கீழக்கரையில் நடத்தியது. இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த ஆண்கள் அணியினர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தைப்  பெற்றுக் […]

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கீழக்கரையில் சோதனை !

பெங்களூரு சிறையில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்பாக பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கீழக்கரை உள்ள இருவரது வீட்டில் சோதனை நடத்தினர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நசீர். இவர் சிறையில் இருந்த போது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தார் என்ற வழக்கின் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ந்தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நசீரின் […]

முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் சென்ற பெண் மீது என் என்எல் பஸ் மோதியதில் படுகாயம் டிரைவர் கைது !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது என். என்.எல் பஸ் மோதியதில் (ஜெயலெட்சுமி) படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி (47) இவர் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு ரோட்டோரம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி வந்தஎன் என்எல் பஸ் ஜெயலெட்சுமி மீது மோதியதில் பின் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம்பட்ட ஜெயலெட்சுமியின் கணவர் கண்ணன் […]

தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுத்தியதாகவும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக செயலாளர்  எம்.ஏ.முனியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு […]

ராமநாதபுரத்தில் இரவு பகலாக தொடர் போராட்டத்தை தொடங்கிய வருவாய் துறை அலுவலர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு !!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உள்பகுதியில் 10 அம்ச கோரிக்கையினை தமிழக அரசு நிறைவேற்ற கோரி, வருவாய் துறை ஊழியர்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கினர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக […]

திருப்பாலைக்குடியில் பேலியோ சொட்டு மருந்து முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் […]

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் […]

ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் […]

கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம்  மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர்  ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர்  ஜவாஹிர் உசேன் வரவேற்புரை […]

உச்சிப்புளியில் வேளாண்துறை சார்பாக தெருக்கூத்து கலை நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே என் மனம்கொண்டான், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்து கூறும் வகையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தலைமை ஏற்று துவங்கி வைத்தார், தெருக்கூத்து கலை நிகழ்ச்சி வாயிலாக வேளாண் துறையில் செயல்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள், உழவன் செயலி பயன்கள், நெற்பயிருக்கு பின் இரண்டாம் போக […]

கீழக்கரையில் சைபர் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மணி பாரதி கருணாகரன் கலந்து கொண்டு கூறுகையில் . இன்றைய காலகட்டத்தில் மொபைல் மூலம் பல பிரச்சனைகளை இளைஞர்கள் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர் .மொபைல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது […]

இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது !

இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது ! இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த செரிப்சேட் என்பவருக்கு கூரியூரில் சொந்தமான 8 வீட்டுக்கு வீட்டு மனை காலி இடங்கள் உள்ளது. இந்த இடத்திற்கு வரைபட அனுமதி பெறுவதற்காக இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாளை அணுகியுள்ளார். அதற்கு அவர் 60ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த […]

கீழக்கரையில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக உணவு கடைகள் பேக்கரிகள் ஹோட்டல் பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியோர்க்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அளவுகள் பற்றியும் வாடிக்கை யாளர்களின் அணுகுமுறை பற்றியும் பொருட்களின் […]

இராமநாதபுரம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விற்பனைக்குழு விபரம் ! விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள் !!

இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் (Farm Gate) நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் விளைவித்த விளைபொருளின் தரநிர்ணயம் ஆனது ஒழுங்குமுறை விற்பனைக்கூட தரம்பிரிப்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பகுப்பாய்வு செய்து அதனை e-NAM திட்ட […]

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் !

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் : 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 […]

ராமநாதபுரத்தில்ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்தின் முன்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311- சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரியும் , தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஆசிரியர்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

கீழக்கரையில் பி ஹியூமன் நடத்திய இரத்ததான முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் பி ஹியூமன் மற்றும் கிரசண்ட் இரத்த வங்கி மற்றும் விம் பெண்கள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சகினா பேகம் கலந்து கொண்டார். பி ஹியூமன் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் துவங்கப்பட்டு கிடைக்கும் நேரங்களில் பொதுமக்களுக்கு சேவை பணிகளை செய்து வருகின்றனர். இளைஞர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை […]

ராமநாதபுரத்தில் இரு  சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா !

இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட தலைவர் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.  இதில் அனைத்து மாவட்டங்களின் உள்ள சங்க நிர்வாகிகள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!