துபாயில் இருந்து மதுரை வந்த விமான பயணிடமிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் 322 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த ஆண் பயணியிடம் அவரது உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 21 லட்சத்து 31 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான 322 கிராம் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவினர் […]

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியூதவி:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றி உடல் நலக்குறைவால் காலமான எஸ்.ஞானசேகரன் என்பவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அன்னாரது மனைவி ஜி.தேவ யி டம்வழங்கினார். தமிழ்நாடு அரசு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பருவ இதழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, […]

அதிமுக அரசு 250 ஏக்கர் நிலத்தை வழங்கியதால் தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கியுள்ளது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக அதிமுக அரசு 250 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்ததால் தான் தற்போது எய்ம்ஸ் பணி நடைபெற்று வருகிறது என எய்ம்ஸ் பணி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஆர் உதயகுமார் பேட்டிமதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட நிலையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கடந்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட எல் & டி நிறுவனம் வாஸ்து […]

முதுகுளத்தூர் பகுதியில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக விவசாய விலை பொருளுக்கு விலை நியமனமும், டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருணாநிதி, […]

அதிமுக சார்பில் போதை பொருள் எதிராக மனித சங்கிலி போராட்டம் !

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் போதைப்பொருள் புழக்கம் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக அரசுக்கு எதிராக நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் போதை பொருள் புழக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்த காரணமாக உள்ள திமுக அரசை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித […]

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா !

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் டி ஆர் தொண்டு நிறுவனம் சார்பில் எல் அண்ட் டி பைனான்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கணவன் இழந்த பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் தின விழாவை கொண்டாடினார்கள் இந்த டிஜிட்டல் சக்தி மூலம் அனைத்து கிராமப்புற பெண்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது ஆதார் கார்டு […]

வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை:

அலங்காநல்லூர்,மார்ச்:12.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க […]

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் கொடுத்த புகார் உண்மைக்கு புறம்பானது ! மாவட்ட காவல்துறை தகவல் !!

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர்கள் வந்த வாகனம் பரமக்குடி அருகே சில நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டது தொடர்பாக ஷிப்ரா பதக் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு பரமக்குடி உட்கோட்டம்) தலைமையில் 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கிடைத்த வெவ்வேறு ஆதாரங்களின் […]

இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!

இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !! ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, எஸ் பி பட்டினம், தேவிபட்டினம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, தங்கச்சிமடம்,  மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், கடல் குதிரை உள்ளிட்ட […]

ராமநாதபுரம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை !

ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தை அடுத்த மங்கம்மா சாலை என்ற ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவும் வெள்ளையன் வலசையைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண்ணும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் படித்து வரும் மாணவியான லாவண்யா அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவை காதலித்து வந்ததாகவும் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த […]

புதுமடம் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா !

ராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் 24ஆம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் ஹாஜி N.K நாகூர் இப்ராஹிம் ஆலிம் தலைமை தாங்கினார். கடலாடி சங்கீதா மெட்ரிக் பள்ளி தாளாளர் சேகர் முன்னிலை வகித்தார்.பள்ளி நிறுவனரின் நண்பர் கலிபுல்லாஹ் மற்றும் v-bistro குழும நிறுவனர் ராஜா முகம்மது ஆகியோர் கலை அருங்காத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் […]

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் வாபஸ் ! வருவாய் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு !!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்தால் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்தாகவும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் தேர்தலுக்கு முன்னரே 75% நிதி உள்ளிட்ட அணைத்தும் கோரிக்கை களையும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்படுவதாகவும், எதி்ர்வரும் நாட்களில் அரசாணையாக வெளிவர உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய அறிவிப்பின்படி கோரிக்கைகள் அனைத்தும் […]

கீழக்கரை சார்ந்தவருக்கு சவுதி அரேபியாவில் பரிசு விழா !

சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் தமிழர்கள் அதிகமாக வேலை செய்யும் நிர்வணமன அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் விளையாட்டு பேட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கீழக்கரை, காயல்பட்டிணம் கடையநல்லூர், லெப்பைகுடி ஊரை சேர்ந்தவர்கள் 6 அணிகளாக கலந்து கொண்டதுடன். வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மொடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை கம்பேனியின் இயக்குணர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் […]

தமிழக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.!? முடிவுக்கு வருகிறதா கூட்டணி இழுபறி..!?

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை […]

கீழக்கரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பொது கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் முன்னேற்றம் பெற […]

கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி […]

இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு விற்பனை ! சிபிஐ மாநில செயலாளர் போராட்டத்தில் பேட்டி !!

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது படகுகளை பறிமுதல் செய்வது படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கும் […]

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த ஐவர்  ! ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டை பறிமுதல் !!

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கலம் துடுப்பு உள்ளிட்ட சில அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில்  கடல் அட்டைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும், தேவையும் இருப்பதால் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை  சிலர் பிடித்து பதப்படுத்தி  கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பழனிவலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைப்படகு […]

உச்சிப்புளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து […]

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!