ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் […]
Category: தேசிய செய்திகள்
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.! மாவட்ட எஸ்பியின் சிறப்பு பாதுகாப்பு பணி !!
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் இணைந்து ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் திரண்டு பேரணியாக வெற்றிக் கோசமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வேட்பாளர் ஜெயபெருமாளை அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழகத்தில் மாற்று கட்சியினர் இணைந்தனர் !
ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் அ அன்வர் ராஜா மாவட்ட கழக செயலாளர் MA முனியசாமி ஆர் எஸ் மங்களம் ஒன்றிய செயலாளர் SRG திருமலை ஆர் எஸ் மங்களம் ஒன்றிய சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் P பசுருருல் ஹக் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அஇஅதிமுக கழகத்தின் இணைந்தனர். இந்நிகழ்வில் மாற்று கட்சி நிர்வாகிகளான EX. MP. ரித்தீஸ் PA டூயட் பாபு (எ) முகமது ரிலுவான் […]
ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!
ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (23.03.2024 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளர் கே.தனபாலன், செயலாளராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் கே கே. குமார், பொருளாளராக சத்தியம் டிவி செய்தியாளர் பி. மகேஸ்வரன், கௌரவ தலைவராக தினமலர் நாளிதழ் உதவி ஆசிரியர் பழனிச்சாமி, துணைத் தலைவராக வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் ஜி இளங்கோவன் ,இணைச்செயலாளராக தினபூமி […]
வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் & 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் […]
ராமநாதபுரத்தில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் !
ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். […]
துணை ராணுவப்படை அணிவகுப்பு ! மாவட்ட எஸ் பி பங்கேற்பு !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது […]
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ,இந்திய தேசிய லீக் கட்சி தனது ஆதரவு !
இ சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது ஆதரவைத்து தெரிவித்தார்.பொதுச் செயலாளர் கவியருவி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர், மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் ஷாஜகான், தென் மண்டல அமைப்புச் செயலாளர் அம்ஜத் கான், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆதரவை தெரிவித்தனர்.
16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு,புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..
16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு, புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு.. வடசென்னை – ராயபுரம் மனோகரன் தென் சென்னை – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – ராஜசேகர் அரக்கோணம் – விஜயன் ஆரணி – கஜேந்திரன் கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் விழுப்புரம் – பாக்கியராஜ் சேலம் – விக்னேஷ் நாமக்கல் – தமிழ்மணி ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் கரூர் – தங்கவேல் சிதம்பரம் […]
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !திருவாடனை அருகே சிக்கிய பணம் !!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை […]
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் !
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024க்காண தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி வங்கியாளர்கள் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் அதே போல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் […]
ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் […]
ராமநாதபுரத்தில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பயோனியர் மருத்துவமனையில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளனர்.. இதில் இரண்டு பிரிவுகளாக வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. மாநில முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் பயிற்சி முகாம் நடத்தினார் . கல்லூரியின் முதல்வர் கல்லூரி பயிற்றுநர்கள் பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தனர்.
ராமநாதபுரத்தில்சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !
சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக. சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதனின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கீழக்கரை வேதாளை பாம்பன் மண்டபம் மறைக்கப்பட்டினம் பெரிய பட்டினம் உட்பட அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையான சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பள்ளியின் வெளிப்பகுதியில் சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
குவைத் சிறையில் உள்ள நான்கு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் !
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் […]
புதிய இந்தியத் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து நியமனம்..
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார். சுக்பீர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த […]
கீழக்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. ஜி.விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் இன்று அனைத்து கடைகளையும் சுத்தம் குறித்தும் , மீன்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்படம் குறித்தும் , கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனார். அதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பெறப்பட்ட உரிமைத்தினை அனைத்து கடைகளிலும் முன்பாக பார்வையில் படும்படி தொங்கவிடப்பட வேண்டும் […]
பெரிய பட்டினத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் 12,00,000 மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினம் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் உணவு வழங்கும் விபரங்களை கேட்டறிந்தார். மேலும் அருகாமையில் உள்ள பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு குழந்தைகளிடம் உரையாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த […]
கடலாடி மீனங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு !
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனங்குடி கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 105 பயனாளிகளுக்கு ரூ.26.71 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாதமும் நடை பெறும் மக்கள் தொடர்பு முகாமில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சென்று அரசின் […]
ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி பரிசளிப்பு விழா !
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆர்.எஸ். மங்களம் கிராம ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநில பொது செயலாளர் பூ.சதீஷ் வாழ்த்துரை வழங்கினார், புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் முகமது மன்சூர் அலி , இராமநாதபுரம் மைஸ் பப்ளிகேஷன் நிறுவனர் முருகேசன், அல் அமீன் பள்ளி தாளாளர் நைமுதீன், […]