தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் அண்மையில் பேசுபொருளான நிலையில், நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்த தேர்தல் அறிக்கை முக்கியமான ஐந்து ‘நீதித் தூண்கள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் 25 உத்தரவாதங்களை கொடுத்துள்ளது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையானது ‘ஐந்து நியாயங்களை’ முக்கியத் தூண்களாகக் கொண்டிருக்கிறது. அதில் ‘இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’, ‘விவசாயிகளுக்கான நீதி’, […]
Category: தேசிய செய்திகள்
வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல்
வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல் 144 தடை உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை. இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், சூரியமின்சக்தி திட்டங்களுக்கான நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “பஷ்மினா அணிவகுப்பு” நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இந்தப் பேரணி மூலம் லடாக் வாசிகள் […]
கீழக்கரையில் பி.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாடார் பேட்டையில் Pssj மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பள்ளியில் தாளாளர் கார்த்திக் தலைமையில் நாடார் பேட்டை தலைவர் மாடசாமி கல்வி குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் கிருபாகரசேகரன் , வழக்கறிஞர் தேவ பிரீத்தி தினகரன் , வேலு மனோகரன் கலைக் கல்லூரி பேராசிரியர் சுதா தாசின்பீவி அப்துல் காதர் கல்லூரி பேராசிரியர் விசாலாட்சி , எஸ்தர் செந்தில் குமார் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனைநிறுத்தி வைத்து உத்தரவு..
தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -32 (கி.பி 1299-1922) ஹங்கேரிக்கு படைஎடுக்க முடிவு செய்து படைகளை தயார் செய்து கொண்டு இருந்தபோதே கால்களில் நடக்க முடியாமல் பேரரசர் சுலைமான் அல் கானூனி மிகவும் சிரமப்பட்டார். ஒருவாறு ஹங்கேரி படையெடுப்பு வெற்றி அடைந்து அடுத்த பகுதிக்கு முன்னேற முயன்றபோது, மன்னர் திடீரென நடக்கமுடியாமல் கீழே சரிந்தார். பரிசோதித்த மன்னரின் மருத்துவ குழுவினர் மன்னருக்கு கீழ்வாதநோய் முற்றிவிட்டதை அறிந்து அதனால் நடக்கவும் முடியாமல் கடுமையான வலியில் […]
தஞ்சாவூரில் மத நல்லிணக்கத்தை சான்றாக மீனாட்சி மருத்துவமனை இப்தார் விருந்து !
தஞ்சாவூர், மார்ச் 31, 2024: டெல்டா பிராந்தியத்தின் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, இப்தார் விருந்தை நடத்தியது. இதில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடிக்கும் அந்தி நேர உணவு விருந்து இடம்பெற்றது. இப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பன்னிரண்டாவது முறையாக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர் களுக்கும் மருத்துவமனை சிறப்பு சுகாதார […]
18வது மக்களவை தேர்தலில் 18+ வாக்களர்களை முழுமையாக வாக்களிக்க அழைத்த 118+ வயது மிட்டாய் தாத்தா !
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் 118 வயது மிட்டாய் தாத்தா மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது . தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு […]
முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் ஜமாஅத் தலைவர் S.அஜ்மல் கான் தலைமையில் சுலைமான் , ஆமீர் கான் , பிலால் பீர் முகம்மது , ஹபீப் ரகுமான் , சீதக்காதி , முகம்மது அமின் , அப்துல் மாலிக் , அப்துல்லா ஆகையால் முன்னிலையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்ஸலுல் உலமா, மௌலானா மௌலவி முஹம்மது அனீஸ் முனீரி, பாஜில் ஸஹாரன்பூரி ஆகியோர் […]
கமுதி வட்டாட்சியரின் சீரிய முயற்சியால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் !
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் – கமுதி மேற்கு உள்வட்டம் மண்டலமாணிக்கம் குரூப் கோடாங்கிபட்டி கிராமத்தில் சாலை மறு சீரமைப்பு செய்யவும் விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி வருவாய் கிராமம் 2019-ம் ஆண்டு மராமத்து பணி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்ட பொழுது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அரசுக்கு பாதமாக தீர்ப்பு வரப்பெற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கிடைத்த தகவல் அடிப்படையில் மண்டலமாணிக்கம் குரூப், கோடங்கிபட்டி […]
எல்.கே.அத்வானியின் இல்லம் தேடிச் சென்ற பாரத ரத்னா விருது!- நேரிடையாக வழங்கினார் ஜனாதிபதி..
எல்.கே.அத்வானியின் இல்லம் தேடிச் சென்ற பாரத ரத்னா விருது!- நேரிடையாக வழங்கினார் ஜனாதிபதி.. முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி […]
தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேட்டி !
தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது […]
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி விழா !
தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் […]
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு..
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ […]
பாஜகவின் தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல்: பகீர் கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் […]
கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை […]
திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் ! அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு !!
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசவாமி திருக்கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் காரியாளத்தை திறந்து வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனிக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் […]
தேவிபட்டினத்தில் திடீரென நடந்த என்.ஐ.ஏ. சோதனை !
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பழங்கொட்டை தெருவில் வசித்து வரும் சேக் தாவுது என்பவரது வீட்டில் இன்று அதிகாலையிலேயே தேசிய பாதுகாப்பு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சேக்தாவூது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள அவருடைய அப்பா வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது. இதனால் தேவிப்பட்டினம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். […]