இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியை தாண்டியது! ஐ.நா., தகவல்..

இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியை தாண்டியது! ஐ.நா., தகவல்.. உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது எனவும், தற்போது 144 கோடி பேர் வாழ்வதாகவும் ஐ.நா., மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காகும் எனவும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்த அமைப்பு சார்பில் […]

தேர்தலில் வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – பொது மக்களுக்கு வேண்டுகோள்..

இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது. இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது. அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் […]

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற […]

போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் […]

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் […]

கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை […]

ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் […]

இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !

இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட […]

பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும்!-ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி கடும் விமர்சனம்..

பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய […]

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து “சங்கல்ப் பத்ரா” பாஜகவின் தேர்தல் அறிக்கை..

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் […]

நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு! பதட்டத்தில் மும்பை..

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் முக்கிய நடிகர் சல்மான் கான். இவர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் தனது வீட்டில் தற்போது தங்கி இருக்கிறார்.இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் துப்பாக்கிகளால் சுட்டவாறு சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. மொத்தமாக மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள், இந்த விஷயம் தொடர்பாக பாந்த்ரா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் […]

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்..

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்.. பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல். தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பிரசாரம். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி […]

இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு..

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 19ம் தேதி (வெள்ளி) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்ற பணம், நகை, மதுபானம், போதைபொருள், பரிசு பொருட்கள் என சுமார் ரூ.305 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே நவாஸ்கனி தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டார். வேட்பாளர் கே நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஐந்தாண்டு காலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். தேசிய சராசரியை விடவும், மாநில சராசரியை விடவும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை நாடாளுமன்றத்தில் சிறப்பாக வழங்கி இருக்கிறேன். பாஜக அரசின் வஞ்சகப் […]

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ! கீழக்கரையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரட்டி டிஜிபி அலுவலகம் முற்றுகையிட படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை !!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

பெண் வழக்கறிஞரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்! பெங்களூருவில் பரபரப்பு..

பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும், “உங்களது பெயரில் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பி வந்துள்ளது. அந்த பார்சலில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் உள்ளது. அதுபற்றி மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி, மும்பை […]

நீட் தேர்வு! விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் வரை நாடு முழுவதும் விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனர். விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் […]

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க வீழ்த்தப்படவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் வீழ்ந்து சர்வாதிகாரம் தலைதூக்கும்!-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து […]

என்ஐஏ வை கடுமையாக விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி..

மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!