இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பருத்தியைத் தாக்கும் பல்வேறு விதமான பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும்,பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம்குறித்தும் விளக்கினார்.மேலும் மாணவி தாமரைச்செல்வி தெரிவிக்கையில் இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி. பருத்தியை அதிகம் […]
Category: தேசிய செய்திகள்
பருத்தியில் விதை நேர்த்தி குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தியில் விதை நேர்த்தி குறித்து அதன் செயல்முறை விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சு.ஆர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். மேலும் பருத்தி விதைகளின் முளைக்கும் திறனை அதிகரிக்கவும், விதைகளை பிரிக்கவும் விதை நேர்த்தி செய்யப்படுவது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
குயவன்குடியில் விவசாயிகளுக்கான கண்காட்சி !
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கண்காட்சி ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வள்ளல் கண்ணன் ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது . இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகளான சூரியலட்சுமி. சுவாதி. தாமரைச்செல்வி. சிந்து […]
ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?
ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..? தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட்ட வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.இதனால் தி.மு.க. […]
ஏர்வாடி தர்காவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் அங்கு விற்பனை செய்யக்கூடிய உணவுக் கடைகள் தின்பண்டம் கடைகள் டீக்கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் ராஜ்குமார், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ,கீழக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து விற்பனையாளர்களிடம் தினமும் கடைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள […]
கீழக்கரையில் நாய்களை பிடிக்கக் கோரி மூவாயிரம் போஸ்ட் கார்டுகள் முதலமைச்சருக்கு அனுப்பிய பொதுமக்கள் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் பொது மக்களுக்கு அச்சத்தில் இருப்பதாகவும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதாகவும் கூறி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் தொண்டு இயக்கங்கள் இணைந்து பொதுமக்களிடம் போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கைகளைப் பெற்று 3000 போஸ்டர் கார்டுகளை முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் நாய்களை கிழக்கே நகராட்சி முறையாக பிடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். […]
ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய கீழக்கரை வட்டாட்சியர்.! குவியும் பாராட்டுக்கள்..!
ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய வட்டாட்சியர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தர்கா பகுதியில் சர்வே எண் 502 , 504 இல் எந்த ஒரு கடைகளும் அமைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மீறி சிலர் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து யாத்திரைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருவதாக வந்த புகாரியின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கற்கள் […]
கீழக்கரையில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி !ஒத்துழைப்பு வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!
ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கீழக்கரை, உச்சிப்புளி, புதுமடம், பெரியபட்டினம் மற்றும் தேவிபட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று தற்போது மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த மருந்து வீடுகளின் உட்புறங்களில் அடிப்பதன் மூலம் மலேரியா கொசுக்களை பரப்புகின்ற முதிர் கொசுக்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். அதனால், மலேரியா பரவாமல் தடுக்க முடியும்.எனவே, அரசு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக முழுவதாக மருந்து தெளிக்க வரும்போது, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் […]
திருப்புல்லாணி அருகே நெல்லின் ரகம் பற்றிய விழிப்புணர்வு !
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளமோர்க்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கும் நெல்லின் இரகங்கள் குறித்து கிராமப்புற வேளாண்மை பணி அனுபவதிட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி பா. சிந்துபிரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். பொதுவாகவே இம் மாவட்ட மண் வகைகள் நைட்ரஜன் சத்து குறைவானதாகவே காணப்படுகின்றன. மேலும் திருப்புல்லாணி, கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் நடுத்தரத்திலும் இதர வட்டாரங்களில் குறைவாகவும் […]
பிரப்பண்வலைசை கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரப்பண்வலைசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்களுக்கு திரவ உயிர் உரம் பயன்படுத்துவன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி மதுரை வேளாண் கல்லூரி மாணவி அ. ஆஷிகா விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கினார். மேலும் மாணவி கூறுகையில் மெத்திலோ பாக்டீரியம் (Methylobacterium) மூலம் இயற்கை முறைகள் சத்துக்களைச் சேர்த்து, வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருட்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது.இதனால் இரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைகிறது […]
பாரதி நகர் கிராமத்தில் மாணவ மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரதி நகர் கிராமத்தில் தமிழ்நாடு கிராமப்புற இயக்கத்தின் கீழ் அரசமைப்பு உரிமைக் கல்வி (CRE) மூலம் வான்முகில் தன்னார்வலர் இயக்கம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் அமைப்பு , கிராம சபைகள் , அரசின் சட்ட திட்டங்கள் உட்பட இளம் வயதிலேயே ஜாதி மத பாகுபாடு இன்றி விளையாட்டு மூலமாகவும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவும் இலகுவாக கற்றுக் கொடுக்கின்றனர் இதனை […]
இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் !
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 6 உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், 7 அதிகாரிகள் மற்றும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த 3 புரோக்கர்கள் உட்பட. பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 நபர்கள் ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து புகார்களை கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனே சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது […]
உச்சிப்புள்ளி அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா, சாலை வலசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயறு வளர்ச்சி ஊக்கிகளை கொண்டுள்ள ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டு முறையை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பயிர் வளர்ச்சி ஊக்கள் ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆக்சின், சைட்டோகைனின், ஜிப்ரலின், அப்சிசிக் அமிலம், பாலிஅமைன்கள், ஆன்டிக்மைட்டாடிக் மற்றும் ஆன்ட்டிஜிபர்லின் ஆகியவை ஆகும். ஆக்சின் (Axin) தாவரங்களில் […]
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் , பொதுமக்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் தொகுதி பொருளாளர் வேண்டுகோள் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் முன்னாள் தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் வெளியிட்டது. அதனை கீழக்கரை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்தனர். அதேபோல் வீடியோ காட்சியாக மட்டும் இல்லாமல் தினந்தோறும் கீழக்கரை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் […]
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றிய நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை வலசை கிராமத்தில் தேனீ வளர்ப்பு முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் தேனீ வளர்ப்பிற்கு குறைந்த நேரம், குறைந்த பணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை மூலதனமாக தேவைப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது எளிதாகும். தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு […]
5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்..
5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்.. மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல்.. பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, […]
ஏர்வாடி தர்ஹாவில் மத நல்லிணக்கத் திருவிழா !
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல்குத்புல் அகதாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க 850ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மவுலீது எனும் பூகழ்மாலை கடந்த மே 9 ல் தொடங்கி நாள்தோறும் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது. மே 18ம் தேதி மாலை 5:00 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மே 19 மாலை 5:00 மணி அளவில் மேளதாளங்கள் […]
ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 19ல் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் அனைத்து மாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருவது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் முன்னிலையில் […]
கோனேரி கிராமத்தில் நவீன பருத்தி எடுக்கும் கருவி ! மதுரை வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு அறிமுகம் !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, […]
திருவாடானை அருகே வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் […]