தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், 09.12.2025 அன்று கடையநல்லூர் பகுதியில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் சோசியல் […]
Category: தேசிய செய்திகள்
டிரஸ்ட் மூதாளர் பேணலகத்தில் இருபெரும்விழா
வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் மற்றும் மூதாளர் இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டவர் பங்கேற்று விருதுகள் வழங்கினர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம் பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஜி.பி சார்பில் 190-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பணிகளில் உள்ளவர்கள் பலர் கெளரவிக்கப் பட்டனர். டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இருபெரும் விழாவில், சமூகத்தில் […]
உடல் நலம் குன்றி சுற்றித் திரிந்த யானை பத்திரமாக மீட்பு..
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்த 35 வயது உடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி ஓர் இடத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் யானையின் சாணம் சேகாரம் செய்யப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு […]
தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM)
தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM) வரும் 08.12.2025 அன்று திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகள். பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து […]
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மகளுக்கு அரசு பணி வழங்கிய முதலமைச்சர்..
தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு பணி வழங்கி உத்தரவு பிறப்பித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் உத்தரவுக்கு இணங்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மல்லிகா உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய கீர்த்திகா (பார்வையற்ற மாற்றுத் திறனாளி) என்பவருக்கு புளியங்குடி நகராட்சியில் Data Entry Operator பணிக்கான ஆணையினை 26.11.2025 அன்று புளியங்குடி கற்பக வீதி தெற்கு […]
இலவச மின் இணைப்பிற்கு லஞ்சம்; மின்சார வாரிய JE கைது..
தென்காசி மாவட்டத்தில் விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்துவதற்கு ரூ.7000 பெற்ற மின்சார வாரிய JE தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா, கீழ வீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த K.செல்வகணேஷ் வயது-30, த/பெ கருப்பசாமி என்பவர், அவரது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு EB Pole நட ரூ.24,000 பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கி இருந்ததார். […]
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய உரை.!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக இருந்தார்” அப்படி எம்ஜிஆர் ஒரு பாடல் பாடியதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நம்ம காஞ்சித் தலைவர் பிறந்த மாவட்டம் இது. தன்னுடைய வழிகாட்டு என்பதாலேயே தான் ஆரம்பித்த கட்சிக் கொடியில் அறிஞர் அண்ணா அவர்களை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த […]
தென் மாவட்ட பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிக்கையில், தெற்கு இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. (23.11.2025) இன்று மாலை அல்லது இரவு முதல் மீண்டும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும். வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர், நாகை, மயிலாடுதுறை, இராமநாதபுரம்,, தூத்துக்குடி, […]
அரசு பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22.11.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானி (முன்னாள் மாணவி 1974-1981) நிகர்ஷாஜி ரூ. 24 இலட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் 2 கூடுதல் வகுப்பறை […]
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு.!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வன […]
பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் […]
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பயிற்சி தொடக்கம்
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி தொடக்கம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பத்து நாள் அகப்பயிற்சி (Internship Programme) மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது. அதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அகப்பயிற்சி காலை சுபா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் சுபா மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமான மகேஸ்வரன் பயிற்சியைத் துவக்கி வைத்து, “மாணவிகள் கல்வியறிவை நடைமுறை வழியில் சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” எனக் […]
மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு.!
சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு – மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சாலையோர சிறு வியாபாரிகளுக்காக புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களுக்கு இன்று மனு வழங்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை மக்களுக்கு, நகராட்சி கட்டியுள்ள புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகள் ஒதுக்கப்பட்டால், அவர்கள் […]
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கிய ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழு.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அமர்வதற்காக ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஹஜ் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்தும் குழுவினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திக் மகாராஜா, டாக்டர் விஜய், ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – மரக்கன்றுகள் நடும் விழா
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படியும், உதவி வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் படியும், மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் ஆலோசனையின் படியும், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் […]
பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகத்சிங் மணி மண்டபத்தில், கே.எம்.எஸ் சிந்தனைச் சோலை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா நடைபெற்றது. பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிறுவனர் கே.எம்.எஸ் தெய்வசிகாமணி வரவேற்றார். கவிஞர் மான கிரி கனவு தாசன் தலைமையில் “வையத்தைப் பாலிக்கும் பாரதியார் குரல்கள்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. மருத்துவர் கனியன் பூங்குன்றன் “நெஞ்சு பொறுக்குதில்லையே”, மருத்துவர் செந்தில்குமார் “வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, சேவுகன் அண்ணாமலை கல்லூரி […]
மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் […]
மாநில நல்லாசிரியர் விருது .!மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா.!!
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – மாநில அளவிலான “நல்லாசிரியர்” விருதைப் பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அவர்களுக்கு, இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, சென்னை நகரில் நடைபெற்ற மாநில விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக்கல்வித் துறை […]
மேட்டுப்பாளையம் ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் நல்லாசிரியர் விருது.!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கோஇன்டியா வளாகத்தில் லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் “நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்காக சென்னை சென்றிருந்ததால், அவரின் சார்பில் மனைவி நர்மதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழா கோவை மாவட்ட கவர்னர் Ln. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விருதை அண்ணா பல்கலைக்கழக சேர்மன் […]
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா .!
கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து (மு.கூ.பொ.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமது உரையில் அவர், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, அறம் காப்பது மற்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி, “விதைத்தவன் உறங்கினாலும் […]