இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் […]
Category: தேசிய செய்திகள்
ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]
வேளாண்மைத்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில்தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் உலக மண்வள தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் கலந்து கொண்டு மண்ணைப் பராமரித்தல் , அளவிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல் பற்றிய விவசாயிகளுக்கு விரிவாக விளக்க உரையாற்றினார். மேலும் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் , வேளாண்மை துணை இயக்குனர் அமர்லால் , வேளாண்மை […]
அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]
திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் […]
கீழக்கரை நகர திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் 48ஆவது பிறந்த நாள் விழா..
தமிழ்நாட்டின் துணை முதல்வரின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக நகர செயலாளர் திரு. S.A.H. பஷீர் அஹமது தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அத்துடன், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் […]
இந்தியாவில் யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, முண்டன்துறை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் யானைகள், அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு வந்து விடுகின்றன. இதனால், மனித மோதல் ஏற்படுகிறது.கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் யானைகள் தாக்கி சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல், மனிதர்களால் சுமார் 220 யானைகள் […]
மண்டபம் அருகே வேளாண்மைத் துறையின் கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் […]
மாலங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் […]
மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!
திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை […]
உத்தரகோசமங்கையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கீழக்கரை வட்டாட்சியர் பங்கேற்பு.!
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ‘உத்தரகோசமங்கை’ யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடு, மின்சாரத் துறையை அரசே தொடர்ந்து நடத்திடுக, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதம்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைபடுத்திடுக’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம் தாலுகா குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாசிப்பட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் 313 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் […]
வாகன காப்பகத்தில் அடாவடி வசூல் செய்வதாக புகார்: முறைப்படுத்த கோரிக்கை..!
.. வாகன காப்பகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 24 மணி நேரத்துக்கு கட்டணமாக பத்து ரூபாய் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என அடாபடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் வாகன காப்பகத்தில் 12 மணி நேரத்துக்கு மட்டும் பத்து ரூபாய் என அடாவடியாக வசூல் செய்வதால், பயணிகள் வரும் இரு சக்கர வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். இதுகுறித்து இன்று […]
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை யுபிஎஸ்சி தலைவர் எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான […]
மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் ரயில்வே மேம்பாடு சம்பந்தமாக சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள்ளிட்ட வட […]
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது . இந்த பேரவைக்கு யூ. காதர் உசேன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி நிறைவுறையாற்றினார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ,பேராசிரியர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல். விஜய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் […]
திருப்புல்லாணி வேளாண்மை துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி […]
நல்லிருக்கை கிராமத்தில் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் பேசுகையில் விவசாயிகள் மண் பரிசோதனை […]
கீழக்கரையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய வட்டாட்சியர்.!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டது. முன்னதாக, வட்டாட்சியர் ஜமால் முஹம்மது, தலைமை நில அளவர் வினோத் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்ரமிப்புகளை சரியான முறையில் அளவீடு செய்து, ஆக்ரமிப்பு செய்தவர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு வியாபாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் அகற்ற முன்வராததால் இன்று கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை […]
You must be logged in to post a comment.