மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தம் அளித்த ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ இ பி எப் போன்ற தொகைகளை முறையாக செலுத்தாததாலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அமைதி மற்றும் சமூக பேச்சுவார்த்தைக்கு […]

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு .!திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பாக அஞ்சலி.!!

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் இந்திய பாரத பிரதமர் பொருளாதார மேதை .டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவர்கள் திருஉருவ படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காந்தி, ராஜி, மாரி, சுப்பிரமணி, காமராஜ் நேரு அண்ணாமலை ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து  திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் […]

கோமுகி அணை 46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை, தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை

கோமுகி அணை கடந்த 1967ம் ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை பாசன கால்வாய் மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, டி. கே, தங்கமணி நினைவு நாளையொட்டியும் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஒன்றிய மந்திரியிடம் மனு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்தித்து முறையீடு.. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அளித்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது: சென்னை – தூத்துக்குடிக்கு மானாமதுரை -அபிராமம், பார்த்திபனூர், கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். காரைக்கால் – தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக […]

ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது; கனிமொழி எம்.பி பேட்டி..

ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா..

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அக்காள்மடம் தொடக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை பெட்ரீசியா தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்துரை வழங்கினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாரதி முகமூடி அணிந்து இருந்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் […]

பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

இராமநாதபுரம் :  தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் கண்ணுக்கு புலனாகாதா நுண்ணுயிரிகளை எளிதாக கண்டுபிடிக்கும் நுண்ணோக்கி கண்டுபிடித்த பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை  மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, […]

அறிவியல் புத்தாக்க போட்டியில் பரிசு குவித்த ராமநாதபுரம் மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

இராமநாதபுரம் :  தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் ராமநாதபுரம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ராமகோபால்,  வேல்முருகன், செல்வகணேஷ் ஆகியோர் கேபிள் கிளைடு வே எனும் புதிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடித்து ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வென்றனர். இந்த மாணவர் 3 பேரையும், அரிய கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த சிவசுடலைமணி, பொன் வேல்முருகன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் […]

சுகாதாரத்துறை ஏற்பாட்டில் கொசு ஒழிப்பு பணி : ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்காணிப்பு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனைப்படி புதுவலசை ஊராட்சியில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணி இன்று நடந்தது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, உச்சிப்புள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி ஆகியோர் கண்காணித்தனர். இதே போல் பனைக்குளம் ஊராட்சி வீடுகள் தோறும் […]

மண்டபம் மீனவர் 8 பேருக்கு டிச.20 வரை நீதிமன்ற காவல்: ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் […]

ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு  தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி,  ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]

வேளாண்மைத்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில்தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் உலக மண்வள தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் கலந்து கொண்டு மண்ணைப் பராமரித்தல் , அளவிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல் பற்றிய விவசாயிகளுக்கு விரிவாக விளக்க உரையாற்றினார். மேலும் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் , வேளாண்மை துணை இயக்குனர் அமர்லால் , வேளாண்மை […]

அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]

திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் […]

கீழக்கரை நகர திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் 48ஆவது பிறந்த நாள் விழா..

தமிழ்நாட்டின் துணை முதல்வரின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக நகர செயலாளர் திரு. S.A.H. பஷீர் அஹமது தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அத்துடன், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் […]

இந்தியாவில் யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, முண்டன்துறை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் யானைகள், அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு வந்து விடுகின்றன. இதனால், மனித மோதல் ஏற்படுகிறது.கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் யானைகள் தாக்கி சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல், மனிதர்களால் சுமார் 220 யானைகள் […]

மண்டபம் அருகே வேளாண்மைத் துறையின் கலந்துரையாடல் கூட்டம் 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் […]

மாலங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன்,  மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் […]

மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!

திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக  சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!