இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..!   ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]

திருவாடானை அருகே  புனித லூர்து அன்னை ஆலயம் விழா.!

திருவாடானை அருகே  புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது.  இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன்  குருந்தங்குடி […]

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]

ஆர் எஸ் மங்கலம் அருகே அருள்மிகு பத்திரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஆலய கும்பாபிஷேகம் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி அருகே வ.மஞ்சள்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பைரவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு. புனித குடங்கள் தலையில் சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வந்த  சிவாச்சாரியார்கள் கோவில் கும்பத்தில்  புனித நீரை ஊற்றி மந்திரம் முழங்க சண்டை மேளம் முழங்க […]

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை.! ஓராண்டுக்குள் சேதம் அடைந்ததால் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டது. சேந்தனி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள இந்த தீயணைப்பு நிலையத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்தது.     இதனால், வாகனத்தை அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது.மேலும்,தீ விபத்து போன்ற அவசர காலங்களில் வாகனத்தில் நீர் நிரப்பி சம்பவ […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]

தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!

மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]

மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் .! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!!

மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 , பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியினை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.  இந்த “புதிய விரிவான மினிபேருந்து திட்டம் 2024” அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- 1. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். 2. குறைந்த பட்ச சேவை […]

தஞ்சாவூர் கார்மேல் குழந்தை இயேசு ஆண்டு பெருவிழா மற்றும் தேர் பவனி.!

தஞ்சை மாநகரில் காமேல் சபை குருக்களால் 1987ஆம் ஆண்டு முதல் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு பக்தி ஆரம்பிக்கப்பட்டு. அதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் குழந்தை இயேசுவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்று வருகின்றனர். மகிமைநிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆண்டு பெருவிழா கடந்த வியாழன் அன்று திருக்கொடி யேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 8 நாட்களாக ஒவ்வொரு நாளும் மாலை திருஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, குணமளிக்கும் ஜெபக்கொண்டாட்டம் என சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதி […]

ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . !  மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில்  மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம்  அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.  எனவே  இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]

வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.! 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது.    அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]

வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான […]

லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!

தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம்‌. எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் […]

ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா :சர்வதேச, தேசிய, பல்கலை. போட்டிகளில் வென்ற மாணவியருக்கு டிஐஜி பரிசு வழங்கினார்.!

இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் […]

தஞ்சாவூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்.! 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாநகரம் சார்பில், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.      இதில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி,    மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் இரா.புண்ணியமூர்த்தி,    மக்கள் ஒற்றுமை மேடை ப.சத்தியநாதன்,  […]

கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தஞ்சை ஜோதி அறக்கட்டளை.!

மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் . நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் . முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு […]

ராமேஸ்வரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் சென்ற பயணிகள் இல்லாத ரயில் .!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டி முடித்த செங்குத்து தூக்கு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு 2022 டிச 23 முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மதுரை ரயில் நிலையத்திற்கு கடந்த 2 […]

திருவாடானை வட்டச்சட்ட பணிகள் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி .! நீதி அரசர்கள் பங்கேற்பு .!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது      புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும்,  வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி […]

மேட்டுப்பாளையம்தலைமை அஞ்சல் நிலையத்தில்அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி  தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை ‌வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!