ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் […]
Category: தேசிய செய்திகள்
சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படும் இராமநாதபுரம் நகராட்சி.! எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் கண்டனம்.!!
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]
கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மண்புழு தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் மண்புழு தயாரிக்க உதவும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாறனேரி பஞ்சாயத்தின் கிராம நிர்வாக அலுவலர் அருள் மாணிக்கம் கலந்து கொண்டார் . விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சியை இயற்கை விவசாயி பசுபதி வழங்கினார் . 20 இயற்கை விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு கருத்தரங்கம்.!
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி தேர்வுக்கான கலந்தாய்வு கருத்தரங்கம் பாவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நேர்முக உதவியாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வித்திறன் பற்றியும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு பயிற்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து […]
வேதாளையில் மின்னொளி கைப்பந்து போட்டி.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முத்தப்பா பிரியாணி அணியினர் முதல் பரிசு வென்றது. பரீத் ஓட்டல், ஜே டி காகா அணிகள் 3ம், 4ம் […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் விழா.!
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது. இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன் குருந்தங்குடி […]
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]
ஆர் எஸ் மங்கலம் அருகே அருள்மிகு பத்திரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஆலய கும்பாபிஷேகம் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி அருகே வ.மஞ்சள்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பைரவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு. புனித குடங்கள் தலையில் சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வந்த சிவாச்சாரியார்கள் கோவில் கும்பத்தில் புனித நீரை ஊற்றி மந்திரம் முழங்க சண்டை மேளம் முழங்க […]
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை.! ஓராண்டுக்குள் சேதம் அடைந்ததால் அவதி..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டது. சேந்தனி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள இந்த தீயணைப்பு நிலையத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாகனத்தை அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது.மேலும்,தீ விபத்து போன்ற அவசர காலங்களில் வாகனத்தில் நீர் நிரப்பி சம்பவ […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]
தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]
மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் .! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!!
மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 , பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியினை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த “புதிய விரிவான மினிபேருந்து திட்டம் 2024” அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- 1. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். 2. குறைந்த பட்ச சேவை […]
தஞ்சாவூர் கார்மேல் குழந்தை இயேசு ஆண்டு பெருவிழா மற்றும் தேர் பவனி.!
தஞ்சை மாநகரில் காமேல் சபை குருக்களால் 1987ஆம் ஆண்டு முதல் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு பக்தி ஆரம்பிக்கப்பட்டு. அதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் குழந்தை இயேசுவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்று வருகின்றனர். மகிமைநிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆண்டு பெருவிழா கடந்த வியாழன் அன்று திருக்கொடி யேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 8 நாட்களாக ஒவ்வொரு நாளும் மாலை திருஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, குணமளிக்கும் ஜெபக்கொண்டாட்டம் என சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதி […]