சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை.!

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில் ஆலிம் நகர் புதிய பள்ளி வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சி ஜிபி கமிட்டி சார்பாக அதன் தலைவர் நசீர் மைதீன் தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் ஒற்றுமையோடு வாழ்வதற்கும் நாட்டின் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கு தீர்வு ஏற்றுவதற்கும் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. நோன்பு திறப்பதற்கு உண்டான பழங்கள் பேரிச்சம் பழங்கள் […]

அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் துணைத் தலைவர் அஜ்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் கீழக்கரை நகராட்சியின் 19வது வார்டு உறுப்பினருமான சப்ராஸ் நவாஸ் என்பவரை சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய முத்து வாப்பா கீழக்கரை விசுவாசி போன்ற பெயரில் கள்ளத்தனமாக ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா.!

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் பாதுகாப்பான ஊட்டச்சத்துமிக்க உணவு அனைத்து நுகர்வோருக்குமான அடிப்படை உரிமை கருத்தரங்கு கிரியேட் அமைப்பு சார்பில் நடந்தது. கிரியேட் தலைவர் முனைவர். பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர் மு.செய்யது இப்ராஹீம் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவர் மு. மதுரைவீரன், கிரியேட் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் […]

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு..! ராமநாதபுரம் நகர அஇஅதிமுக சார்பில், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு தனியார் மஹால்களில், அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் மதியம் முதல் மாலை வரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், கழக அம்மா பேரவை இணைச் […]

அதிமுக கழகத்தில் இணைந்த இளைஞர்கள்..!

ராமநாதபுரம் தனியார் மகாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் 137 இளைஞர்கள் தன்னார்வமாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகியும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் […]

கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தேளூர் கிராமத்தில் 52 குடும்பங்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஆறு வருடமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பணம் செலவு செய்து விலை கொடுத்து குடிநீர் வாங்குவதாகவும் அப்படி வாங்கி குடிக்கும் தண்ணீரினால் […]

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா  நம்புதாளை அருகே ‘சம்பை’ கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி ராணி (35) இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை எனவும், தானும் தனது பிள்ளைகளும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாத் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திருவாடானை  தாசில்தார் அலுவலகத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு  அறிவுறுத்தியதாக சொல்லப் படுகிறது. இதனையடுத்து,  இன்று  தாசில்தார் மூலம் தீர்வு […]

ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா .!

 கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் முதல் பிரதிஷ்டை தின விழா ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 13.03.2005ம் தேதி அன்று சபரிமலை தலைமை குருக்கள் மகா ஸ்ரீ கண்டரு ராஜீவரரு அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதே மார்ச் 13ல் பிரதிஷ்டை தின விழா நாளில் காலை கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புடன் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் பஜனை கோஷம் மற்றும் […]

அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுவதால் மாணவர்கள் அச்சம் பள்ளியை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ‘பனையடியேந்தல்’ ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளி கடந்த 03-11-2021 அன்று 1.62 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற முறையில் இந்த கட்டிடப் பணி நடந்துள்ளதால் அவ்வப்போ கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவ மாணவிகள் காயம் அடைந்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் […]

காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா.!

கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும்  கொண்டாடப்பட்டு  வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலுக்கு வருகை […]

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் முகாம்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் பெறுதல் தொடர்பான சிறப்பு முகாம் சங்கர் நகர் பகுதி குடிநீர் மேல்நிலைத் தொட்டி காவலர் குடியிருப்பு  அரையில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் நடைபெறுகிறது இம்முகாமில் புதிய சொத்து வரியை அனிபா பெற்றுக்கொண்டார், நடைபெறும் முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், காயத்ரி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர் மற்றும் மகாராஜா, வருவாய் உதவியாளர் கார்த்திக் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் உடன் […]

புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.!

புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.! தொழுகை விடாமல் இடையூறு செய்வதால் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .!! ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள்  மஸ்ஜிதே நூர் ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்டு  சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் மீனவத் தொழில் செய்து வருகின்றனர்   பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருப்பதால் பெருநாள் தொழுகை தொழுவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் 33 […]

தேவகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுதல், சத்துணவு ஊழியர்களை ஒருமையில் பேசுதல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் – ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு சங்கத்தின் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு : 

பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு : திட்டத்தை கைவிடக் கோரி ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் . பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, கிராமப்புற ஊராட்சிக்கு […]

மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு: கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்திருக்கும் அவருக்கு கூடுதல் வாடகை நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டு..! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று அவர் திடீரென தன்னுடைய குடும்பத்தோடு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து கூறிய அவர், கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை […]

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் சங்குமால் பகுதியை சேர்ந்த பட்டங்கட்டி சமூதாயத்தை சேர்ந்த மீனவ மக்கள் சென்று வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு மாறிவிட்டதால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பைபர் படகில் கச்சத்தீவு திருவிழா செல்வதற்கு தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதிக்க […]

தஞ்சை ஹோட்டலில் பணிபுரிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் கூறிய தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் .!

தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார்.  ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!

  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார்.நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேவிபட்டினம் நகர் தலைவர் சமீரா வரவேற்புரை நிகழ்த்தினார். நஸ்ரின் ஆலீமா தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த தமிழ் மாநில தலைவர் பாத்திமா கனி சிறப்புரை ஆற்றினர். மண்டல தலைவி கதீஜா பிவி கருத்துரை வழங்கினார். இறுதியாக […]

மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் மகளிர் தின விழா .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண் ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது விழாவுக்கு கல்லூரி நிர்வாக இணை அறங்காவலர்  ஞானசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி. தம்பு.  சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினர்களாகவும் விருது பெறுபவர்களாகவும் மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி. சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திரா தாமோதரன். தொழிலதிபர்அகிலா பாஸ்கர். பாடகர் ஸ்ரீநிதா. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!