அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றம்; பரவும் வதந்தி!

திருப்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றப்பட்டது எனவும், அரசு நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகை உள்ளிட்ட கட்டுமானம் அகற்றப்பட்டதை வைத்து வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. வதந்தி : திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை தமிழ்நாடு அரசு இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை 300 ஆண்டுகள் பழமையான குமரன் குன்று என்றும் இந்து முன்னணி […]

🦜 சென்னையில் கிளிகளுக்கான மனிதநேய சரணாலயம் – “Parrot Sudharsan”

சென்னை, சிந்தாதிரிபேட்டை: சரணாலயம் என்பது ஒரு உயிரினம் பாதுகாப்புடன் வாழ தேவையான சூழலை உருவாக்கி வழங்கும் இடமாகப் பொதுவாக கருதப்படுகிறது. அந்த வகையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் வசித்து வரும் சுதர்சன் அவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக தினமும் காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உணவு வழங்கி, பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் ஒரு மனிதநேய சரணாலயத்தை உருவாக்கியுள்ளார். கிளிகள் அதிகளவில் இங்கு வந்து செல்லுவதால், பொதுமக்களால் அவர் “Parrot Sudharsan” என்ற அன்புப்பெயரால் அழைக்கப்படுகிறார். […]

இளைய சமுதாயமே…அறிவியலோடு அரசியல் அறிவும் அவசியம்..

முன்னுரை: முன்னேற்றத்தின் அடித்தளம் எது? 21-ஆம் நூற்றாண்டு அறிவியல் யுகம். செயற்கை நுண்ணறிவு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை மனித சமூகம் இதுவரை கண்டிராத வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த முன்னேற்றத்தின் முன்நிலையில் இளைய தலைமுறை இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. உலகின் முன்னணி நிறுவனங்களிலும், ஆய்வு மையங்களிலும், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி துறைகளிலும் தமிழர்கள் உயர்ந்த இடங்களை அடைந்து வருவது பெருமை கொள்ளத்தக்க உண்மை. ஆனால் இந்த முன்னேற்றத்தை நிலைநிறுத்தும் அடித்தளம் எது? அறிவியலா? […]

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்கள் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இந்நிலையில், 05.01.2026 அன்று […]

ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு –தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய விவகாரத்தில் 23 ஆண்டுகளாக நீடித்த குழப்பத்திற்கும், நீண்ட போராட்டத்திற்கும் தீர்வு காணும் விதமாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) மிகவும் வரவேற்கத்தக்கது. ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி 23 […]

கனிம வள வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்..

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் கனிம வள வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருவதாக தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் செய்திக் குறிப்பில், புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கனரக […]

தென்காசியில் வேலைவாய்ப்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Audiometric Assistant பணியிடத்தில் தற்காலிக பணியாளர் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட  உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். Audiometric Assistant – : One year Audiologist Diplomo Course. மேற்கண்ட பணி இடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   பூர்த்தி […]

பொது மக்களை அச்சுறுத்தும் பைக் “வீலிங்” செய்தால் சட்ட நடவடிக்கை..

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.   இது பற்றிய செய்திக்குறிப்பு: 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை […]

உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நதிகள் அறக்கட்டளை மற்றும் JETLEE BOOK OF WORLD RECORD இணைந்து மாபெரும் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 40 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹரா நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்புத் தீவிர திருத்தம்-2026 இன் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று […]

டீ கிளாசை திருடி சென்றார்; யூடிபர் மீது டீ கடையின் உரிமையாளர் புகார்..

டீ கிளாசை திருடி அதனை இன்ஸ்டாகிராம் வீடியோவாக பதிவிட்ட பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி டீக்கடையில் யூடியூப்பர் ரவுடி பேபி, சூர்யா மற்றும் சோசியல் மீடியா நிறுவனர் சிக்கந்தர் மீது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெல்லை கருப்பட்டி டீக்கடை உரிமையாளர் பார்த்திபன் புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த வாரத்தில் […]

மது கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை; மஜக சார்பில் வலியுறுத்தல்..

நெல்லை மாவட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மஜக மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், பாளையங்கோட்டை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடை அணிந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தக்கூடிய காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது, இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை […]

இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக் கோரி தென்காசியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறை படுத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண் […]

தென்காசியில் ஜாக்டோ ஜியோ போராட்டம்..

தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி மாநில உயர் மட்டக்குழு முடிவின் அடிப் படையில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் உண்ணாவிரத போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. […]

SIR – விரிவான விளக்க கூட்டம்..

இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டிச.12 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் […]

SIR-வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்..

முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.   1. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை (SROs) நியமித்துள்ளது.   2. சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் (SRO) ஏற்கனவே தங்கள் […]

வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025 ஆம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03.00 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு […]

நல்லிணக்க விருதுடன் 1 கோடி பரிசு பெற்ற ஊராட்சிகள்..

தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ. 1 கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடை பிடித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலை தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை மாவட்ட […]

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்..

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக் காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தின் வெப்ப நிலையானது இயல்பை விட 5°© வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©- 20°© வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை […]

திமுக சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஆவுடையானூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!