இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் SDPI கட்சி அமோக வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நடைபெற்ற மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி அதிக வாக்குகளுடன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி  வெற்றியை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான ADMK, DMK, CONGRESS, MMK மற்றும் பல கட்சிகள், இயக்கங்கள் ஆதரவுடன் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் SDPI கட்சி கம்யுனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு அனைத்து வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வெற்றி வாகை சூடியுள்ளது. ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள் என்ற மொத்தம் 7 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் […]

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்- பரபரப்பு..

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கார்த்தி, விக்கி ஆகியோர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் 16.10. 2018ல் ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு டிஐஜி அலுவலகம் பகுதியில் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை (16.10.2020) வருவதையொட்டி பழிக்குப் பழி வாங்க வாலாந்தரவையில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் வெடிகுண்டு […]

காஞ்சிரங்குடி ஊராட்சியில் கிணறு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது ……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி கோகுல்நகர் கிராமத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று 14.10.2020 கிணறு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டன. இதில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் S.புல்லாணி மற்றும் துணை சேர்மன் சிவலிங்கம் தலைமையில், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி ஊராட்சி மன்ற துணை தலைவர் Y.பரிக்கா திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலர் K.ஆதித்தன் காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் R.கோவிந்தமூர்த்தி,  4வது வார்டு உறுப்பினர் K.சிவகாமி மற்றும் கோகுல்நகர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. கீழை […]

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு பேட்டி…

இன்று (14/10/2020) மதுரையில் நடைபெற்று வரும் குற்றம் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்தார். மதுரை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மதுரை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்த […]

கீழக்கரையில் பலத்த காற்று… மரம் சாய்வு..

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை மெயின் ரோடு VAO அலுவலகத்தில் உள்ள் மரம் பலத்த காற்று வீசியதால் அலுவலக மேலேயுள்ள ஓட்டின் மேல் விழுந்தது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை உடனடியாக. கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா உத்தரவின் பேரில் ஏர்வாடி தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். கீழை நியூஸ் SKV. முகம்மது சுஐபு

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை எரிக்க முயற்சித்த குடும்பத்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பைக்கரா முத்துராமலிங்கபுரம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் ராஜேஸ் (வயது 35) இன்று காலை 11 மணி அளவில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரது உடலை போலீஸிற்கு தெரியாமல் குடும்பத்தார் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாருக்கு  வந்த தகவலையடுத்து. சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான போலீஸார் மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் சாலை பசுமலை சுடுகாட்டுக்குச் செல்லும் […]

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதியை பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி கொந்தகை மணலூர் அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இந்த இடங்களை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். நீதிபதி தொல்லியல் துறையிலும் மற்றும் தமிழர்களின் வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் மிக்கவர். அவர் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் பகுதியில் நடைபெறும் அகழாய்வை பார்வையிட்டார். கொந்தகையில் நடந்த ஆய்வின் போது கிடைத்த எலும்புக்கூடுகள் மற்றும் முதுமக்கள் […]

மனைவியை முகநூல் மற்றும் வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த கணவன் கைது…

மதுரை மாவட்டம் சோழவந்தாணை சேர்ந்த லதா 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது இவருக்கும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மகன் ராஜமுருகன் 30 என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது. இவர்களுக்கு திருமணம் நடந்ததில் இருந்து லதாவை ராஜமுருகன் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்த 2019ஆம் ஆண்டு ராஜமுருகன் மீது வரதட்சணை மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜாமுருகன் லதாவை ஆபாசமாக சித்தரித்து முகநூல் மற்றும் […]

காஞ்சிரங்குடி ஊராட்சியில் அரசு சார்பாக இலவச கொசு வலை வழங்கல்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சியில் அரசு இலவச கொசு வலை ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதிY.பரிக்கா தலைமையில் திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலர் K.ஆதித்தன் மற்றும் காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் R.கோவிந்தமூர்த்தி திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சிவகலாராணி சிவசுப்பிரமணியன் வட்டார சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் செய்யது ராசிக்தீன் முன்னிலையில் இலவச கொசு வலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 1வது வார்டு உறுப்பினர்  P.முருகேஸ்வரி, 2வது வார்டு உறுப்பினர் […]

திருப்பரங்குன்றம் அருகே துவரிமான் பகுதியில் கள்ள காதல் தொடர்பாக வழக்கறிஞர் கொலை..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலைபுதுக்கோட்டை அருகிலுள்ள துவரிமான் இரட்டை வாய்க்கால் பகுதியில் நேற்று (09/10/2020) இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த அருணா ராஜேந்திரன் மகன் சாக்ரடீஸ் (எ) தேவா என்றும் மானாமதுரை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து […]

மதுரை பாண்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டிச்சாமி கோவில் முன்பு துணை பூசாரி கொடுரமாக வெட்டிக் கொலை..

மதுரையில் மிகவும் பிரபலமான கோவிலாக பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவிலில் துணை பூசாரியாக மதுரையை அடுத்த ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா என்பவர் இருந்து வந்துள்ளார். இவர் நேற்று (10/10/2020) மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்தபோது  வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு […]

கீழக்கரையில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம் மற்றும் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க வீரகுல தமிழ்படை இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்..

இன்று (10/10/2020) வீரகுல தமிழர் படை இயக்கத்தின் கீழக்கரை நகர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகரில் போதை பழக்கங்கங்களும், சட்டவிரோத மது விற்பனையும் அதிகரித்து வருகிறது. நகரின் பேருந்து நிலையம், கீழக்கரை மார்க்கெட், போன்ற பகுதிகளில் சர்வ சாதாரணமாக சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் பெண்களும் பொதுமக்களும் அப்பகுதியை கடந்துசெல்ல அச்சப்படுகின்றனர் எனவே சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைகளை தடுத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றபட்டது. மேலும் நகரில் சுகாதார சீர்கேடு […]

மழை கால நோய்களை எதிர் கொள்ளும் விதமாக கீழக்கரையில் அரசு சார்பில் இலவச கொசுவலை வழங்கல்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக அரசின் இலவச கொசு வலை வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக  1வது வார்டில் 250 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  நகராட்சி ஆனையாளர் தனலெட்சுமி, சுகாதாரதுறை ஆய்வாளர் பூபதி,  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கே.ஆர்.சுரேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. ஆனால் பாதுகாப்பு “ஸ்மார்ட்” ஆக இல்லை.. தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த பெண்…

மதுரை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு, முறையான பாதுகாப்பு அடையாளங்கள் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திட்ட பணிகள் உரிய பாதுகாப்பு வசதி எதுவும் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள். இந்த நிலையில் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் பெண் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு […]

கீழக்கரை பகுதியில் தொடரும் மின் தடை புரளி….

கீழக்கரை நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மின் தடை ஏற்படும் என சில வாட்ஸ் அப் தளங்களிலும், சிலர் தன்னுடைய மொபைலில் ஸ்டேடஸ்டாக வைத்தும் இருந்தனர்.இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வந்தனர். இது சம்பந்தமாக கீழக்கரை மின்சார வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், “தயவுசெய்து கீழக்கரை மின்சார வாரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி பொதுமக்கள் மின் தடை செய்தியை நம்ப வேண்டாம் என்றார். இப்படி சிலர் […]

கீழக்கரை ECR வண்ணாந்துறை வளைவு பகுதிகளில் தொடரும் விபத்து…

கீழக்கரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரையை நோக்கி வந்தபோது கீழக்கரை ECR சாலை வண்ணாந்துறை வளைவு அருகில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதியதில்,  காலில் பலத்த காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

கீழக்கரை தாலுகா நாயிப்(துணை)காஜியாக மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் தேர்வு!

கீழக்கரை தாலுகா நாயிப்(துணை)காஜியாக மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் மௌலவி,M.சாகுல் ஹமீது ஆலிம் பாக்கவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனம் மாவட்ட அரசு காஜி மௌலவி,V.V.A. சலாஹுத்தீன் ஹழ்ரத் வெளியிட்டுள்ளார். .

பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலை… தமிழக அரசுக்கு எதிராக முடிதிருத்த கடைகள் அடைப்பு போராட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சார கம்பியினால் மூக்கில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்து கீழக்கரையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் இன்று 9.10.2020 முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

செயலிழந்த நிலையில் 108 எண்…. மாற்று ஏற்பாடு செய்யப்படுமா??.. தொடரும் விபத்தில் தத்தளிக்கும் மதுரை நகர்..

மதுரை மாநகர் மற்றும்  பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலை வா உ சி பாலம் அருகே தினசரி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் பல விபத்துக்களுளடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.  போக்குவரத்து காவலர்கள்  நியமிக்கப்பட்டாலும், வேகமாக செல்லும் ஷேர் ஆட்டோக்களில் தொல்லை அதிகம் இருப்பதால் பைபாஸ் சாலை மற்றும் அதன் சுற்றுபகுதியில் நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று (08/10/2020) மாலை மதுரை பைபாஸ் சாலையில் காளவாசலில் இருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த […]

கீழக்கரை அருகே மாயாகுளத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திருப்புல்ணானி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இன்று 6.10.2020 அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் திருப்புல்லானி ஒன்றிய வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன், ஊராட்சி தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாயாகுளம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு செவிலியர்கள் தங்கி பணியாற்றுவார்கள். அவசர காலங்களில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மொத்தம் 30 லட்ச ரூபாய் செலவில் அதில் ரூ.25 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!