மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கீழரத வீதியை சேர்ந்த பட்டதாரியான மகாலட்சுமி (வயது 23) என்பவர், அதே தெருவில் வசித்து வரும் கொத்தனாரான நாகராஜ் என்பவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்தநிலையில் இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த பெண்ணை, மாப்பிள்ளை வீட்டார் ஏற்க மறுத்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து […]
Category: கீழக்கரை செய்திகள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை பகுதியில் வசித்து வரும் குமார் மற்றும் தமிழரசி தம்பதியினர் டீக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தம்பத்தினரின் மகள் 10 வயது சிறுமி நேற்று மாலை 7 மணியளவில் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றிந்த நிலையில், கடையின் அருகில் நின்று கொண்டிருந்த ஓம்சக்தி நகரை சேர்ந்த முத்துராஜ்(29) என்பவன் சிறுமியை நோட்டமிட்டு நைசாக பேச்சு கொடுப்பது போன்று மறைவான சந்துக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் செய்துள்ளான். உடனே அவனிடமிருந்து சாதூரியமாக […]
அழகன்குளம் கோயில் கல்தொட்டியில் பழமையான கல்வெட்டு…
இராமநாதபுரம் அருகே அழகன்குளம், வைகை நதியின் முகத்துவாரத்தில் அமைந்த ஒரு இயற்கை துறைமுகம். இவ்வூர் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே, உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. இந்நிலையில் இவ்வூர் கோயிலுள்ள கல்தொட்டியில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அழகன்குளம் கடற்கரை ஓரம் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சத்திரத்துக்கு செல்லும் வழியில் அழகிய நாச்சி அம்மன் கோயில் கிணற்றடியில் உள்ள கல்தொட்டியில் எழுத்துகள் இருப்பதாக அழகன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அசோகன் தகவல் […]
பசும்பொன் தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை வழிமுறைகள்… இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல்..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113 வது பிறந்த நாள் விழா மற்றும் 58 வது குரு பூஜை நிகழ்ச்சிகளின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுரைகளின்படி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, இந்நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களை அனைவரும் […]
இராமநாதபுரத்தில் கொரானோ பாதிப்பிற்கு முதியவர் இருவர் பலி..
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்று (20.10.2020) 12 பேர் உள்பட 5 ஆயிரத்து 900 பேரை இதுவரை பாதித்துள்ளது. இன்று (20/10/2020) 21 பேர் உள்பட 5 ஆயிரத்து 606 பேர் இது வரை குணமாகி வீடு திரும்பி விட்டனர். கொரோனா தொற்று பாதித்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகினர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.167 […]
தவறிய ஆவணங்களை ஒப்படைத்த கணவன், மனைவிக்கு கவுரவம்..
இராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் டாக்டர் வள்ளி பிரியா. பாரதி நகரில் கிளினிக் நடத்தி வரும் இவர் நேற்று (19.10.2020) இரவு தனது கிளினிக்கை முடித்து வீட்டுக்கு கிளம்பினார். அப்போது, தனது மகள் ப்ரீதா வைஷ்ணவியின் பள்ளி சான்றிதகள், வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பைலை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்த வாசுகி, தனது கணவர் […]
கள்ளக்காதல் விவகாரம்.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் முத்தழகு, 20. இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை முத்தழகு காதலித்தார் இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணுக்கும், முத்தழகுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அப்பெண்ணின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன் முத்தழகை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் […]
திருவாடானை சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேர தீவிர விசாரணயில், கணக்கில் வராத ரொக்கம் ரூ.13,595 பறிமுதல் செய்து சார்பதிவாளர் மாலதி, உதவியாளர் ராஜகண்ணன், இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் சார்பாக நகராட்சி ஆணையர் மற்றும் மின் நிலைய உதவி பொறியாளரிடம் மனு..
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் சார்பாக இரண்டு கோரிக்கை மனு கீழக்கரை நகராட்சி பொறியாளர் மற்றும் கீழக்கரை மின் நிலைய உதவி பொறியாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. கீழக்கரை நகராட்சி பொறியாளரிடம், வடக்குத்தெரு மணல்மேட்டிற்கு அருகில் உள்ள சங்குமால் சாலையில் புதிய சாலை அமைக்கவும், வடக்குத்தெரு C.S.I தேவாலயம் முதல் யூசுப் சுலைஹா மருத்துவமணை வரை உள்ள சாலையில் சில வாரங்களுக்கு முன் கழிவுநீர் செல்வதற்கான குழி தோண்டப்பட்டு அந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக […]
பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி?- மதுரை மாணவி விளக்கம்..
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை ஆனையூரை சேர்ந்த உய்யஸ்ரீநிலா என்ற மாணவி 666 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் நீட் தேர்வுக்காக எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி உய்யஸ்ரீநிலா கூறியதாவது:- நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்த வருடம் பிளஸ்-2 முடித்தேன். தமிழ்நாடு, பாண்டிசேரி அளவிலான கேந்திர […]
மஜ்ம உல் ஹைராத்திய தர்ம அறக்கட்டளை சார்பாக கைபந்து போட்டியில் பரிசு பெற்ற அணி மற்றும் கீழக்கரை தாலுகா உதவி காதியார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு..
கீழக்கரை தாலுக்கா உதவி காதியாக P. S. M. சாகுல் ஹமீது பாக்கவி நியமனம் செய்யப்பட்டுள்ளதை கவுரவிக்கும் வண்ணம் அவரை பாராட்டி மஜ்ம உல் ஹைராத்திய தர்ம அறக்கட்டளை சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பிரபுக்கள் தெரு இளைஞர்கள் கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவர் உமர் மற்றும் மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரயில் இன்ஜின் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி அடையாளம் காணும் பணியில் ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை..
மதுரை மாவட்டம் கரிசல்குளம் பாத்திமா கல்லூரி இடையிலான ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்பொழுது திண்டுக்கல்லில் இருந்து ரயில் இன்ஜின் ஒன்று முதியவர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை ரயில்வே காவல் துறைக்கு கொடுத்த தகவலடிப்படையில் ச இருப்புப்பாதை காவல் துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அவர் […]
இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விதிமுறை மீறியோர் கைது…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11.9.2020-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கொரோனா பெருந்தொற்று நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மக்கள் கூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் விதித்த வழிகாட்டுதலின் படியும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 குவிமுச பிரகாரம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. இமானுவேல் […]
கீழக்கரைக்கு வருகை புரிந்த SDPI மாநில தலைவர்… உற்சாக வரவேற்புடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் 16-10-2020 அன்று வருகை புரிந்தார். அவர் வருகையை தொடர்ந்து நகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். அதை தொடர்ந்து உசைனியா திருமண மஹாலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவரின் தலைமை உரையுடன், மாநில நிர்வாகிகளும் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் உறுப்பினராக சேர்க்கும் முகாம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில், இராமநாதபுரம் தொகுதி துணைத் தலைவர் நூருல் […]
“தமிழ் இனி மெல்ல சாகும்..?”..இராமநாதபுரம் – கீழக்கரை தோட்டகலை பூங்காவில் தமிழ் இல்லாத பதாகை…
கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்புல்லாணி அருகே மாவட்ட தோட்டக்கலை பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. இதில் இதன் நுழைவாயில் பதாகை முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கவனக்குறைவா? அல்லது மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே செய்கிறதா? அதில் என்ன வாசகம் எழுதியுள்ளது என்று தெரியாமல் சாமானியர்கள் கடந்து செல்கிறார்கள். குறைந்தபட்சம் ஆங்கிலத்தை சிறிதாக போட்டு ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் போட்டிருக்கலாம். ஆனால் தமிழே இல்லாமல் முழுமைக்கும் ஆங்கிலத்தில் போடப்பட்டுள்ளது திட்டமிட்ட தமிழ் […]
கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்க அரசுக்கு இலவசமாக மணை வழங்கப்பட்டது…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா முஸ்லிம் சங்கத்திற்கு பத்தியமான கீழக்கரை மையப் பகுதியில் அமைந்துள்ள மேலத் தெரு சதக்கத்துல்லா அப்பா வளாகம் என்ற இடத்தில் உள்ள 20 செண்டு இடத்தை காவிரி கூட்டுக் குடிநீர் சேமிக்கும் உயர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக அரசுக்கு இலவசமாகக் வழங்கப்பட்டது. அந்த இடத்தின் பத்திரத்தை இன்று 16.10.2020 கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கம் தலைவர் S.M.யூசுப்சாஹிபு, உபதலைவர். H.Sமுஜிப்ரஹ்மான், செயலாளர். N.D.S.சதக்அன்சாரி, ஹாமீது இப்ராகிம் தாளாளர் ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ […]
அழகிய தமிழ்ப் பெயர்களுடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சாயல்குடியில் கண்டுபிடிப்பு..
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, ரா.கோகிலா, து.மனோஜ் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீந்தார் அரண்மனை எதிரில் பழமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் […]
மதுரை ஆரப்பாளையம் அருகே நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் சிமெண்டு கலவை இயந்திர லாரியுடன் 2 பேர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து : ஒருவர் பலி..
மதுரை, திண்டுக்கல் மெயின் ரோடு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்று பாலம் பகுதியில் கீழ்ப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு சாலைகள் அமைப்பதற்கும் காங்கிரீட் கலவை எந்திரத்துடன் கூடிய லாரிமூலம் கலவை கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (16/10/2020) மாலை 5.45 மணி […]
மருதநாயகம் (எனும்) கான்சாஹிப் தியாகத்தை நினைவு கூறுவோம்.. மதுரையில SDPI கட்சி ஏற்பாடு..
சுதந்திர போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த ராஜதந்திரி ராணுவமேதை கான் சாஹிப் எனும் மருதநாயகம். உழைப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் அரசின் அபிமானக் குழந்தைகள் என்றுரைத்தவர் கான் சாஹிப் பற்றிய நினைவு கருத்தரங்கம் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் அக்டோபர் 16 மாலை மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாயில் […]
மதுரை மண்ணின் மைந்தர்கள் சார்பாக முன்னாள் ஜனாதிபதி APJ பிறந்த நாள் விழா..
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் 89 பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குழந்தைகளுக்கு துணிப்பை, விதைப்பென்சில்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை தங்களின் மேலான பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் காெள்கிறேன்.
You must be logged in to post a comment.